Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
மே 2006

பாத்திரப் படைப்பாளி

கவிஞர் பல்லவன்

இப்பூமியின்
சக்கரச் சுழற்சி
புதுப் புது
பாத்திரங்களை
வனைந்தளித்துக்
கொண்டே
இருக்கிறது

ஒரு குயவனின்
சக்கரச் சுழற்சி
மண் பாத்திரங்களைப்
படைத்தளிப்பது போல!

சுதந்திர இந்தியாவில்
இன்றும் எங்கள்
மண்பாண்டத் தொழிலாளி
கோமணத்தோடேயே
தரிசனம் தருகிறான்!

இவனது கைகளில்
ஆணைச் சக்கரம்!
ஆளுயரச் செங்கோல்!
வயிற்றில் மட்டும்
வறுமைக் கோடுகள்!

களிமண்தான்
இவனுக்கு மூலதனம்!
கடும் உழைப்பாளி
இவன்
வறுமை இனம்!

மண்ணில் இத்தனை
வடிவங்களா? இவன்
மனதில் இத்தனை
உருவங்களா?
எண்ணிடத் தோன்றும்
நமக்கு! இவனது
கைவினைப் பொருளைக்
காணும் பொழுதெல்லாம்!

வேகமாகச் சுழலும்
சக்கரத்திலிருந்து
அந்தப்
பச்சைமட் கலத்தை
இலாவகமாய்
இவன் கையேந்துவான்
தாயேந்தும்
குழந்தையைப் போல.

அக்னிப் பிரவேசம்
செய்த பின்பே
இவனது படைப்புகள்
ஏற்கப்படுகின்றன.
தட்டிப் பார்த்த
பிறகே
இவன் சிருஷ்டியின்
தரம் அறியப்படுகிறது.
இவனது படைப்புகள்

எப்போதும்
நிலையாமையைப்
பற்றியே
பேசிக் கொண்டு
இருக்கின்றன.

இப்பிரபஞ்சத்தின்
காலப் பழமையைக்
கணக்கிட இவனது
பானை ஓடுகளே
பயன்படுகின்றன.

இவனது காலடிகளில்
மிதியுண்ட களிமண்தான்
கலயங்களாகி
இவனைத் தண்டித்துப்
பழிவாங்கி விடுகிறது
தலைசுமக்க வைத்து!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP