Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
செப்டம்பர் 2007

ஆரிய வெறியன் தேசபக்தனா?

இளவேனில்

படித்துவிட்டு உங்கள் சிநேகிதர்களிடம் கொடுங்கள் அபிநவ பாரத சமாஜத்தில் சேர்ந்து கொள்ளப் பிரமாணம்

ஆங்கில சத்துரு நமது நாட்டில் பிரவேசித்து நமது சொத்துக்களையும் மானத்தையும் சென்ற நூறு வருஷ காலமாக இடைவிடாது உறிஞ்சிக் கொண்டு செல்கிறான். இவனுடன் போர் செய்து இவனை விரட்டிவிட்டு நமது நாட்டில் சுவதந்திரத்தையும் தர்மத்தையும் நிலைநாட்ட வேண்டு மென்று ஒரு பெரிய ஆவேசம் நமது தேசத்தில் கிளம்பியிருக்கிறது.

இந்த ஆவேசத்தை அடக்கிவிட சத்துரு அநேக ஏற்பாடுகள் செய்திருக்கிறான். ஆனால் ‘நந்தநா நந்த யோர் மத்யே சுவேத ராஜ்யம் விநச்யதி’ என்று வேதவியா சர் சொல்லியிருக்கிறபடி, பறங்கி இந்த நாட்டிலிருந்து வருகிற ஆநந்த வருஷத்திற்குள் தொலைந்துவிட வேண்டியது என்று பகவத் ஸங்கல்பம் இருப்பதினாலும், அது காரணம்பற்றி மகரிஷிகளும், சித்த புருஷர்களும் இந்த அருங் காரியத்தைப் பின்னிருந்து நடத்திக் கொண்டிருப்பதினாலும், இந்த ஆவேசம் சத்துருவின் சூழ்ச்சியினால் அடக்கப்படாமல் காட்டுத் தீபோல் எங்கே பார்த்தாலும் பரவிக்கொண்டு வருகிறது. அது அவ்விதம் பரவுவதற்கு உபகரணங்கள் வேண்டுமே, அவைதான் ரகஸிய சமாஜங்கள்.

இந்த ரகஸிய சமாஜங்களுக்குள் மிகவும் கியாதி பெற்றது அபி நவ பாரதம். இது ஆரிய வர்த்தத்தில் எல்லாவிடங்களிலும் பரவியிருக்கிறது. இன்னும் சில காலத்திற்குள் யுத்தம் ஆரம்பிக்கும்போது இதை நடத்து பவர்கள் பகிரங்கமாய் முன் வருவார்கள்.

இப்பொழுது தயார் செய்யவேண்டிய காலமானதால், ஜனங்களுக்கு சுவதந்திரத்தில் ஆவேசம் உண்டாக்கும்படியான பத்திரிகைகள் எழுதியும் இதர காரியங்கள் செய்தும் வருகிறார்கள்.

எவன் எவனுடைய சரீரத்தில் ஆரிய ரத்தம் ஓடுகிறதோ, எவன் எவனுடைய நாமத்தின்பேரில் பக்தியும், அதர்மத்தின் பேரில் துவேஷமும், ஸத்தியத்தினிடத்தில் அபிருசியும், அஸத்தியத்தினிடத்தில் அருவருப்பும் இருக்கிறதோ, எவன் எவனுக்கு ஆண்மையும் பௌருஷமும், கீர்த்தி சம்பாதிக்க வேண்டுமென்கிற தாகமும் இருக்கிறதோ, நம்முடைய ஆரிய நாட்டில் பறங்கி படாடோபத்துடனும் அதிகாரத்துடனும் நடப்பதைப் பார்த்து, எந்த எந்த ஆரியனுடைய மீசை துடிக்கிறதோ, ஆரிய வர்த்தத்தைப் பறங்கியின் கைவசத்தினின்று மீட்டு, அதன் அழகிய சிரத்தில் °வதந்திரம் என்கிற நிரதிசயமான கிரீடத்தை வைத்து, நாட்டினின்றும் பஞ்சத்தையும் பிணியையும் நீக்கி, சுபத்தையும் செல்வத்தையும் மங்களத்தையும் உண்டாக்க வேணுமென்று எந்த எந்த ஆரியனுடைய மனது ஆவல் கொண்டு பறக்கிறதோ, அந்த அந்த ஆரியன் இதனடியில் எழுதப்பட்டிருக்கிற பிரமாணத்தைச் செய்து சமாஜத்தில் சேர்ந்துகொள்ள அருகன்.

