Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam wrapperMaatru Maruthuvam
அக்டோபர் 2008

தேடிப்ப(பி)டித்த கவிதைகள்
வைரமுத்து

வர்ணங்களின் கலப்பு மணத்தை
வானவில் என்பீர்கள்.
பூக்கள் கலப்பு மணம்
புரிந்துகொண்டால்
மாலைகள் என்று சொல்லித்
தோளிலே அணிவீர்கள்
கட்சிகளின் கலப்பு மணத்தைக்
கூட்டணி என்று சொல்லிக்
கும்பிடுவீர்கள்.

கலர்த்துணிகள் கலப்புமணம்
புரிந்துகொண்டால்
தேசியக்கொடி என்று
சிரம்தாழ்ந்துவீர்கள்
ஓர் ஆணும் பெண்ணும்
கலப்புமணம் புரிந்தால் மட்டும்
காலிபண்ணச் சொல்வீர்கள்
என்ன செய்வது ?
நம் ஊறில்
கொசுக்களைவும் சாதிகளையும்
ஒழிப்பதற்கு இன்னும்
உத்தரவாதமில்லை.

உன்சாலையில்
மரங்கள் பூக்களைப்
பரப்பி வைக்கலாம் ;
ஆனால் மனிதர்கள்
முட்களைப்பரப்பி வைக்கலாம்
நீ
பூவையும் எடுத்துக் கொள்
முள்ளையும் எடுத்துக் கொள்
அந்தப் பூவைச் சட்டையில் குத்திக்
முள்ளைக் குண்டூசியாக்கிக் கொள்



எந்திர மனிதா !
இன்று முதல்
சிரிக்கப் பழகு
கண்ணீர் சுண்டிக்
கடலில் எறி
எரிமலைக் குழம்பா?
இரும்பு காய்ச்சு பூகம்பா?
பூச்செடிகளை மாற்றி நடு,
தாடி, சோகம் இரண்டையும் ஒரே
கத்தியால் மழித்து விடு
- நன்றி : வைரமுத்து


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.