Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஆகஸ்டு 2007

மண்ணின் மைந்தர்கள்

கவிஞர் பல்லவன்

Trees நாங்கள் இந்த
மண்ணின் மைந்தர்கள்
முன் தோன்றிய
மூத்தகுடிகள்

மழைமேகக் காதலர்கள்
மகிழ்ந்து பறவைகள்
ஆலோலம் பாடும்
சங்கீத மேடைகள்!

மணிநிழல் பரப்பும்
மரகதக் குடைகள்
மாடு ஆடுகளின்
ஓய்வுக் கூடங்கள்
மாணவர்களின்
பாடசாலைகள்
மழைலையரின்
விளையாட்டுத் திடல்கள்

மண்வளம் காக்கும்
பசுமைக் குடில்கள்
மனம் கலந்த காதலர்கள்
மறைந்திருந்து பேசும்
ஒதக்குப் புறங்கள்

ஏழைகளின் அடுப்பெரியும்
இலவச வீடுகள்
இயற்கை நட்டுவைத்த
ஆச்சரியக் குறிகள்!

கொஞ்சம் மண்ணும்
கொஞ்சம் நீரும்
கொஞ்சம் ஒளியுமே
எங்களது
குறைந்தபட்ச தேவைகள்!

கனிக் குலைகளால்
விதை மணிகளால்
விருந்தாவோம்
உங்கள் பசிக்கு!

வேரால் விழுதால்
பட்டைகளால்
கொட்டைகளால்
இலைகளால்
ஈர்க்குகளால்
மருந்தாவோம்
உங்கள் நோய்க்கு!

கிளைக் கைளில்
பூக்களைச் சுமந்து
புதுவசந்தங்களால்
இந்தப் பூமியை
அழகுப் படுத்துவோம்!

நீங்கள் இளைப்பாற
நிழல் பரப்பு
களைப்பாறக்
கவரி வீசுவோம்!

உங்கள் நாசிகளுக்கு
மூச்சுக் காற்றாவோம்!
நீங்கள் விடும்
நச்சுக் காற்றை
நல்ல காற்றாக
மாற்றும்
சுத்திகரிப்பு
நிலையங்களாகி நிற்போம்!

மண்ணில் இருந்தாலும்
விண்ணைத் தொடுவதே
எங்கள் இலட்சியம்!

முடிவின் தொடக்கமாய்
மீண்டும் முளைத்தெழ
விட்டுச் செல்வோம்
வீரிய விதைகளை
உங்கள் கைகளில்!

இயற்கைக்கு
எதிராக
ஆயுதங்களுடன்
அலையும்
மனித குலத்தீர்!

எங்களை அழித்து
உங்களை
அழித்துக் கொள்ளாதீர்!

நாங்கள்
நிரந்தரமானவர்கள்
அழிவதே இல்லை!

நாளை
மனிதர்கள் இல்லாமல்
உலகம் இருக்கலாம்
மரங்கள் இல்லாமல்
உலகம் இருக்குமா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP