Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Anangu
Anangu Logo
செப்டம்பர் - டிசம்பர் 2007


தமிழ்நதி கவிதைகள்

கலகக்காரன்

கையிலொரு மதுக்குவளையுடன்
தாவரங்களுடனும்
தத்தும் அணில்களுடனும் பேசுகிறவன்
புனித பீடங்களின் மீதெல்லாம்
சிறுநீர் கழிக்கிறவன்
புனையப்படும் தேவதைகளில்
பச்சை இறைச்சி வாடையடிக்குதென
உரத்த சிரிப்புடனே எள்ளுபவன்
துணுக்குறும்படியான கெட்ட வார்த்தைகளை
வாசிப்பிற்கிடையில் இயல்பேயெனப் போட்டு
அடுத்த வரியில்
அன்றைய காலநிலை குறித்துப் பேசிச் செல்பவன்
இன்னபிறவிதங்களில்
கலகக்காரச் சட்டகத்துள் அடைபட்டிருந்தவனை
பன்றிகள் சேறுழன்று திரியும் தெருவொன்றில்
தற்செயலாகச் சந்தித்தேன்

குனிந்து தலையிடிபடாமல்
குடிசையினுள் வரும்படி அழைத்தான்
தூளி நனைத்த மூத்திரம்
எங்களை நெருக்குவதற்கிடையில்
துடைத்துவிடும்படி
மற்றொரு மூலையில் சுருண்டிருந்த மனைவியை
கெட்டவார்த்தை இணைப்புடன் ஏவியபின்
இலக்கியம் பேசினான்
விடைபெறும்போது
தொய்ந்திருந்த சட்டைப்பையைத் தட்டி
பசிக்குதென்று இருநூறு ரூபா கடன்கேட்டுத் தாழ்ந்த
விரல்களைப் பார்த்தேன்
எரவாணத்தில் இடித்துக் கொள்ளாமலே
கண்கள் கலங்கிவிட்டதெனக்கு.

சிறகுதிர்க்கும் தேவதைகள்

ஒவ்வொரு தடவை அழைக்கும்போதும்
வேலைச் சிலுவையில் அறையப்பட்ட
உன் உள்ளங்கைக் குருதியைப்
பருகத் தருகிறாய்

வெல்வதெற்கான உன் சூதாட்டங்களில்
பகடையென
உருட்டப்படு மென் உணர்வுகள்

காதலும் காமமும்
போர்தொடுக்கும் பெருவெளியில்
நிராயுதபாணியாய் நிறுத்தப்பட்டவள்
தனிமையின் கல்லுரசிப்
பொறிபறக்கும் சொற்களால்
கிழித்துக்கொள்கிறேன் நம் காதலை
ஆணிகள் இறுக அடிக்கடி இறப்பதாய்
சொல்லிக் கொண்டே
தொலைபேசியை உயிர்ப்பிக்கிறாய்
அந்த நாளைச் சவப்பெட்டிக்குள்
வைத்து மூடி எழுந்திருக்கிறேன்

காத்திருந்தே கழியும் இரவுகளின் முடிவில்
தேவதைகள் சிறகுதிர்ந்து
பேயுருக்கொள்ளல் பற்றி
நேரமிருக்கும் யாரிடமாவது பேச வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
Subbiah
2008-03-04 12:49:00
subb32@yahoo.com

very nice site, vazhga tamilnadhi, kavithaigal migavum arumai, valarga avar pugal.

மயூரா ரத்தினசாமி
2010-01-13 04:39:00
mayura_rathinaswamy@yahoo.co.in

முதல் கவிதை நன்று. எங்கள் கோயமுத்துார் பகுதியில் குறிப்பிடும் எறவாணம் என்ற சொல்லை தமிழ்நதி பிரயோகித்திருப்பது ஆச்சரியம். அங்கும் (இலங்கையில்) எறவாணம் என்ற சொல் உண்டோ தமிழ்நதி? / மயூரா ரத்தினசாமி



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP