Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூன் 2008

அடைத்தேன்
கவிஞர் பல்லவன்

எண்ணற்ற அடைமொழிகளைக் கொண்டது தமிழ்மொழி. தமிழின் தனித் தன்மைகளையும் விழுமியங்களையும் பண்புநலன்களையும் அவ்வடை மொழிகள் இன்றும் பறைசாற்றி வருகின்றன. தமிழர்கள், மொழியைக் கருத்தைப் பரிமாறிக் கொள்ளும் கருவி என எண்ணுவதில்லை. தமது உயிரினும் மேலானதாகவே போற்றுவர். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பியவர் என்று சைவ உலகம் புகழும் தமிழ் ஞானசம்பந்தர் கூடத் தேவாரத்தில் 212 அடைமொழிகளால் தமிழை அழகுபடுத்தியிருக்கிறார்.

எத்தனை அடைமொழிகளால் தமிழைக் குறிப்பிட்டு முழங்கினபோதும், தமிழர்களின் ஆவல் அடங்கிவிடுவது இல்லை. உலகில் பேசப்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இவ்வாறு அடைமொழிகளால் சிறப்பிக்கும் பெருமை எம்மொழிக்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்கின்றனர் மொழி அறிஞர்கள். அடைத்தேனிலிருந்து சில துளிகள்.

அந்தமிழ்
செந்தமிழ்
எந்தமிழ்
நந்தமிழ்
முந்துதமிழ்
முத்தமிழ்
மூவாத்தமிழ்
தண்டமிழ்
வண்டமிழ்
ஒண்டமிழ்
ஓங்குதமிழ்
மென்தமிழ்
நுண்தமிழ்
பண்தமிழ்
இன்றமிழ்
தென்றமிழ்
தேன்தமிழ்
வான்தமிழ்
தீந்தமிழ்
பூந்தமிழ்
தாய்த்தமிழ்
தூய்தமிழ்
நற்றமிழ்
பொற்றமிழ்
சொற்றமிழ்
சீர்தமிழ்
சிந்துதமிழ்
சந்தத்தமிழ்
சங்கத்தமிழ்
எழில்தமிழ்
இயல்தமிழ்
குயில்தமிழ்
இசைத்தமிழ்
நாடகத்தமிழ்
ஞானத்தமிழ்
அருந்தமிழ்
நறுந்தமிழ்
இருந்தமிழ்
பெருந்தமிழ்
தெளிதமிழ்
ஒளிதமிழ்
களிதமிழ்
தளிர்தமிழ்
குளிர்தமிழ்
அணிதமிழ்
மணித்தமிழ்
பனித்தமிழ்
தனித்தமிழ்
கனித்தமிழ்
பழந்தமிழ்
புதுத்தமிழ்
மதுத்தமிழ்
புகழ்தமிழ்
புலமைத்தமிழ்
உயர்தமிழ்
உயிர்த்தமிழ்
உரைதமிழ்
செறிதமிழ்
மறைதமிழ்
நிறைதமிழ்
விரிதமிழ்
இறைதமிழ்
பசுந்தமிழ்
பைந்தமிழ்
செழுந்தமிழ்
கொழுந்தமிழ்
இளந்தமிழ்
இலங்குதமிழ்
வளர்தமிழ்
வாழ்தமிழ்
சுவைத்தமிழ்
சுடர்தமிழ்
மாத்தமிழ்
மங்காத தமிழ்
அமுதத் தமிழ்
அன்புத் தமிழ்
இன்பத்தமிழ்
வண்ணத்தமிழ்
கன்னல்தமிழ்
காவியத்தமிழ்
ஓவியத்தமிழ்
நாவினியதமிழ்
நீண்டதமிழ்
குன்றாத்தமிழ்
பொன்றாத்தமிழ்
வீறுதமிழ்
திவ்விய தமிழ்
திருநெறித்தமிழ்
தெள்ளுதமிழ்
தன்னேரிலாத தமிழ்
வளமைத்தமிழ்
மாண்புத்தமிழ்
கன்னித்தமிழ்
மக்கள்தமிழ்
புதுமைத்தமிழ்
அழகுத்தமிழ்
பழகுத்தமிழ்
எதுகைத்தமிழ்
மோனைத்தமிழ்
இலக்கியத்தமிழ்



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com