Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Ani
Ani Logo

மாதங்கியின் மூன்று கவிதைகள்

தொடரும் புன்னகை

விருந்தினர்
தலை மறைந்த பின்பும்
வழியனுப்ப வந்த குழந்தை
வாயிலில் நின்று
புன்னகைத்துக் கொண்டிருந்தது

போதும் சிரித்தது
அவர்கள் போய்விட்டார்கள்
இவர்கள் எங்கே
என்று கேட்டது

அச்சடிக்கப்பட்ட சொற்கள்

மெல்ல ஆடத் துவங்கி
ஒவ்வொன்றாக
கீழே விழுந்தன
அவித்தவை
பொறித்தவை,
வதங்கியவை
வெதுப்பியவை
என குழுக்களாய்ப் பிரிந்து
பயணம் செய்தன.

பாதி வழியில்
தட்பவெப்பத்தால்
அழுகிப் போயின

சமைக்காத சொற்கள்
இன்னும் உயிரோடு இருக்கின்றன
இயற்கை வர்ணம் பூண்டு
குழந்தைகளின் சொற்களைப் போல்

தீவு விரைவுச் சாலையில்

வண்டிகள்
வழுக்கிக்கொண்டு
செல்லும்
இந்த தீவு விரைவுச்சாலை நெடுகிலும்
சிந்தியிருப்பவை
உதிரா இலைகளைக் கொண்ட
சாலையோர மரங்களின்
நிழல்கள் மட்டும்

மாதங்கி
சிங்கப்பூர்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.