நிரம்பிய தேசபக்தி இருக்கும் பக்ஷத்தில் அபி நவ பாரதத்தின் தலைவர்கள் இன்ன இடத்தில் இருக்கிறார்களென்ற ஞானம் தானே உண்டாகும்.

இது ரகஸிய சங்கமாயிற்றே, இதன் பிரமாணங் களையும் சங்கதிகளையும் இவ்விதம் பகிரங்கப்படுத்தலாமா என்கிற கேள்வி பிறக்கக்கூடும். பிரமாணத்தை வரைவதற்குமுன் இந்தப் பிரசினத்துக்குப் பதில் கொடுத்து விடுவோம்.

இந்த முயற்சியானது ஒரு நாட்டை, ஒரு ஜாதியையே உத்தாரணம் செய்ய ஏற்பட்ட முயற்சி. இதையும் இதன் உபகரணங்களையும் ரகசியமாக வைப்பது அசாத்தியம்; தவிர காரியத்துக்கே இடையூறாகும். அபிநவ பாரதம் என்கிற சமாஜம் ஒன்று இருக்கிறது என்கிற விஷயத்தை ரகஸியமாக வைத்தால், எத்தனை பேர் அதில் சேருவார்கள்? அல்லது ஒவ்வொருவராக நேரிடப் போய்ச் சேர்க்கிறதாக இருந்தால், எத்தனை நாளாகும்? ஒரு மன்வந்தரமாகி விடும்.

கண்ணன் பிறந்த சங்கதியை எத்தனை நாள் ரகஸியமாக வைத்தல் சாத்தியம்? தன்னைக் கொல்லுவதற்காகவே கண்ணன் பிறந்து கோகுலத்தில் வளருகிறான் என்று கம்ஸனுக்குத் தெரிந்து விடவில்லையா? அதே மாதிரி அபிநவ பாரதம் இப்பொழுது வளர்ந்து அதப்தமான சக்தியுடன் ஆரிய வர்த்தத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது என்று தற்காலக் கம்ஸனான பறங்கிக்குத் தெரியும்.

ஏனென்றால், அவன் முடியும் காலம் வந்து விட்டதோ இல்லையோ? ஆகையால், இந்தப் பத்திரிகை பறங்கிக்குத் தெரியாத புது சமாசாரம் ஒன்றையும் அவனுக்குத் தெரி விக்கவில்லை. பறங்கிக்குத் தெரிந்த விஷயம் நம்முடைய ஆரிய ஜனங்களுக்குத் தெரிவிக்கக் கூடாது என்று யார் சொல்வார்கள்?

ஆனாலும் இது ரகஸிய சங்கம் ரகஸிய சங்கமே. ஏனென்றால், இந்த சமாஜத்துக்கு நேதாக்கள் (தலை வர்கள் அல்லது நடத்து பவர்கள்) யார்; இதன் மூலஸ்தானம் எது; இது என்ன வேலைகள் செய்கிறது; எவ்விதம் வேலை செய்கிறது என்று சத்துருவுக்குக் கிஞ்சித்தேனும் தெரியாது. இதன் காரியங்கள் எல்லாம் சமிக்கினை மூலமாக நடக்கிறதேயொழிய, கடிதப் போக்குவரவினால் நடக்கவில்லை. இது அடிக்கும் அடியெல்லாம் காடாந்தகார இருளில், வித்தியுதம் (மின்னல் இடி) விழுமே அந்த மாதிரிதான் விழும். அடி விழுகிறதுதான் தெரியும். முன்னும் பின்னும் காடாந்தகார இருள்தான்! ஆகையால் இது ரகஸிய சங்கம்தான்.

ஆரியர்கள் இந்தப் பிரமாணத்தைச் செய்து, தேசத்தைச் சத்துருவிட மிருந்து மீட்க முயற்சிகளை உடனே ஆரம்பிப்பார் களாக. பின் செய்யவேண்டிய காரியங்கள் அப் போதைக்கப்போது பத்திரிகைகள் மூலமாகப் பிரசுரமாகும்.

இதர விஷயங்கள் தெரிய வேண்டுமானால் மேலே சூசிக்கப்பட்டிருக்கிற மூல °தானத்துக்கு வந்து தெரிந்து கொள்ளவும்.

பிரமாணம்
ஓம் வந்தே மாதரம்.
ஜகதீசுவரன் பேரில் ஆணை;
பாரத மாதாவின் பேரில் ஆணை.

பாரத மாதாவை ஆங்கிலப் பறங்கிடமிருந்து மீட்பதற்காகத் தங்களுடைய இரத்தத்தைத் தத்தம் செய்திருக்கும் ஆரிய வீரர்கள் மீது ஆணை;

என் மாதா பிதாக்கள் பிறந்து வளர்ந்த இடமும், என் குஞ்சு குழந்தைகள் வாழப்போகிற இடமுமான என் பாரத நாட்டின் பேரில் எனக்கிருக்கும் பிரேமை அன்பின் பேரில் ஆணை;

கொடுமை, அநியாயம், அக்கிரமம், கொடுங்கோல ரசு, இவைகளின் பேரில் எனக்கிருக்கும் உக்கிரமான துவேஷத்தின் பேரில் ஆணை;

மற்ற நாட்டு ஜனங்கள் முன்னிலையில் நிற்கும் போது, எனக்கு என் தேசத்தில் யாதொரு உரிமையும் இல்லை என் தேசமே என்னுடையதல்ல, என்னுடைய நாட்டிற்கு சுவயமானதுவஜம்கூட இல்லையே என்கிற எண்ணத்தினால் என் மனதில் எழும் அவமானம் ஆணை;

என் நாட்டின் முந்நாள் பெருமையின் பேரில் ஆணை; இந்த நாள் சிறுமையின் பேரில் மீது ஆணை;

தங்கள் புத்திரர்கள் சிறையிலோ, தூக்கு மரத்திலோ, தண்ணியின் பேரில் ஏற்றப் பட்டதிலோ, துப்பாக்கியினால் சுடப்பட்டதிலோ, இறந்து போக, உயிர் துடித்து மனம் உடைந்து, நிர்க்கதியாகித் தாரை தாரையாகக் கண்ணீர்விட்டு அழுது கொண்டிருக்கும் என் அருமை ஆரிய மாதாக்களின் பேரில் ஆணை;

பறங்கியின் அக்கிரமத்தினால் வலிமையை இழந் திருக்கிற தர்ம தேவதையின் பேரில் ஆணை; இந்தப் பிரமாணங்கள் செய்து,

....(பிரமாணம் செய்வோன் பெயர்)
ஆகிய நான்,

நன்மை தீமை தெரியாமல் உழன்று கொண்டி ருக்கிற உலகத்திற்குத் தர்மத்தின் வழியைக் காட்ட வேண்டுமென்று, ஆரிய வர்த்தத்துக்குப் பரமேசு வரன் ஒரு ஆதேசம் கொடுத்திருக்கிறானென்றும், அந்த ஆதேசத்தைத் தலைமேற் கொண்டு அதர்மத்தை யழித்து, தர்மத்தை ஸ்தாபிக்க வேண்டியது ஒவ்வொரு ஆரியனுடைய கடமையென்றும்; சுவராஜ்ஜியம், அதாவது பூர்ணமான ராஜரீக சுதந்திரம் இல்லாத வரையில் உலகத்திலுள்ள ஜாதிகளின் மத்தியில் கௌரவம் நிறைந்த பதவியாகிய அதனுடைய இயற்கை உரிமை என்னுடைய பாரத நாட்டிற்குக் கிட்டாதென்றும், அதனால் அது ஷதர்ம ஸ்தாபனம் செய்யச் சக்தியற்றதாக இருக்குமென்றும்;

