Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam wrapperMaatru Maruthuvam
அக்டோபர் 2008

ஊட்டியில் ஹோமியோபதி மருந்து விற்பனைப் பிரிவு
மத்திய அரசு திட்டம்
டாக்டர் லெனின்

ஊட்டி மெரால்டை அடுத்துள்ள தக்கர் பாபா நகரில் ஹோமியோபதி மருந்துச் செடிகளின் பண்ணை பதிமூன்று ஏக்கர் அளவில் உள்ளது. இதனை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மத்திய ஓமியோபதி ஆராய்ச்சிக் கவுன்சில் பராமரித்து வருகிறது. இங்கு உள்நாட்டு, வெளிநாட்டு மூலிகைச் செடிகளும், ஓமியோபதி மருத்துவ குணம் வாய்ந்த செடிகளும் நல்ல முறையில் வளர்ந்து வருகின்றன. இதற்கு ஜெர்மனியின் தட்பவெப்ப நிலையும், ஊட்டியின் தட்ப வெப்பமும் ஒரே மாதிரியாக இருப்பது தான் காரணம். ஏனெனில் ஹோமியோபதி மருந்துச் செடிகளும், ஓமியோபதி மருத்துவமும் ஜெர்மனியில் தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் உலகம் முழுவதும், இன்றைக்கு ஆங்கில மருத்துவ அளவிற்கு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் ஊட்டியில் உள்ள ஓமியோபதி ஆய்வலர்களும், பொது மக்களும் ஒரு குறையாக நினைப்பது இங்கு ஓமியோபதி மருந்துக் கடை இல்லை என்பதைத் தான். இக்குறையை களைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் உத்தரவுப்படி புதுச்சேரியைச் சேர்ந்த மத்திய ஹோமியோபதி கவுன்சில் ஆலோசகரும், அறிவியல் ஆராய்ச்சிக்குழு உறுப்பினருமான டாக்டர் ப.உ.லெனின் ஆறுமுறை ஊட்டி மருந்துச் செடிகளின் பண்ணையை முழுமையாக ஆராய்ந்து தனது ஆய்வறிக் கையை சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார்.

அவரது பரிந்துரையை ஏற்ற மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஊட்டியில் மூன்று, மாதங்களுக்குள் ஓமியோபதி விற்பனைப் பிரிவை தொடங்க உத்தரவிட்டு, அதற்கான இறுதிகட்ட விற்பனைப் பிரிவை தொடங்க
உத்தரவிட்டு, அதற்கான இறுதிகட்ட வேலைகளை செய்யுமாறு டாக்டர் லெனின் பணித்தார். எல்லா வேலைகளையும் துரிதமாக செய்த டாக்டர் லெனின் செய்தியாளர்களிடம் கூறியதாவது. “ இந்தியாவிலேயே முதன் முறையாக ஹோமியோபதி மருந்துச் செடிகளின் பண்ணையும், ஓமியோபதி மருந்து ஆலையும், மருந்துகளின் விற்பனைப் பிரிவும் ஒரு சேர இருப்பது ஊட்டிக்கு பெரும் பெருமை சேர்க்கும். இனி ஊட்டியில் ஓமியோபதி மருந்துகளை மிகக்குறைந்த விலையில் யார் வேண்டுமானாலும் வாங்கி பயன்பெறலாம். மூன்று மாதங்களுக்குள் இதற்கான பணிகள் முடிவடைய முழு வீச்சில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. வெளிநாட்டு வகை மருந்துகளும், களிம்புகளும், டானிக்குகளும் மிகக் குறைந்த விலையில் இங்கு விற்பனை செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட் டுள்ளார். இலாப நோக்கம் என்பது இங்கு இருக்காது. பால்வினை நோய்கள், மூட்டு நோய்கள், சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா, அலர்ஜி, தொற்றுநோய்கள் போன்றவற்றிற்கு இங்கு தயாரிக்கப்படும் மருந்துகள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இதனால் அந்நிய செலாவணியை ஈட்ட முடியும். அரிய வகை மருந்துச் செடிகளைக் கொண்டு கேன்சருக் கான மருந்துகளைத் தயாரித்து குறைந்த விலையில் இங்கு விற்கவும், இந்தியா முழுமைக்கும் இதனை கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நில அளவைத் துறை அதிகாரி சுரேஷ் பாபு ராஜிடம் இதற்கான சில பணிகளை ஒப்படைத்துள் ளேன். வேலைகள் மிகவும் மந்தம் என்று புகார்கள் தொடர்ந்து வந்தால், இது மத்திய சுகாதராதத்துறையின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப் படும். பொதுமக்களின் பெரும் எதிர்ப் பார்ப்பை இந்த மருந்து விற்பனைப் பிரிவு நிறைவு செய்யும்” இவ்வாறு புதுச்சேரி டாக்டர் லெனின் கூறினார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com