Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

இணைய இதழ் அறிமுகம்-6
வார்ப்பு.காம்

சகலகலா வல்லவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவே அனைத்து படைப்பாளிகளும், ஏன் சராசரிகளும் கூட விரும்புகின்றனர். ஒரு கலையை முழுமையாகக் கற்றுக் கொண்டு அந்தக் கலையில் செய்வதற்கரிய சாதனையைச் செய்பவர்கள் மிகக் குறைவே. ஒரே இடத்தில் பல்சுவைகளை வைத்தால்தான் வாடிக்கையாளர்களை / வாசகர்களை கவர முடியுமென்பது விதியாக்கப்பட்டு விட்டது.

கதைகளுக்காக, கட்டுரைகளுக்காக, கவிதைகளுக்காக என தனித்து இதழ்கள் வருவது மிகக் குறைவே. இதில் சிறப்பிதழ்கள் விதிவிலக்கு. இந்த நிலையில் கவிதை மற்றும் கவிதை தொடர்பானவைகளுக்கு இயங்கி வரும் மின்னிதழ்தான் வார்ப்பு. காம்.

கவிதைக்கான இணைய இதழ் என்ற முத்திரையுடன் ‘வார்ப்பு’ இணையதளம் இயங்குகிறது. துவக்க காலத்தில் மாதமொருமுறை புதிய படைப்புகள் ஏற்றப்பட்டு வந்தன. அவ்வப்போது வருத்தங்களை தெரிவித்துக் கொண்டு ஒரிரு மாதங்களுக்குப் பின்னர் புதிய படைப்புகள் ஏற்றப்பட்டு வந்தன. ஆனால் தற்போது ‘வார இதழாக’ தடையின்றி வந்து கொண்டிருக்கிறது. இந்ததளத்தின் நிர்வாகிகளுக்கு பாராட்டுகள்.

"எளிமையே பேரழகு' என்னும் பதத்துக்கு உதாரணம் வார்ப்பு தளம்தான். சிரமம் இல்லாத இணைப்புகளாலும் புத்துணர்ச்சியூட்டும் வண்ணங்களாலும் வலைப்பக்கம் அலங்கரிக்கப் பட்டுள்ளது. கவிதைகளுக்கும் படைப்புகளுக்கும் பொருத்தமான புகைப்படங்களை தேடிப்பிடித்து இணைத்து படைப்புகளை அழகுபடுத்தும் பணி பெரிதும் பாராட்டத்தக்கது. இதுவரை 199 கவிஞர்களை அறிமுகப் படுத்தியுள்ளது. மொத்தம் 769 கவிதைகளை வெளியிட்டுள்ளது.

கவிதைகள் பகுதியில் பற்பல கவிஞர்களின் கவிதைகளை தலைப்பு / முதல் வரி மற்றும் கவிஞர் பெயர் கொண்டு வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இதன் மேல் சொடுக்குகையில் கவிதைப் பக்கம் விரிகிறது. கவிஞர்கள் பகுதியில் கவிஞர்களின் பெயர்கள் வரிசைப் படுத்தி வைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் வார்ப்பில் வெளியான ஒரு குறிப்பிட்ட கவிஞரின் படைப்புகள் முழுவதையும் வாசிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

விமர்சனங்கள் பகுதி வார்ப்பு தளத்துக்கு அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் வாசகர்களுக்கு வளம் சேர்க்கும் பகுதியாகும். கவிஞர்கள் பலரின் புத்தகங்களுக்கு பொருத்தமான மதிப்புரைகளும் திருப்திகரமான விமர்சனங்களும் வேறு பல புத்தகங்களின் அட்டைகள் வருடப் பட்டு இணைக்கப்பட்டிருப்பது அழகிலும் அழகு.

கவிக்கோ அப்துல் ரகுமான் மற்றும் கவிஞர் மீரா ஆகிய இருவரது நேர்காணல்கள் மட்டுமே நேர்காணல்கள் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பட்டியல் நீளாததற்கு காரணம் என்னவோ? இந்தப் பட்டியலை நீட்ட வாசகர்கள் உதவலாம்.

"படமும்... வரிகளும்' பகுதியில் படத்திற்கேற்ப வாசகம் எழுதும் வாசகர்கள்/கவிஞர்களின் பங்கீட்டை எதிர்பார்த்து உள்ளது. இணைய தளத்தில் கவிதை / இலக்கியத்திற்கான வலைப்பூக்கள் மற்றும் இணையதளங்களை இணைய முகவரியுடன் தெரிவிக்க ‘சரம்’ என்ற பகுதி காத்திருக்கிறது. இதனால் பிற தளங்களுக்கு இலவசமாக இணைப்பு கொடுக்கப்படும் சேவையும் உண்டு. நிகழ்வுகள் பகுதி தலைப்பிற்கேற்ப பதிவுகளைக் கொண்டுள்ளது.

கவிதைகளில் இருக்கும் ஒருவித வசீகரிப்பு கவிதை இதழுக்கும் இருக்குமோ என்னவோ, வார்ப்பு தளத்தில் அவ்வாறு ஒன்றை உணர முடிகிறது. வாழ்த்த வாருங்கள்; கவிதை வார்க்க வாருங்கள்.

இணையம் : www.varppu.com

மின்னஞ்சல் : [email protected]


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com