Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஏப்ரல் 2008

கிழவியின் காணிக்கை
கவிஞர் பல்லவன்

புகழ்பெற்ற
தேவாலயம்
அது.

ஜெபம் செய்ய
ஏராளமானோர்
அங்கே
திரண்டிருந்தனர்!

தமது
கோச்சுவண்டிகளில்
வந்து இறங்கிக்
கொண்டிருந்தனர்
பிரபுக்கள் சிலர்!

அவர்களின்
வண்டிகளில்
பணமூட்டைகள்
தென்பட்டன!

இறைஇல்லத்தில்
வைக்கப்பட்டிருந்த
காணிக்கை உண்டியலின்
அருகில் சென்ற
பிரபுக்கள்...

உண்டியலின்
வாய்க்குள்
கொண்டு வந்த
மூட்டைகளைக்
கொட்டியவாறே
கர்வத்தோடு
அங்கிருந்தவர்களை
நோட்டமிட்டார்கள்!

மூத்து முதிர்ந்த
மூதாட்டி ஒருத்தி
அந்த உண்டியல்
பக்கம் வந்து நின்றாள்
தள்ளாடியபடியே....

அந்தக் கிழவியைக்
கேலியும் கிண்டலுமாகப்
பார்த்தார்கள்
அங்கே இருந்தார்கள்!

தன்னை
அவமதிப்பாரை
அக்கிழவி
கண்டுகொள்ளவே
இல்லை!

எதையோ தேடினாள்
தன்னிடம்.

அவள் கைக்குக்
கிடைத்து விட்டது
அந்த
ஒற்றை நாணயம்!

பக்தி மீதூர
கண்ணீர் மல்க
அந்த நாணயத்தைக்
காணிக்கையாக்கினாள்
கிழவி!

அவனது
காணிக்கையை
அங்கே இருந்த
உல்லாசிகள்
ஏளனப்படுத்தினர்!

ஆலயத்தை விட்டு
வேதனையோடு
வெளியேறினாள்
கிழவி.

ஓடோடி வந்து
ஆரத்தழுவிக்
கொண்டார்
அந்தக் கிழவியை
ஏசுபெருமகன்!

தாயே!
தேவனால்
ஆசிர்வதிக்கப்பட்ட
பெருமைக்குரியவள்
நீ!

உமது
காணிக்கையைக்
கையேந்திக் கொண்டார்
பரமபிதா!

கிழவியின்
கண்ணீரைத் துடைத்தார்
ஏசய்யா!

ஆடம்பரத்தோடும்
ஆர்ப்பாட்டத்தோடும்
பணத்தைக்
கொண்டுவந்து கொட்டி
ஆலயத்தைக்
கேவலப்படுத்துகிறார்கள்
பிரபுக்கள்.

ஒருபோதும்
அவர்களது
காணிக்கைகளை
ஏற்பதே இல்லை
தேவாதி தேவன்.

தங்கள் வீட்டில்
குவிந்திருக்கும்
செல்வத்தில்
கொஞ்சம் எடுத்து
வந்து போட்டு விட்டுப்
பெருமையடித்துக்
கொள்பவர்கள்
இந்தத்
தனவந்தர்கள்!

தாயே! நீயோ
உன்னிடம் இருந்த
ஒரே ஒரு
நாணயத்தை
அந்த உண்டியலிலிட்டுப்
புனிதப்படுத்தி
விட்டாய்!

இருப்பதில்
கொஞ்சத்தை
மட்டும்
இழந்தவர்கள்
அவர்கள்!

இருந்ததை
முழுவதுமாக
இழந்தவள்
அல்லவா நீ!

உனது
காணிக்கை மட்டுமே
ஆண்டவரின்
கஜானாவை
நிரப்பி இருக்கும்!

கிழவியின்
மனநோக்காட்டுக்கு
மருந்திட்டு
அனுப்பினார்
மனிதப் புனிதர்
ஏசு!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com