Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam wrapperMaatru Maruthuvam
அக்டோபர் 2008

நூல் அறிமுகம்
டாக்டர் இல்லாத பெண்களுக்கு


பெண்களுக்கான ஓர் ஆரோக்கிய வழிகாட்டி

தொகுதி - ஒன்று.
வெளியீடு : யுரேகா கல்வி இயக்கம், சென்னை.
Where women have no Docter : A Health Guide for women என்ற நூலின் தமிழ் மொழியாக்கம் நார்மன் பெத்யூன் கதை உள்ளிட்ட பல நல்ல நூல்களை மொழி யாக்கம் செய்துள்ள சொ. பிரபாகரன் இதனை மொழிபெயர்த்துள்ளார். பெண்களின் எல்லா பருவ நோய்கள், ஆரோக்கிய சிக்கல்கள், தீர்வுக்கான வழிமுறை கள் என விரிவாக எளிய நடையில் பக்கத்துக்கு பக்கம் படங்களுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள அரிய பெரிய நூல் இது.

இதன் விலை ரூ. 80-00தான். இது உங்கள் கைவசமிருந்தால் ஒரு பெண்கள் சிறப்பு மருத்துவர் உங்களோடு இருப்பது போல.

இந்நூலின் துவக்க வரிகளை வாசியுங்கள், “உலகம் முழுவதும், கிராமங்களிலும், நகர்புறங்களிலும் வாழும் கோடிக் கணக்கான பெண்களுக்கு மருத்துவர்கள் கிடைப்பதில்லை அல்லது உடல்நல சேவைகள் அவர்களால் தாக்கு பிடிக்க முடிந்த விலைக்கு கிடைப்பதில்லை. தங்கள் ஆரோக்கியம் குறித்து தெளிவான பயனுள்ள தகவல்களை பெற முடியாமை யாலும், உடல்நல சேவைகளை அணுக முடியாமையாலும், பல பெண்கள் தேவையற்ற முறையில் சிகிச்சையின்றி துயர் அடைகிறார்கள் அல்லது மரணம் அடைகிறார்கள்.

இப்புத்தகம் இந்த மாதிரியான பெண்களுக்காகவும், பெண்கள் ஆரோக்யத்தில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டுமென ஆர்வம் உள்ளவர்களுக்காகவும் எழுதப்பட்டுள்ளது”.
தேடிப் படிங்க !


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.