Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூன் 2008

கர்நாடகத்தைத் தொடர்ந்து கேரளமும் சண்டித்தனம்!
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை தமிழகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறுகிறது!

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளைக் கேரள அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. கானகத்துறைக்குச் சொந்தமான இடங்களில் ஆய்வு நடத்தக் கூடாது என நடுவண் அரசு தடை விதித்துள்ள போதிலும், அதையும் மீறி கேரள பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவது பெரும் சர்ச்சையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முல்லைப் பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை இப்போதுள்ள 136 அடியிலிருந்து முதலில் 142 அடியாகவும், பின்னர் 152 அடியாகவும் உயர்த்த வேண்டும் எனக் கடந்த 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அத்தீர்ப்பை ஏற்க கேரளா மறுத்து விட்டது. முல்லைப் பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாகப் பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில் பலமுறை பேச்சு நடத்தப்பட்ட போதிலும் கேரளா நிலையிலிருந்து இறங்கிவரவில்லை. மாறாக, முல்லைப் பெரியாற்று அணை வலுவிழந்துவிட்டதாகவும், அதற்கு மாற்றாக புதிய அணை கட்டப்பட வேண்டும் என்றும் கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனும், அம்மாநில நீர்ப் பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரனும் வலியுறுத்தி வந்தனர்.

அத்துடன் இருக்காமல் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளையும் கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள அரசு தொடங்கியது. இதற்காக முல்லைப் பெரியாற்று அணை அமைந்துள்ள குமுளி நகரில் புதிய அலுவலகம் ஒன்றும் தொடங்கப்பட்டது. ஆனால் புதிய அணை கட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் கானகத்துறைக்குச் சொந்தமானது என்பதால் அங்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என நடுவண் கானகத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். இதையடுத்து முல்லைப் பெரியாற்று அணை கட்டுவதற்கான அலுவலகம் மூடப்பட்டது.

இந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளைக் கேரள அரசு தொடங்கியுள்ளது. இதற்காக குமுளியில் ஏற்கனவே மூடப்பட்ட அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அங்கு செயற்பொறியாளராக அமர்த்தப்பட்டுள்ள அனந்தகோபாலன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் இரு அணிகளாகப் பிரிந்து சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். புதிய அணை கட்டுவதால் குமுளி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் கானகத்துறை கட்டடங்கள் நட்த்திர விடுதிகள், வீடுகள் போன்றவை எந்த அளவுக்கு நீரில் மூழ்கும் என்பது குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

குமுளி புறநகர்ப் பகுதிகள், தேக்கடி, மன்னான்குடி, பனியன்குடி, பெரியார் காலனி, ரோசாப்பூ தோட்டம், தாமரைக் கனி, ஆனவச்சா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிப் புதிய அணைக் கட்டப்பட இருப்பதால் அங்கும் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதிகளில் நடைபெறும் ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு கானகத்துறைக்குச் சொந்தமான பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. தடையை மீறி கேரள அரசு ஆய்வு நடத்தி வருவதற்குத் தமிழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது. அதனால் தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் இடையே பெரியாறு அணைச் சிக்கல் தொடர்பான மோதல் வலுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com