Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam wrapperMaatru Maruthuvam
அக்டோபர் 2008

ஊட்டச்சத்து குறைவால் 80 குழந்தைகள் சாவு


மத்தியப் பிரதேசத்தின் கண்ட்வா மாவட்டத்தில் கடந்த 45 நாட்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் 80 குழந்தைகள் மாண் டுள்ளனர். 200 குழந்தைகள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் மரணம் அடையும் வேளையில் கூட மாநில பாஜக அரசு ஊமையாய் நின்று வேடிக்கை பார்க் கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் “நிலைமை ஒன்றும் மோசமாக இல்லை” என்று சாவதானமாகப் பதில் சொல்கிறது.

அண்மை நாட்களில் சாத்னா, சிவ்புரி மாவட்டகளிலும் ஊட்டச்சத்து பற்றாக்குறை யால் குழந்தைகள் மாண்டதாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கண்ட்வா மாவட்டத்தில் பழங்குடி மக்கள் பகுதியில் மட்டும் 1500 குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் உணவு பெறும் உரிமை இயக்கத்தினர் கடந்த ஏப்ரல் முதல் ஊட்டச்சத்து பற்றாக் குறையால் நூறுபேர் மடிந்துள்ளனர் என்று கூறுகிறார்கள். ஆனால் அரசு அதை மறுக்கிறது.

கடுமையான நடவடிக்கை

குழந்தைகளுக்கான பால் பவுடரில் ரசாயனப் பொருட்களைக் கலந்த நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக் கை எடுக்கப்படும் என்று சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நியூசிலாந்தைச் சேர்ந்த நிறுவனமொன்றின் துணை நிறுவனம் தயாரித்த பால் பவுடரை உட் கொண்ட சீன குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவம னையில் சேர்க்கப்பட்டுள்ளன. சன்லூ என்ற அந்த நிறுவனத்தின் 700 டன் பால் பவுடர் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் சீனப் பால் பவுடர்களுக்கு 3 மாத காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.