அந்த சுவராஜ்ஜியம், நம்முடைய நாட்டை அக்கிரமமாகப் பிடுங்கிக்கொண்டு அதில் கொடுங்கோல் செலுத்திவரும் ஆங்கிலேய வெள்ளைக்காரர்களைப் பெரும்போர் செய்து விரட்டிவிட்டாலொழிய நமக்குக் கிடைக்காதென்றும்;

எப்பொழுது ஈசுவரன் நம்மை ஒரு ஜாதியாக, அதிலும் ஆரிய ஜாதியாக சிருஷ்டித்திருக்கிறானோ, அப்பொழுது நாம் சுவதந் திரத்துடன் வாழச் சக்தியையும் நமக்குக் கொடுத்திருக்கிறான் என்றும், அந்தச் சக்தி அனைத்தும் பாரதர்கள் ஒவ்வொருவரிடத்தும் குடிகொண்டிருக்கிற தென்றும்; உடல், பொருள், ஆவி மூன்றையும் இந்தத் தர்மோத்தாரண காரியத்தை நிறைவேற்றுவதற்காகத் தத்தம் செய்வது தான் தர்மம் என்றும், ஐக்கியமும் பிடி வாதமும்தான் பலத்துக்குத் காரணமென்றும் தீர்மானித்து, இதே தர்மத்தை அனுஷ்டிக்கிறவர்கள் சேர்ந்த சமாஜமான அபிநவ பாரதம் என்கிற தர்ம சமாஜத்தில் நான் சேர்கிறேன்; ஆரிய வர்த்தத்தை சுதந்திர மான ஜன உரிமையுள்ள ஜாதியாகச் செய்ய மேலே சொன்னவர்களுடன் சேர்ந்து கடைசி வரையில் முயலுவேன் என்றும்;

எழுத்தினாலாவது வார்த்தையினாலாவது, அல்லது செய்கையினாலாவது என்னால் கூடிய சகலவிதத்தாலும் என்னாட்டு ஜனங்களுக்கு அபிநவ பாரதத்தின் எண்ணங்களை, அதாவது ஐக்கியத்தையும் தர்மத்தையும் ஸ்வதந்திரத்தையும் இடைவிடாது போதித்து வருவேன் என்றும், அபிநவ பாரதத்தின் நோக்கத்திற்கு அணுகுணமாக அபிநவ பார தத்தின் அந்தந்தக் காலத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கொடுக்கும் உத்தரவுகளை என் பிராணனைக் கொடுத்தும்கூட நிறைவேற்றுவேன் என்றும், பிராணன் போனாலும், எந்த உத்தரவுகளையும், சமாஜத்தைச் சேர்ந்தவர்களின் பெயரையும், அதன் இதர விவகாரங்களையும் வெளிப் படுத்துகிறதில்லையென்றும்;

செயலினாலும் யோசனையினாலும், திரவியத்தினாலும் என் அபிநவ பாரத சகோதரர்கட்குச் சகல உதவிகளும் செய்வேன் என்றும்,பிரமாணம் செய்கிறேன். இந்தப் பிரமாணத்தில் சொன்ன எந்த விஷயத் தையாவது நான் காட்டிக் கொடுப்பேனானால், எனக்கு ரௌரவாதி நரகங்கள் ஏற்படட்டும்! கோஸ் வாமி போலவும், கொரே காக்கர் போலவும், ஊமைத்துரை பாக்ஷாவைக் காட்டிக் கொடுத்த புதுக்கோட்டைக் காதகன் போலவும் என் பெயருக்கு என்றைக்கும் நீங்காத அவமானம் வந்து சேரட்டும்.

இந்தப் பிரமாணத்தைச் சரிவரக் காப்பாற்றி என் பெயருக்கு அழியாத கீர்த்தியையும், என் அருமை பாரத நாட்டிற்குச் சுவதந்திரம் ஏற்படும்படியும் வேலை செய்வேனாகவும். ஓம் வந்தே மாதரம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com