ஹைபுன் நிலா கிருஷ்ணமூர்த்தி
டண்... டண்.. தொடர்ந்து ஒலிக்கும் பள்ளி இறுதி மணி முற்றும் பெறாத எழுத்துக்களோடு கரும்பலகை... தன் முடியை அணிந்து கொள்ளும் சிகப்பு மை பேனா
தொடரும் என அறிவிப்போடு மூடும் புத்தகம்... புத்தகங்களை பையில் திணிக்கும் குழந்தைகளின் அவசரம். வெளிக்கிளம்பும் பொழுதில் தேடுதல் வேட்டை... பயம் கலந்த ஏமாற்றம் கலந்த பயபடபடப்பு
மூங்கில் கூடையில் மிட்டாய்களோடு கிழவி.... முகத்தில் முழு நிலவு பிரகாசம்...
மெதுவாய் போங்க மேஜையில் பிரம்பு அதிர ஆசிரியர் முன்பு மோதி வெளியே ஓடும மாணவக் கூட்டம்...
உயிர் பெறும் சிறகுகள் விரிய உற்சாக ஒட்டம் பசிக்களைப்பு மறந்த சந்தோஷம்.
விளையாட்டு நேரங்களை
விழுங்கியே விடுகின்ற
வீட்டுப்பாடங்கள் .......
மெல்ல நகர்வதாய் கொள்ளும் கடிகார முட்கள். நிமிஷங்களும் யுகங்களாய் நகரும். அவசர அவசரமாய் மறையும் மேற்குச் சூரியன் பறவைக் கூட்டம் கூடுகள் நோக்கி
நொடிக் கொருதரம் நிமிர்ந்து ஏமாந்து போகும் மனசு. சோகம் தாங்கிய விழிகள். அலையசைக்கும் கடல் ஈரமணற் பரப்பு
கடந்து போகும் காலடிகளில் தேடுதல் வேட்டை முடியாக் காரணங்களால் பிரிந்து போட்டு விளையாடும் விடலைக் காற்று.
உடைந்த படகுகள் முதுகு சாய்ந்த காதலர்கள் உதடுகளில் மௌன உச்சரிப்புக்கள்..
ஏக்கமாய் ஏறிடும் கண்கள்.... புள்ளியாய் தோன்றி வரும் காதலி விண்ணில் முளைந்த நட்சத்திரங்கள் முகத்திலும்...
நிலவின் வருகை... நட்சத்திர புன்னகை தொடர்கிறது சந்தோஷ அலை...
வந்துவிட்ட காதலி
அவசர ஓட்டம்
கடிகார முட்கள்...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|