Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
டிசம்பர் 2007

சிந்தனையும் பகுத்தறிவும்
- தந்தை பெரியார்

இராமன் செய்த கொடுமை

இராமனைச் செருப்பால் அடித்தால் என்ன? இராமன் சூத்திரனைக் கொல்லுங்கறானே! சூத்திரனையும் கொன்னு இருக்கிறானே!

யார்டா நீ, சூத்திரனா! போடு, வெட்டு துண்டு துண்டா! வெட்டினான்! துண்டாடினானே! பார்ப்பானைக் கடவுள்னு கும்பிடாமே சாமியைக் கும்பிட்ட அவனை விட்டுவிடுவதா என்று இராமன் சொல்லுகிறான். இராமன் என்ன சொல்கிறான்? ஒரு சூத்திரன் கடவுளைக் கும்பிட்டான்; பார்ப்பான் செத்துட்டான்னு கதை கட்டி, பார்ப்பான் பிணத்தை எடுத்துட்டு வந்து இராமன் வீட்டிலே போட்டான்.

“ஏண்டா, அவன் செத்தான்’’ செத்தா என்னாடா கெட்டுப்போச்சு பார்ப்பான் சாகமாட்டானே நேராக மோட்சத்துக்குத்தானே போக வேண்டியவன். உள் நாட்டில் அக்கிரமம் நடக்குது! என்னடா அக்கிரமம் என்னான்? தேடிப்பார்! நான் என்னடா சூத்திரன் கடவுளைக் கும்பிட்டு தவம் செய்துகொண்டிருக்கிறான். “என்னடா பண்றே’’ என்று கேட்டான்.

“கடவுளைக் கும்பிட்டுட்டு இருக்கிறேன்’’ என்றான். “யாரடா சூத்திரப் பயல்! சூத்திரப் பயல் பார்ப்பானைக் கும்பிடாமல் கடவுளைக் கும்பிட்டால் பார்ப்பான் சாவாது இருப்பானா?’’ அப்படீன்னு சொல்லி அவனை (சம்பூகனை) துண்டு துண்டா கசாப்புக் கடைக்காரன் மாதிரி வெட்டுறான்.

பிறகு பார்ப்பான் பிழைச்சுட்டான். இப்ப நாமெல்லாம் இல்லாது இருந்தா இப்ப என்ன நடக்கும்? எவன் சாமியைக் கும்பிட்டுக்கிட்டு இருக்கிறானோ அவனையெல்லாம் பார்ப் பான் வெட்டிக்கிட்டு இருப்பான். “சாத்திரம் கெட்டுப் போனது நம்பளால் என்று தான்’’ சொல்லுகின்றான்.

சரியான மனுதர்மப்படி அரசர்கள் ஆளாததால் சட்டம் கெட்டுப்போச்சு; அதனாலே ஆட்சியை ஒழியுன்னு சொல்றான். கீதோபதேசம் இதுமாதிரி ஒவ்வொன்றையும் கிருஷ்ணன் பெயராலே சொன்னான். என்னடா கிருஷ்ணன் சொன்னான்? நான்தான் நாலு சாதியை உண்டாக்கியிருக்கிறேன்; ஒவ்வொரு சாதியை இன்னின்ன இடத்தில் இருந்து பிறப்பிச்சேன். சூத்திரனைக் காலில் இருந்து பிறப்பிச்சேன். ஏன்னா அது இழிவான இடம்.

அவன் நாலாவது சாதி; அதனால் அவன் பார்ப்பானுக்கு அடிமையாக இருந்து வேலை செய்யணும்! செய்யாட்டி என்ன? அவனுக்குத் தண்டனை நரகத்திலே போட்டு அடைச்சிடுவேன் - கிருஷ்ணன் சொன்னான் இதுதான் கீதை. இதனால் பார்ப்பான் கீதையைத் தலைமேல் வச்சிக்கிட்டு குதிக்கிறான். அந்தக் கிருஷ்ணனை செருப்பால் அடிக்காமல் இருந்தால் நம்ம கதி என்ன ஆகும்? அடிக்கணுங்கற பேச்சுதான் கடினமாகத் தோன்றுகிறதே தவிர அவன் தேவடியாள் மகன்னு சொல்றது அவ்வளவு கடினமா தோண்றது இல்லையே!

