Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
அக்டோபர் 2007

படகோட்டி

கவிஞர் பல்லவன்

படகில் வந்து
ஏறினார்
அந்தத் தத்துவவாதி!
படகு கடலில்
பயணப்பட்டது!
சமுத்திர சாஸ்திரம்
தெரியுமா உனக்கு?
படகோட்டியைப்
பார்த்துக் கேட்டார்
தத்துவவாதி.
உதட்டைப் பிதுக்கினான்
படகோட்டி.
அடடா,
உன் வாழ்க்கையில்
கால்பகுதியைப்
பாழடித்து விட்டாயே!
வருத்தப்பட்டார்
தத்துவவாதி.
மேலும் கேட்டார்
பூமி சாஸ்திரம்
தெரியுமா உனக்கு?
அது பற்றி
ஒன்றும் தெரியாது
தலையை ஆட்டினான்
படகோட்டி.
ஆக, உன் வாழ்வில்
பாதியை வீணடித்து
விட்டாய் நீ
பரிதாபப்பட்டார்
தத்துவவாதி.
வானசாஸ்திரமாவது
அறிவாயா நீ?
வித்யா கர்வத்துடன்
வினவினார் சாஸ்திரி!
அதுவும் தெரியாது
திருதிரு வென்று
விழித்தான் படகுக்காரன்!
வானத்து நட்சத்திரங்களைக்
கண்டுகொண்டுதானே
நீ கடலில்
வழிகண்டு செல்ல
முடியும்?
வானசாஸ்திரமும்
கற்காமல் இருக்கிறாயே?
கிட்டதட்ட
உன் வாழ்வில்
முக்கால் பங்கை
விரயமாக்கி விட்டாய்
நீ!
இரக்கப்பட்டு,
இதயம் நொந்தார்
சாஸ்திரி.
அப்பொழுது
கடல் குமுறிக்
கொந்தளித்தது!
சினந்து சீறிப்
புயலடித்தது!
உங்களுக்கு
நீச்சல் தெரியுமா
சாமி?
பரிவுடன் கேட்டான்
படகோட்டி.
நீச்சல் என்றால்
என்னவென்றே
எனக்குத் தெரியாதே!
பயவுணர்வு மீதூரச்
சொன்னார் சாஸ்திரி.
அப்போது
புயல் படகைப்
புரட்டிப் போடப்
பார்த்தது!
பதற்றப்படாமல்
படகோட்டி
சொன்னான்.
சாமி! உங்கள்
முழு வாழ்வையும்
இப்பொழுது
கடல் விழுங்கி
ஏப்பம்விடப் போகிறது!
கடல், வானம்
பூமி பற்றிய
சாஸ்திரங்களை
நீங்கள்
கரைத்துக் குடித்து
என்ன பயன்?
நீந்தக் கற்காமல்
போனீர்களே!
திகிலுற்றுக் கதறினார்
தத்துவவாதி!
ஆனால்
அவரைக் கரைசேர்க்கக்
கற்றிருந்தான்
படகோட்டி!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP