ந.பெரியசாமியின் இரண்டு கவிதைகள்
1.சமரசம்
திறந்த புத்தகங்களில்
பொதிந்து கிடக்கும் வாழ்வினோடு
நிகழும் தர்க்கங்களுக் கேற்ப
உயிர்ப்போடும் உயிர்ப்பற்றும்
உருமாறி உருமாறி
முறுக்கப்பட்ட சுழற்சியின்
எண்ணிக்கை சுருங்க
பிணமாகும் பொம்மைகளோடு
இணக்கமாகிறதென் இருப்பு.
2.மெய்வருத்தம்
வெப்பம் வேண்டித் தவிக்கும்
அதிகாலை மலரின் ஆவலில்
சுண்டக் காய்ச்சிய முத்தமிட்டு
வலிவடிய உரையாட நினைப்பதுண்டு
உன் ஆசையும் எதிர்ப்பார்ப்பும்
இதுவாகத்தான் இருக்கக் கூடும்
என்ன செய்ய
கண்ணசந்து விடுகிறேன்
உன்னில் கரைந்த
மிகு இன்பத்தின் அயர்ச்சியில்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|