Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
அக்டோபர் 2006

நேர்மைத் திறம்
எம்.டி. வாசுதேவநாயர்

``மலையாளிகளையும் தமிழர்களை யும் பற்றி உங்க அபிப்ராயம் என்ன?''

``கடந்த முப்பதாண்டுகளில் இரண்டு மாநில மக்களின் வாழ்க்கை யிலும் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கு. பொருள் ஈட்ட மலையாளிகள் அரபு நாடுகளுக்குப் போய் கடின உழைப்பால் சம்பாதிச்சு வருவது, அடிப்படையான விவசாயத்தைப் புறக்கணிக்கிற சூழ்நிலைக்குத் தள்ளிருச்சு.

ஆதிவாசிகள் மீதான மலையாளி களின் பார்வை அருவருப்பானது. ஆதிவாசிகளை அவங்களோட பூர்விக நிலத்திலிருந்து அறுத்து எறிஞ்சிருச்சு கேரளத்தின் அதிகார வர்க்கம். இந்த மலையாள மண்ணின் வளமைக்கு ஆதிவாசிகளின் உழைப்பும் வியர்வை யும் இருக்குன்னு புரிஞ்சுக்க மறுப்பது வரலாற்றுக் கொடுமை.
தமிழர்கள், மலையாளிகள்னு ரெண்டு இனமுமே உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்துதான் பிரச்னைகளை அணுகுறாங்க.

தமிழர்களுக்கு அவங்க கலாசார வளமைதான் சொத்து. ஒரு மொழிக் காகப் போராடிய இனம்னா, அது தமிழினம்தான். ஆனா, சமீபகாலமா ஒருவிதமான கலாசார பிற்போக்குத் தனம் தமிழகத்தில் பரவலா பரவி வருது. உதாரணத்துக்கு குஷ்பு விவகாரத்தைச் சொல்லலாம்.

குஷ்புவுக்குக் கோயில் கட்டினவங் களும் தமிழர்கள்தான்... துடைப்பத் தோடு அந்தம்மாவை இழிவு படுத்தி யதும் அவங்களேதான்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்கு. அதைச் சொல்ல அவங் களுக்கு உரிமையும் இருக்கு.
அந்த உரிமை குஷ்புவுக்கும் உண்டு. என்னைக் கேட்டா, குஷ்புவுக்குக் கோயில் கட்டினது பைத்தியக் காரத் தனம். அவங்களை இழிவுபடுத்தியது அதைவிட முட்டாள்தனம்.

இம்மாதிரி தொடர்ந்து நடக்கிற சம்பவங்களால், தமிழர்கள் பற்றிய தவறான அபிப்ராயம் பரவி, அதுவே அவங்க அடையாளமா மாறிவிடும் ஆபத்தும் இருக்கு.''

``முல்லை பெரியார் அணையிலி ருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கிறதே கேரள அரசாங்கம்?''

``இன்றைக்கு உலகம் முழுக்க ரெண்டே விஷயங்களுக்குதான் எல்லா பிரச்னைகளும் நடக்குது. ஒண்ணு பெட்ரோலுக்கு. இன்னொண்ணு தண் ணீருக்கு ஒரு தேசத்துக்குள்ளேயே எவ்வளவு பிரச்னைகள்!

முல்லை பெரியார் அணை பிரச் னைங்கிறது கேரள, தமிழ்நாட்டு விவ சாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னை. கேரளத்தில் 44 நதிகள் பாய்கின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலைக் காடு கள் கேரளத்துக்கு நல்ல நீராதாரத்தைத் தரும் வரப்பிரசாதமா இருக்கு. வருஷம் முழுக்கக் கிடைக்கிற தண்ணீரில் 80 சதவிகிதம் தண்ணீரைச் சேமிக்காம வீணடிக்குது கேரளம்.
மலையாளிகள் உண்ணும் அரிசியும் காய்கறியும் அதிகமா தமிழகத்திலி ருந்துதான் வருது. கேரளாவில் இப்போ முழுமையான விவசாயம் இல்லை. ரப்பர், தென்னை மாதிரி பணப் பயிர் களைத்தான் விளைவிக்கிறாங்க.
ஆனா, தமிழகத்தில் விவசாயம் தான் ஜீவ நாடியா இருக்கு. காவிரியில் தண்ணீர் வரலைன்னா, விவசாயம் இல்லாமல்போய் தற்கொலை செய்கிற நிலைமை இருக்குன்னா, விவசாயம் தமிழர்களோட வாழ்வில் கலந்திருக் குன்னுதானே அர்த்தம்!

இப்போ ஆட்சிக்கு வந்திருக்கும் கம்யூனி°ட்டுகள், இந்த விஷயத்தில் இரு மாநில விவசாயிகளுக்கும் பாதிப்பு
இல்லாத ஒரு நல்ல தீர்வைக் கொடுக் கணும்.''

- மலையாள எழுத்தாளர்
எம்.டி. வாசுதேவநாயர்



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com