Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Maatru Maruthuvam
Maatru MaruthuvamMaatru Maruthuvam
ஜூலை 2008

ஹோமியோபதி தற்காப்பு மருந்துகள்

நவீன மருத்துவம் என இப்போது அறியப்படும் ஆங்கில மருத்துவத்தைவிட இளமையானது ஹோமியோபதி மருத்துவம். இதனை கண்டுபிடித்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த ஆங்கில மருத்துவர் மாமேதை சாமுவேல் ஹானிமன் (1755-1843) அவர்கள். மருந்து தயாரிப்பு, நோயறிதல், நலமாக்கலுக்காக உலகெங்கும் ஒப்புக்கொள்ளப் பட்ட ஒரே மாதிரியான அறிவியல்பூர்வமான விதிமுறைகளைக் கொண்டது ஹோமியோபதி.

186 நாடுகளில் சுமார் 15 லட்சம் மருத்துவர்கள் இம்மருத்துவ முறையை கடைப்பிடித்துச் சிகிச்சையளித்து வருகின்றனர். நாடாளு மன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம் மூலமாக நம் நாட்டில் ஹோமியோ மருத்துவம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பின்விளைவுகளற்ற, விரைவான, மென்மையான, முழுமையான, நம்பிக்கைக்குரிய, குறைந்த கட்டணமுடைய, எளிய இனிப்பு உருண்டைகளை கொண்ட சிகிச்சை முறை எனப் பரவலாக அறியப்பட்டுள்ள மருத்துவம் இது.

ஆங்கில மருத்துவ தடுப்பு மருந்துகளில் ஏற்படக்கூடிய பின்விளைவுகள், ஒவ்வாமை போன்ற எந்த சிரமமும் இல்லாத அதற்கு இணையான ஏன் அதைவிடவும் மேலான நோய் தடுக்கும் தன்மை கொண்ட தற்காப்பு மருந்துகள் உலகெங்கும் ஹோமியோபதி மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உலகளாவிய அனுபவங்கள் மற்றும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, தேர்ச்சிபெற்ற அரசு பதிவு பெற்ற மருத்துவர்களால் வடிவமைக்கப்பட்ட ஹோமியோ தற்காப்பு மருந்துப் பெட்டி இப்போது தமிழகத்திலும் புழக்கத்துக்கு வந்துள்ளது. நலம் ஹோமியோபதி தற்காப்பு மருந்துகள் பரப்புரைக் குழுவால் விநியோகிக்கப்படுகிறது.

இப்பெட்டியில் 50 மருந்துகள் இருக்கும். இவை வாய் வழியாக உட்கொள்ளும் எளிய இனிப்பு உருண்டைகள். இவற்றை கருத்தரித்த இரண்டாம் மாதம் முதலாகவே தாய் உட்கொண்டு வரவேண்டும். குழந்தை பிறந்தது முதல் 14 வயது வரை எடுத்துக் கொள்ளவேண்டும். இவை தவிர அவ்வப்போது வரும் கொள்ளை நோய்களுக்குமான தற்காப்பு மருந்துகளும் இப்பெட்டியில் உள்ளன.

கருத்தரித்தது முதல் 14 வயது வரை பயன்படுத்தத்தக்க ஹோமியோபதி
தற்காப்பு மருந்துப்பெட்டி

சர்வதேச ஹோமியோ மருத்துவ அறிஞர்கள் ஆய்வுப்படி 50 மருந்துகள் கொண்ட மருத்துவர்கள் பயன்படுத்தும் வகையிலான - தலா 20 வேளை / நபர்களுக்கான மருந்துப் பெட்டி. அஞ்சல் செலவு உட்பட ரூ. 520/-

DR. நா. சண்முகநாதன்
நலம் மருத்துவக் களம்
16, பொள்ளாச்சி சாலை,
வட்டாட்சியர் அலுவலகம் அருகில், பல்லடம் - 641 664.
செல்: 93600 64366DR.

Dr.M.R. ஜெகநாதன்
59, லெனின் தெரு.
கொசப்பாளையம்,
புதுச்சேரி - 605 013.
தொலைபேசி: (0413) 224 34 42;
செல்: 93447 68314.

DR. S. வெங்கடாசலம்
மாற்றுமருத்துவப் பிரச்சார சங்கம்
29/9-A, பழைய டிரங்க் ரோடு,
சாத்தூர் - 626 203.
செல்: 94431 45700

DR. S. தெய்வசிகாமணி
கண்ணம்மா காம்ப்ளக்ஸ் (மாடி)
164, காந்திஜி ரோடு, ஈரோடு.
செல்: 99761 85064


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Unable to connect to database! Please try again later.