Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மே 2006

சாணக்கியன் சபதமும் பெரியார் சபதமும்!


2300 ஆண்டுகளுக்கு முன் பாடலிபுரத்தில் - மக்களின் வரிப்பணத்தில் ஒவ்வொரு நாளும் இரண் டாயிரத்துக்கும் அதிகமான பார்ப்பனப் பிராணிகளுக்கு (உழைப்பில் ஈடுபடாத உயிரினங்கள் பிராணிகள்தானே!) தண்டச் சோறு போட்டுக் கொண்டிருந்தார்கள் நந்தர்கள்.

சத்திரத்திலே சோறு போடுகிறார்கள் என்று அறிந்ததும் ஒரு கறுப்புப் பார்ப்பனன் உள்ளே நுழைந்தான். தண்டச் சோறு தின்ன வந்த வெட்டிப் பார்ப்பனர்களுக்கு மத்தியில் அமைச்சரின் இருக்கையில் அமர்ந்துதான் தின்னுவேன் என்று அவன் அடம் பிடித்தான். அமைச்சரும் ஒரு பார்ப்பான்தான்.

பக்கத்து இருக்கையில் அமர்ந்து சாப்பிடலாமே என்று கேட்டுக் கொண்ட நந்தர்கள்மீது பாய்ந்து குதறினான். ஓசிச் சோற்றுக்கு நாய்ச் சண்டை போட்ட அந்த மனநோயாளிதான் சாண்டில்யன். நாகரிகமற்று நடந்து கொண்ட அவன் அங்கிருந்து வெளியேற்றப் பட்டான். அந்த தனிமனித விரோதத்தால் நந்த வம்சத்தையே அழிப்பேன் என்று சபதமிட்டானாம்.

இன்றுவரை பார்ப்பன `அறிவுஜீவிகள்’ இந்தக் கேவலமான காரியத்தை வியந்து பாராட்டுகிறார்கள். இது நடந்து இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் தமிழ் நாட்டில் சேரன்மாதேவியில் திராவிடர்களின் நன்கொடையால் நடந்த குருகுலத்தில் சாப்பிடும் இடத்தில் திராவிட மாணவர்களுக்கு கப்பட்ட அவமரியாதை ஒரு தன்மானமுள்ள மனித நேயருள் அறச்சீற்றத்தை எழுப்பி யது. பார்ப்பனர்க்கு ஒரு நீதி பார்ப்பனர் அல்லாதார்க்கு ஒரு நீதி என்று மானுடத்தை இழிவு செய்யும் அந்த பார்ப்பனத் திமிரை அழித்தே தீருவது என்று அந்தப் பேராளன் சபதம் செய்தான். அவர் தான் தந்தை பெரியார்.

என்ன ஒற்றுமை! சாணக்கியன் சபதமும் பெரியார் சபதமும் சாப்பாட்டு அறையில் ஏற்கப்பட்டதுதான். சாணக்கியன் சபதம் சண்டியர்த்தனம். `வேத’ ஞானத்தால் போக்கிரியான ஒரு அயோக்கியனின் சபதம். பெரியாரின் சபதம், மனித நேயத்தில் கனிந்த ஒரு புரட்சியாளனின் சமூக நீதிப் பிரகடனம். பெரியாரின் சபதம்தான் திராவிட இயக்கமாய் எழுந்தது. திராவிட இயக்கத்தின் பிறப்பே ஆரிய சனாதன தர்மத்தை - அவர்தம் சூழ்ச்சிகளை ஒழிப்பதற்கென்று விதிக்கப்பட்டதுதான்.

அது `வடநாடு வாழ் கிறது; தென்னாடு தேய் கிறது’ என்று குரல் எழுப்பியது டாட்டா, பிர்லா, கோயங்கா, டால்மியா, பப் பட்லால், அம்பானி போன்ற பார்சி பனியா கும்பலின் கொள்ளையை நிறுத்தத்தான்.

1950-களில் தொடங்கி அறுபது வரை நடந்த அந்தப் போராட்டங்களின் நோக்கம் இன்றும் தொடர் கிறது.

வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் சுரண்ட லுக்கும் சூழ்ச்சிகளுக்கும், தனக்குப் பிடிக்காத ஆட்சி யைக் கவிழ்க்கும் வஞ்சகங் களுக்கும் பிறப்பிடமான பார்சி, பனியா, பார்ப்பனக் கூட்டம் தயாநிதி மாறனால் ஆட்டம் காணத் தொடங்கி யிருக்கிறது.

சோ போன்ற பித்தலாட் டக்காரர்கள் வாரிசு அரசி யல் வாரிசு அரசியல் என் கிறார்களே, அதிலே என்ன தவறு? °டாலினும் தயாநிதி யும் பெரியாரின் வாரிசுகள் தான். கலைஞரின் வாரிசு களும்தான். கலைஞரின் வாரிசுகள் சரியான வீரர் களாவே களத்தில் நிற்கிறார் கள் என்பது இப்போது நிரூ பணமாகிறது. தயா தொடங்கியிருக்கும் இந்தப் பணியை மத்தியில் இருக்கும் தமிழக அமைச்சர் கள் அனைவருமே தொடர வேண்டும். இதுதான் சமதர் மத்துக்கும் சமூக நீதிக்கு மான ஒரே வழி. பெரியாரின் சபதத்தை நிறைவேற்றும் உன்னதமான போராட்டத்தில் கலைஞ ரின் வாரிசுகளைப் போல் ஒவ்வொரு தமிழிரின் வாரிசு களும் துணிந்து நிற்க வேண்டும். பதவி கிடைத்தால், `பாம்பு களின்’ புற்றை நொறுக் குங்கள். பதவியில் இல்லாதோர் - அன்று அன்னியப் பொருள் கள் பகிஷ்கரிக்கப்பட்டது போல் - பகைவர் தயாரிப்பு களைப் புறக்கணிப்போம். விஷக் கருத்துக்களையும், விபரீத நடைமுறைகளையும் பரப்பி வரும் பார்ப்பன ஏடு களை முதலில் புறந்தள்ளு வோம். மானமும் அறிவும் உள்ள தமிழர்களே,

தினமணி
தினமலர்
துக்ளக்
போன்ற ஏடுகளை வாங்காதீர் என்று வேண்டுகிறோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com