Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam wrapperMaatru Maruthuvam
அக்டோபர் 2008

வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா
Dr. நா.சண்முகநாதன்

முதற்காதல் :

‘காதலின் தோற்றம் கள்ளக்காதலாகத் தான்’ துவங்கியது என ஆதிமனித வரலாற்றை ஆய்வு செய்த பேரறிஞர் பிரட்ரிக் ஏங்கெல்ஸ் விளக்குகிறார். ஆம், மனிதர்கள் நாடோடி வாழ்விலிருந்து மாறி ஓரிடத்தில் தங்கி கால் நடைகள், நிலம், அரசாட்சி என உடைமை களை சேகரித்துக் கொண்ட பிறகு அதை தொடர்ந்து ஆண்டு அனுபவித்து வருவதற்கு மூப்பும் மரணமும் முடிவுரை எழுதின. இந்த இயற்கை விதியை மதியால் வெல்ல தலைப்பட்ட மனிதன் ‘மரணத்தை’ ‘மகனின்’ மூலம் வெல்ல முயன்றான்.

அதுவரை பழக்கத்திலிருந்து பலதார மணமுறையில் ஒரு குழந்தையின் தாய் யாரென தெரிந்து கொள்ள முடியுமேயொழிய தந்தையை அறுதியிட்டு சொல்ல இயலாது. இது வாரிசுரிமையை உருவாக்க இடையூராய் இருந்ததால் ஒருத்திக்கு ஒருவன் (ஒருவனுக்கு ஒருத்தியல்ல) எனும் நிலை ஏற்பட்டது. பெண் ஆணுக்கு பின்தள்ளப்பட்டாள்.

பின்தள்ளப்பட்ட பெண் வாரிசை உருவாக்குமளவுக்கு மட்டுமே பாலுறவில் ஈடுபட அனுமதிக்கப்பட்டான். உண்மையான உணர்வுகள் ஒடுக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட பெண் உணர்வுகள் ஹிஸ்டிரீயாவாகவும் கள்ளக் காதலாகவும் கிளைத் தெழுந்தன. இதுவே ஏடறிந்த வரலாற்றில் பதிவான முதல் காதல்.

பெண்ணடிமைத் தனத்தின் பரிணாம வளர்ச்சியே பண்பாடு :

பெண் உடல் மீதான கட்டுபாடுகளே, பின்னர் பண்பாடாக பரிணமித்தது என சமூக வியாலாளர்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. இப்படியாக பெண்ணை உடலாலும் உணர்வாலும் பகலெல்லாம் ஒடுக்கிய பிறகு படுக்கையில் அவள் ஆணுக்கு முழு திருப்தியளிக்காதவளானாள். அன்னியப் பட்டுபோன பெண் அவனுக்கு புதிரானாள்.

இவற்றின் விளைவே பாலியல் தொழில் முதலாக சுய இன்பம் வரையிலான யாவும். வேறெந்த உயிரினத்தும் இல்லாத கொனேரியா - மனிதனின் இந்த ஆறாவது அறிவு பெற்றெடுத்த பிள்ளை.

பசியைப் போல தாகத்தைப் போல இயல்பான தேவையான செக்ஸ் பெண்ண டிமை மற்றும் பண்பாட்டு விழுமியங்களால் புதிரானது. புனிதமாக்கப்பட்டது. இதன் விளைவாக இன்று நடைபெறும் ஏராளமான குற்றங்களின் மூலகாரணமாக அது உள்ளது.

தனியுடைமை நலனுக்காகத் தான் பெண் அடிமையாக்கப்பட்டாள். கல்வி மறுக்கப்பட்டது, அரங்கம் மறுக்கப்பட்டது. ஆளுமை மறுக்கப்பட்டது. இப்போது மாறி வரும் சூதலில் பெண்ணடிமையும் அதனை போற்றி பாதுகாக்கும் பண்பாடும் தகர்ந்து வருகிறது.

ஆண் - பெண் உறவில் சமத்துவம் நிலவாமல், இதர உயிரினங்களைப் போன்ற இயல்பு நிலை திரும்பாமல் பாலியல் நலத்தை காக்கவோ பாலியல் நோய்களுக்கான மூலகாரணத்தை ஒழிக்கவோ முடிஹயாது.

திருத்தப்பட வேண்டிய பாலியல் சட்டங்கள் :

சமூக அளவில் பாலுறவு பற்றிய பார்வை ஜனநாயக நோக்கில் மாறி வந்தாலும் சட்டம் தன்னை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்பது வேடிக்கையானது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு நமது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377. இது 1860 ல் வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது. ஆட்சிகள் மாறிவிட்டன. காட்சிகள் மாறிவிட்டன. இந்த பிரிவு மட்டும் சாஸ்வதமானது. அண்மையில் மெக்ஸி கோவில் நடைபெற்ற 17 வது சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கில் பேசிய ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி அவர்கள் கூட ஓரினச் சேர்க்கை யாளர்களையும் பாலியல் தொழிலாளர் களையும் குற்றவாளிகள் என வரையறுக்கும் இந்தப் பிரிவு நீக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவத்துறை வளர்ச்சி பெற்று வருவதாக பெருமை கொள்ளும் இன்றும் அரவாணிகள் நலம் குறித்த சரியான ஆய்வுகள் இல்லை.

வேறெந்த மருத்துவ நலம் பிரிவிலும் சரியான சிகிச்சை அளிக்காததைப் போலவே பாலியல் நலத்திலும் ஆங்கில மருத்துவம் செயல்படுகிறது. இதய நோய் மருந்தின் பக்க விளைவை (வயாகரா) பாலியல் நல மருந்தாக பரிந்துரைக்கிறது.

பாலியல் சிக்கல்கள் யாவும் சமூக விழுமியங்கள், உளக் கூறு, உடற்குறிகள் மூன்றும் பிரிக்க முடியாதபடி பின்னப் பிணைந்தவை. இவற்றை மிகத்துல்லியமாக புரிந்து கொண்டு சிகிச்சையளிக்கவல்ல ஒரே மருத்துவம் ஓமியோபதி மட்டுமே என்று சொன்னால் அது மிகையல்ல.

காதலனைப் பிரிந்த அவனது இணையின் மொழியாக வள்ளுவப் பெருந்தகை வார்த்த சொற்களே இக் கட்டுரையின் தலைப்பு. காதலன் உடன் இருந்தாலும் கண் மூடமுடியவில்லை, அவனது குறும்பால், அவன் அருகில் இல்லாவிட்டாலும் கண்மூட முடியவில்லை. அவனது நினைவால், இந்த பதிவில் வெளிப்படும் பெண் உணர்வு எண்ணி வியக்கத்தக்கது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.