யாருக்கு மனம் புண்ணாகும்?

இப்படியாக அநேக காரியங்களில் கடவுள், மதம், சாஸ்திரம் மீறக்கூடாது. பேசக்கூடாது. பேசினால் மனம் புண்ணாகும்; பேசினால் மதத்துக்குக் கேடு வரும். இந்த மாதிரி அமைப்பிலே மனுஷனைத் தலை எடுக்க விடாமல் பண்ணிட்டான்.

நடந்துக்கிட்டு இருக்கிறது. அறிவுள்ள மனிதனுக்கு நம்ம நாட்டிலே இருக்கிற இந்த நடப்புத்தானே! அநியாயம். எவனாவது வெளிநாட்டுக்காரன் பார்த்தா என்ன சொல்லு வான்? நம்மாளை “என்னடா பண்ணிக்கிட்டு இருக்கிறேன்னா, “கோயிலுக்கு போறேன்னு’’ சொல்லுவான்.

அவன், என்னடா சாமி கும்பிடப் போறேன்னா, அவன் என்னடா சாமின்னா ஒரு விக்ரகம் இருக்கிறது. அது என்னடான்னா கல்லு, மண், அட மடப்பசங்களா! கல்லுன்னா சாமின்னு உனக்கு எவண்டா சொன்னான் எனக் கேட்பானா இல்லையா பாரு? இந்தப் படி, இந்த ஊர்க்காரன் கேட்கமாட்டான்.

இங்கேயும் கேட்கமாட்டான். முஸ்லிம், அவனும் நமக்குப் பயந்துட்டு கேட்க மாட்டான். கிருத்துவனும் அப்படித்தான் சொல்லுவான். ஆனால் கல்லை சாமின்னு எந்த ஆதாரத் தைக் கொண்டு சொல்லுவான்? நம்புகிறதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? எந்தப் பயல் மோட்சம் நரகத்தைப் பார்த்திட்டு வந்தவன்? கோபம்தான் வருகிறது!
தவிர, உலகமே பழிக்கும் படியான நிலைமை நமக்கு வரவேண்டாமே! யார்தான் இதுக்குப் பாடுபடுகிறது? எல்லாமே அவனவன் பெருமைக்குப் பாடுபட்டு பார்ப்பான் காலில் விழுந்து பெரிய பக்தன் ஆகிட்டானா, நம்ம நிலைக்குப் பாடுபடறதுக்கு யார் இருக்கிறார்கள்? ஏன் இத்தனை நாளாக இந்தக் கதி ஆகணும்? அதனாலேதான் இந்த ஸ்தாபனம் பலப்படுத்தி ஆக வேணும்! இதன் மூலமாகத் தான் மனுசன், மனுசன் ஆவான்.

எல்லாரையும் மனிதத் தன்மை உடையவர்களாக ஆக்கணும். இந்தப் பிரச்சாரம் வலுக்கணும்! தைரியமா சொல்லணும்! கஷ்டம் வந்தாலும் அனுபவிக்கணும்! அனுபவிச்சா என்ன கெட் டுப்போச்சு? எதுக்காக ஒவ்வொரு காலத்திலும் பலாத்காரத்தில் இறங்கித்தான் துலுக்கனும் காப்பாத்தினான் அவன் மதத்தை! கிருத்தவனும் காப்பாத்தினான் அவன் மதத்தை!
இந்துக்கள் என்கிற பார்ப்பானும் காப்பாத்தினான் அவன் மதத்தை! மாறுதலா இருந்தான்; பலாத்காரத்தில் இறங்கினான் எதிரியும். நானும் அவசரம் இல்லை காலம் கொஞ்ச நல்லா இருக்குது; அறிவு தெளிவினாலே சாதிக்கலாம்னு நாம் நினைக்கிறோம்.

