Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam wrapperMaatru Maruthuvam
அக்டோபர் 2008

ஓமியோபதி மருத்துவப் பட்டப் படிப்பு துறை அறிமுகம்


இன்றைய சமூகப் பொருளாதார சூழலில் மருததுவத் துறையும் காலத்திற்கேற்ற மாற்றங்களை கண்டு வருகிறது. அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவத்தைப் போலவே ஓமியோபதி என்னும் மாற்று மருத்துவமும் உலகெங்கும் பரவால கடைப் பிடிக்கப்படுகிறது. சர்ச்சைகளை மீறி ஓமியோபதியின் மகத்துவத்தை வல ஆங்கில மருத்துவர்களே அறிந்திருக்கின்றனர் என்பதே உண்மை.

ஒரு நோயை உருவாக்கும் தன்மை எதற்கு உள்ளதோ அதைக் கொண்டே அந்த நோயை குணப்படுத்த முடியும் என்பதே ஓமியோபதியின் அடிப்படைத் தத்துவம்.

கி.பி. 1796 ல் ஜெர்மனியின் டாக்டர் சாமுவேல் ஹானிமேன் என்பவரால் உருவாக் கப்பட்ட ஓமியோபதி மருத்துவம் சிறந்த வரலாற்றுச் சுவடுகளுடன் இன்று வளர்ந்துள்ளது. லா ஆப் சிமிலர்ஸ் என்னும் அடிப்படையில் மருந்து காணும் இந்த அற்புதமான மருத்துவமுறைக்கு இன்றைய யுகத்தில் அதிக தேவையும் பரவலான வரவேற்பும் இருப்பதைக் காண்கிறோம். பொது உடல்நல முறை போதிய அளவில் இல்லாத இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகையுள்ள நாடுகளில் திடீரென பரவும் நோய்களைத் தடுப்பதிலும் குணப்படுத்துவ திலும் ஓமியோபதி பெரும் பங்காற்றி வருவதை பலர் அறிவர். சிக்குன்குனியா போன்ற நோய்களை குணப்படுத்துவதில் இதன் சிறப்பான பங்கை வெளிநாடுகளும் இந்தியாவில் கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் நன்கு அறியும்.

இத்துறையில் முறையான படிப்புகள் தரப்படுவதால் கடந்த சில ஆண்டுகளாக இதைப் படிப்பதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். யார் படிக்கலம்? எம்.பி.பி.எஸ். படிப்பைப் போலவே இதற்கும் பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். பி.எச்.எம்.எஸ். எனப்படும் பாச்சலர் ஆப் ஓமியோபதிக் மெடிசின் அண்ட் சர்ஜரி படிப்பு 5 1,2 ஆண்டு படிப்பாகும். அதன்பின் ஒரு ஆண்டு காலத்திற்கு ஓமியோபதி டாக்டர் ஒருவரின் கீழ் இன்டர்ன்ஷிப் முறையில் பணியாற்ற வேண்டும்.

இந்தியாவில் இந்தப் படிப்பானது 160 கல்வி நிறுவனங்களில் நடத்தப்படுவதே பலருக்கும் தெரியாத என்பதே வியப்பான உண்மை. இந்தப் படிப்பை முடிப்பவர்கள் மேலும் ஒன்றரை ஆண்டு சிறப்பு உயர் படிப்பை முடித்த பின் வெளிநாடுகளுக்கு பணியாற்றச் செல்லலாம். இதில் எம். டி.படிப்பும் தரப்படுகிறது.

வாய்ப்புகள் எப்படி? எம்.பி.பி.எஸ். முடிப்பவரைப் போலவே பி.எச்.எம்.எஸ். முடிப்பவரும் தனியாக மருத்துவப் பயிற்சி செய்யலாம். இந்த மருத்துவத்தால் தீர்க்க முடியாத நோயே இல்லை என்று இந்த சிகிச்சை பெறுபவர்கள் கூறுகிறாôகள் (டாக்டர்கள் மட்டுமல்ல).

ஓமியோபதியிலும் ஆய்வுக்கான பல அம்சங்கள் உள்ளன. உலக அளவில் இந்த வாய்ப்புகள் இருக்கின்றன. ஓமியோபதி பேராசிரியர்களாகவும் பணியாற்றலாம்.

ஊதியம் எப்படி? இத்துறையில் ஒருவர் பெறும் ஊதியம் என்பது அவரின் திறமையைப் பொறுத்தது. ஓமியோபதி மருத்துவராக எந்த இடத்தில் பணி புரிகிறோம். சிகிச்சைக்கான கட்டணம் எவ்வளவு என்பதைப் பொறுத்தே ஒருவரின் ஊதியம் அமைகிறது. ஓமியோபதி சிறப்பு மருத்துவமனைகள் ஒரு ஆண்டு சிகிச்சைக்காக ஒருவரிடம் சுமார் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் செய்யும் மருத்துவர் 15 நாள் சிகிச்சைக்கு ரூ. 70 முதல் 200 வரை வாங்குகிறார்.

இங்கிலாந்து ராணி, பாலிவுட் நடிகர்கள் அமிதாப், ஹிரித்திக் ரோஷன் மற்றும் தொழிலதிபர் அம்பானி என வாழ்வின் மேல் மட்டத்தில் இருக்கும் பிரபலங்ள் கூட தங்களது அனைத்து மருத்துவப் பிரச்சனைகளுக்கும் ஓமியோ பதியை மட்டுமே நம்புகிறார்கள். தலைவலிக்கு தலைவலிக்கு இந்த மாத்திரை என்று அலோபதி போல அல்லாமல் நோயாளியை உளவியல் ரீதியாகவும் உடல் நல ரீதியாகவும் அணுகி அவருக்கான மாத்திரையை தேர்வு செய்து தரும் இந்த மருத்துவ முறை செலவு அதிகம் இல்லாதது என்பதே மிக ஆறுதலான முக்கியத் தகவல்.

சர்ஜரி போன்ற தேவைகள் ஏற்படும் போது அதை செய்து கொண்டு மேற்கொண்டு ஓமியோபதி சிகிச்சை பெறுவதும் வலியுறுத் தப்படுவதால் இன்று இதை நாடுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

எனவே இத்துறையில் ஏனோதானோ வென்று படித்து பயிற்சி செய்யாமல் சமுதாயக் கடமையுணர்வோடும் அர்ப்பணிப் புணர்வோடும் இதைப் படித்து முடித்து வெளி வருபவர்கள் இதில் கட்டாயம் சிறந்து விளங்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்நாட்டில் அரசு ஓமியோபதி கல்லூரி களும் தனியார் ஓமியோபதி கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.
நன்றி : 26-07-08 தினமலர்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com