சர்க்கரை நோய்... ஏன்?
கணையம் இன்சூலினை சுரக்க வில்லை என்றுதான். ஆனால் இன்சூலின் ஏன் சுரக்கவில்லை?
என்று யாரும் கூறுவது கிடையாது. காரணங்கள் இதோ,
1. நாம் சர்க்கரையும், இனிப்பும் 6 மடங்கு அதிகமாக உண்கிறோம். அதன்பொருட்டு கணையம் அதிகமாக வேலைச் செய்து, சோர்ந்து, களைத்து விடுகிறது.
2. ஆறு சுவைகளில், 5 சுவையை மட்டும் உண்கிறோம். கசப்பைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. கசப்பை உணவில் சேர்க்காதது பெரிய குறையென்று யாரும் உணர்வது கிடையாது.
3. நாம் அதிகமாக இனிப்பு சாப்பிடுகிறோமே அதற்காவது கொஞ்சம் கசப்பைச் சேர்த்து உண்போம் என்று கூட எண்ணுவது கிடையாது.
4. காரம், உப்பு, புளிப்பு, துவர்ப்பு, இவை நான்கும் அதிகமானால், உடனே நாவின் மூலமாக நமக்குத் தெரிகிறது.
அதனால் அவைகளை அளவோடு உண்கிறோம். ஆனால் இனிப்பு மட்டும் தினசரி இந்த அளவு தான் உபயோகிக்க வேண்டும் என்று அளவே இல்லாமல், காலை முதல் மாலை வரை சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம்.
5. மேலும் உண்டவுடன் உடலுறவு கொள்வதால், கண்டிப்பாக சர்க்கரை நோய் வரும் என்பதை அறிந்து, இளம் தம்பதிகள், இரவு படுக்க இரண்டு மணி நேரம் முன்னதாகவே உணவருந்துவது நல்லது.
6. உடல் எடையின் அளவிற்கோ (அ) உடலின் தேவையான அளவிற்கோ (அ) உடல் உழைப்பின் அளவிற்கோ போதுமான உணவு (கலோரி) அருந்தாமல், அதிகமாகப் பெருந்தீனி திண்ணுதல்.
7. அரிசியால் செய்யப்பட்ட உணவுகளையே அதிகம் உண்ணுதல்.
இதுபோன்ற காரணங்கள் பல.
இவைகளையெல்லாம் அக்கறையோடு கவனத்தில் கொண்டால், சர்க்கரை நோயை இல்லாமல் செய்து விடலாம். வராமலும் காத்துக் கொள்ளலாம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|