புத்தன் எப்படி ஒழிஞ்சான்? புத்த மதம் எப்படி ஒழிஞ்சுது? புத்த கொள்கைகள்னா வெட்டுன்னான்! கொடுமுடி சிஷ்யர்களையெல்லாம் வெட்டுன்னான். அவன் வீட்டுக்கெல்லாம் நெருப்பு வெச்சு கொளுத்துன்னான்! மடத்தையெல்லாம் சுவாதீனப்படுத்திட்டுச் சொல்லச்சொன்னான்!

சமண மதம் எப்படி ஒழிஞ்சுது? சமணர்களையெல்லாம் கழுவேற்றினான்! 8000 பேரைக் கழுவேற்றினான்! இன்னைக்கும் கழுவேற்றின உற்சவம் நடக்குது. இன்னைக்கும் தேவாரத்திலும், பிரபந்தத்திலும் சமணர்களைக் கழுவேற்றின கதை இருக்கு. சமணன் கொள்கைகளை ஆதரித்தவனை வெட்டு, அவனைக் கொல்லணும்! வெட்டணும்! அவனைச் சித்திரவதை பண்ணனும்!

பெண்டாட்டி பிள்ளைகளைக் கற்பழிக்கணும்! அவன்களைக் கழுவேற்றனும்னு இருக்கு. இன்னிக்கும் பார்க்கிறேனே! நான் பேசறதுதான் கடுமையா பேசறேன்னு நினைப்பானே தவிர, சைவனோ, வைஷ்ணவனோ, மத்த பக்திக்காரனோ தேவாரத்தைப் படிச்சா இம் மாதிரி நூற்றுக்கணக்கான கருத்து இருக்கு! எங்கு கண்டாலும் கொல்லு, அவன் பெண்டாட்டி பிள்ளைகளை கற்பழிக்க பெருமாளே எங்களுக்கு அருள் செய், பிரபந்தத்திலே போட்டு இருக்கிறான்.

எவன் ஒருத்தன் கட வுளை நம்பலையோ அவனையெல்லாம் வெட்டு! பைபிளில் சொல்லி இருக்கிறான் - அவன் கடவுள் இல்லேங்கறானா? அவன் மடையன், அவன் அயோக்கியன்! ஒவ்வொரு மதத்திலும் அப்படித் தான் அவனவனும் எழுதி இருக்கிறான்.

நாம் ஏன் சொல்லக் கூடாது? எவன் கடவுளைப் பரப்புகிறானோ, எவன் கடவுளைக் கும்பிடுகிறானோ அவன் மடையன்னு ஏன் சொல்லக்கூடாது? கும்பிடாதவனை மடையன்னா நாம் கும்பிடுகிறவனை மடை யன்னா என்ன? நல்லாக் கவனிக்கவும்.

அதற்குப் பதில் நாங்கள் இதைத்தான் சொல்லுவோம். கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் அயோக்கியன்; நம்புகிறவன் மடையன் - இவற்றால் பலன் அடைகிறவன் மகா மகா அயோக்கியன்; அப்படின்னு சொல்லுவோம்.

கிறி°துவன் நம்மையெல்லாம் அஞ்ஞானி; புத்தியில்லாதவன், மடையன்கிறாங்க. மு°லீம் பேசிட்டுத்தான் இருக்கிறாங்கோ, அவங்களும் மத்தவனையெல்லாம் காட்டு மிராண்டிங்கறாங்கோ, நமக்கு மானமில்லே? இவர்களில் எவன் மறுபிறப்பு இன்னதுன்னு சொல்லுவான்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP