வண்ணத்துப் பூச்சியின் குற்றம் - பொ. செந்திலரசு
இரவின் கரையோரம்
அறையொளிரும்
குழல் விளக்கை முத்தமிட்டு
ஒளி நதியில் தன் வர்ணங்கள் கரைய
நீராடுகிறாள் வண்ணத்துப் பூச்சி ஒருத்தி
தேவ ராஜ்யத்தை
அழுக்காக்கிய குற்றத்துக்காக
மெய் பொய்கள் ஊசலாடும்
விசாரணை முடிவில்
பகலின் விளிம்பில்
அவளைக் கழுவிலேற்றி
இறகுச் சிலுவையை
எறும்புகள் சுமக்கத் தீர்ப்பெழுதி
பிலாத்துவின் கை கழுவலோடு
நழுவிகிறான் கடவுள்
கருணை மிகுந்து
இயல்பாய் புலருகிறது பொழுத
மரண அவஸ்தை ஏதுமின்றி.
பிலாத்து ரோம் பேரரசின் ‘யுதேயா' பகுதி ஆளுநர். மக்களின் நிர்பந்தத்துக்கு பணிந்து இயேசுவை சிலுவையில் அறைய ஆணை பிறப்பித்தவர்.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|