Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
பிப்ரவரி 2007

மனுதர்மம் நிறவெறி இல்லையா?

இளவேனில்

பக்கத்துவீட்டுப் படுக்கையறையை எட்டிப் பார்ப்பது எவ்வளவு அநாகரிகம்!

ஆனால், இரவும் பகலும், ஆண்களும் பெண்களும் ஒரே வீட்டுக்குள் என்னதான் நடக்கும்? பார்க்கலாமா என்கிற வக்கிரமான உணர்வைப் பகிரங்கமான ஒரு நிகழ்ச்சியாக இங்கிலாந்து தொலைக்காட்சி ஒன்று படம் பிடித்துக் காட்டியது.

இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தயாராகும்போதே ஒருவர். எல்லாவற்றையும் உதிர்த்து விட்டுத்தான் புறப்படுவார். இந்தியாவிலிருந்து நடிகை ஷில்பா கலந்து கொண்டார்.

இதே போட்டியில் கலந்து கொண்ட இங்கிலாந்து நடிகை ஜேட்கூடி ஒருகட்டத்தில் ஷில்பாவை நாய் என்று திட்டி விட்டாராம்.

இது நிறவெறி என்று ஒரு புயல் கிளம்பியது. ஜேட் வெளியேற்றப்பட்டார். ஷில்பா இறுதிவரை நின்று வெற்றி பெற்று விட்டாராம்.

இதிலே நமக்கு எழும் ஒரு கேள்வி. இங்கிலாந்து நடிகை நாய் என்று சொன்னதே நிறவெறி என்று கத்துகிறவர்கள், வெள்ளையர்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்று நிறவெறியை ஆதரித்து, இந்திய மக்களை இழிவு செய்வது குறித்து இன்று வரை எந்த இந்தியனுக்கும் நியாயமாய் வரவேண்டிய கோபம் வரவில்லையே ஏன்?

நிறவெறியை உலகுக்கு அறிமுகப்படுத்திய பார்ப்பன சாத்திரங்கள்மீது ஆத்திரம் வராத சுயமரியாதையற்ற இந்தியர்கள் இங்கிலாந்து நிகழ்ச்சிக்காகக் குரைப்பது வேடிக்கை அல்லவா!

இப்படியும் ஒரு தொழிலா?

******************

ராணுவ வீரர்களுக்கு ஒரு நாடு எவ்வளவுதான் மதிப்பும், பரிசுகளும் வழங்கினாலும் அவர்களும் மனிதர்கள்தானே? தனியொரு மனிதனைக் கொன்றால் குற்றம் என்று சட்டம் சொல்கிறது. நீதிமன்றம் தண்டனை தருகிறது. ஆனால், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்கிறவனுக்கு இதென்ன வீரப்பதக்கம்? என்கிற நியாய உணர்வு அடிக்கடி ராணுவ வீரர்களுக்குள் விம்மி எழுந்து பாடாய்ப் படுத்துகிறது.

அதன் விளைவு?

``மன அழுத்தத்தால் உந்தப்பட்ட ராணுவ வீரர்கள் தங்கள் மேலதிகாரியை, சக வீரனைத் திடீரென்று, சுட்டுக் கொல்கிறார்கள். சிலர் தம்மைத் தாமே சுட்டுக் கொண்டு சாகிறார்கள்’’ என்று ராணுவ தளபதி ஜே.ஜே. சிங் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மனரீதியாகப் பாதிக்கப்பட்ட சில வீரர்கள் விபரீதமான முடிவும் எடுக்கிறார்கள். காஷ்மீரில் ராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புச் சலுகையின் பயன்களைப் பெற மோசமான குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.

தீவிரவாதிகளைக் கொன்றால் அந்தச் சிப்பாய்க்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசும் பதவி உயர்வும் கிடைக்கும் என்பதால் பல அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்கள் தேடப்படும் தீவிரவாதிகள் என்று நிரூபிப்பதற்கான ஆதாரங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

இப்போது காஷ்மீர் மக்கள் தீவிரவாதிகளை அல்ல, இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போராடத் தொடங்கியிருக்கிறார்கள்.

மக்களின் கோப உணர்ச்சியைத் தணிக்கும் விதத்தில் இவ்வாறு தீவிரவாதி என்று கதை கட்டி அப்பாவிகளைக் கொன்ற சில ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

******************

ஏய் ராஜன், எங்கே ஓடுகிறாய்?

பதவி வெறியில் தனது குடும்பத்தையே கொன்ற கொலைகாரன் நேபாள மன்னன் ஞானேந்திரா. குடுமபத்தையே கொன்றவன் குடிமக்களையா விட்டு வைப்பான். கொடுங்கோலன் மனம்போன போக்கில் ஆடினான்.

அடிமைகளாய்ப் பணிந்து கிடந்த எளிய மக்கள், ராணுவ வீரர்களாய்க் கிளர்ந்தெழுந்தார்கள். ஒழிந்தது மன்னராட்சி.

இப்போது, மன்னனின் சொத்துக்களையெல்லாம் அரசுடைமை ஆக்கு என்று மக்கள் எழுப்பிய முழக்கம் நடைமுறைக்கு வரப்போகிறது.

ஞானேந்திரா எங்கே ஓடுவதென்று திகிலுற்று விழிக்கிறான்.

******************
நடந்தது போதும் குடியரசுத் தினத்தன்று பத்திரிகைகளில் வெளியான `காந்தியப் போராட்டச் சிற்பம்’ பல சிந்தனைக் கிளர்த்துகிறது.

காந்திக்கும் மக்களுக்கும் எவ்வளவுதூரம் இடைவெளி! கடைசியில் நிற்கும் சிற்பம் காந்தியைத் தொடர்வோம் என்று தன் தோழனைக் கூப்பிடுவதுபோலவும் அந்தத் தோழன் பாவம், காந்திக்குப் பின்னால் நடந்தது போதும், வேறு பாதையைப் பார்க்கலாமே என்றுடிக்கப்போய் மானபங்கம் செய்யப்பட்டும் கொடுமைகள், வேலையில்லாத் திண்டாட்டம், விரக்தியடைந்த இளைஞர்கள் ஆயுதமேந்திக் காடுகளுக்குள் திரிதல்... இவ்வளவு அவலங்கள் இருக்கும்போது.

ஆங்கிலோ டச்சு நிறுவனமான 'கோரஸ்’ என்கிற உருக்கு நிறுவனத்தை டாட்டா வாங்கிவிட்டதில் தினமணிக்கும் ஆடிட்டர் குருமூர்த்திக்கும் ஆனந்தம் பிடிபடவில்லை.

******************

`எங்கும் டாட்டா என்பதே பேச்சு’ என்று தலையங்கம், `இந்தியர்களைப் பெருமைப்பட வைத்த ரத்தன் டாட்டா’ என்று புகழாரம்.

டாட்டா என்கிற தனிநபர் மேலும் மேலும் பணக்காரர் ஆவதில் குருமூர்த்திகளுக்கு என்ன இத்தனை கொண்டாட்டம்.

இதிலே இந்திர்களுக்கு என்ன பெருமை?

ஆம், இந்தியா என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய தனி நபர்களே என்பதை ஆரவாரத்துடன் அறிவிக்கிறார்கள். அது சரி ஆனால், டாட்டா இந்தியர்தானா?

இனத்தால் அவர் பார்சி. தொழில் முறையில் இந்தியர்.

தொடரும் சொத்துக்களால் சர்வ தேசப் பிரஜை.

குடும்பக் கல்லறை கட்டி `உறங்கப் போகும்’ உரிமையால் பிரெஞ்சுக்காரர்.

ஒன்று தெரிகிறது; சுரண்டலுக்கு தேச எல்லை கிடையாது.

******************

புதிய பொருளாதாரம்

"புத்திசாலி சேமிக்கிறான்; அதிபுத்திசாலி கடன் வாங்குகிறன்.’’

- நிதியமைச்சர் ப.சிதம்பரம்

வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் ஏமாற்றுகிறவன் பொருளாதார மேதை. கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறவன் புதிய பொருளாதாரக் கொள்கையின் தீர்க்கதரிசி என்று தொடரலாமே!

******************

நேபாளத்தில் கலவரத்தைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ். நேபாளத்தின் தென் பகுதிகளில் நடைபெறும் கலவரம் விசுவரூபம் எடுப்பதற்கு, இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் இயக்கங்கள் காரணம் என்று புகார் கூறியிருக்கிறார் நேபாள மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைர்களில் ஒருவரான ஆர். சந்திரபிரகாஷ் கஜுரேல்.

நேபாளத்தில் அமைதி நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவி வருகிறது. அதை நாங்கள் வரவேற்கிறோம். மாவோயிஸ்ட் இயக்கம் எப்போதும் இந்தியாவுக்கு எதிராக இருந்ததில்லை. அவ்வப்போது இந்திய அரசு எடுத்த நிலைகளில்தான் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நேபாளத்தின் தென்பகுதியில் தேரி உள்ளிட்ட பிராந்தியங்களில் நடக்கும் கலவரங்களை, மன்னர் ஞானேந்திராவின் எடுபிடிகள்தான் தூண்டிவிடுகிறார்கள்.

நேபாளத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மதவாதக் கட்சிகளின் தலைவர்கள், உத்தரப் பிரதேசத்தில் தற்போது கலவரம் நடைபெறும் கோரக்பூருக்கு வந்து ஆர்எஸ்எஸ், விஎச்பி பேரணியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், ஆர்எஸ்எஸ், வி.எச்.பி. அமைப்பினர் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து தங்கள் ஆதரவாளர்களை நேபாளத்துக்கு அனுப்பி கலவரத்தை மேலும் தூண்டி விடுகிறார்கள்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com