குளிர்ந்த அம்புலி மாலதி
கூர்முனை கத்திகள்
வழியெங்கும் விழித்திருக்க
பாதச் சுவடுகள் பதிக்கத்
தயக்கத்தின் கேள்விகள்
ஆயிரம் நாவோடு
திசைமாறும் பயணத்தில்
வாழ்க்கைப் பள்ளம்
அதல பாதாளமாய்.....
அந்தரத்தில் சுழல்கிறது
உண்மை பூகோளம்
இருளினை நீக்கும் முயற்சியில்
துடித்துக் கொண்டிருக்கிறது
விண்மீன்கள்
பொய்மை நிறைந்த வால் நட்சத்திரம்
எரிகொள்ளியாய் விழுகிறது
வாழ்க்கைப் பாதையில்
தனித்திருக்கும் அன்பிறகு
இரவு பகல் தெரியவில்லை
குளிர்ந்து
விழித்திருக்கும் அம்புலி
எப்போதும் சுற்றுவது
உண்மை பூகோளத்தை மட்டுமே
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|