Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Maatru Maruthuvam
Maatru MaruthuvamMaatru Maruthuvam
ஜூலை 2008

சிட்டுக்குருவிகள் எங்கே போயின?

மாடியில் தானியங்களைக் காய வைத்தால் கொத்தித் தின்ன கூட்டமாக வரும் சிட்டுக் குருவிகள் இன்று எங்கே போயின என்பது கேள்விக்குறியாகிவிட்டது. தொடக்கத்தில் அப்பாடா இவை ஒழிந்தன என்று கருதியவர்கள் கூட இன்று வழியை வழியைப் பார்த்துக் கண்ணும் நோகுது என்று பாடிக் கொண்டிருக்கும் சோகத்தைக் காண முடிகிறது.

உலகின் தட்பவெப்பநிலை மாற்றம், வாழ்நிலை மாற்றம் ஆகியவை இவற்றின் மறைவுக்கு காரணமாகி விட்டன. இவை அழிந்து வரும் பறவை இனம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. எலட்ரானிக் கதிர்வீச்சும், கைபேசிகளின் பெருக்கமும் குருவி இனம் அருகி வருவதற்குக் காரணமாகி விட்டன. இவைகளால் சிறிய எலக்ட்ரானிக் அதிர்வுகளைக் கூட தாங்க முடியவில்லை.

மெருகூட்டப்படும் அரிசி உள்ளிட்ட தானியங்கள், பூச்சி மருந்துகள், சுற்றுச்சூழல் மாசு, பயமுறுத்தும் இரைச்சலுடன் கூடிய போக்குவரத்து, சிமெண்ட் கான்கிரீட் மற்றும் கண்ணாடிகளாலான கட்டிடங்கள் ஆகியவற்று டன் மரங்கள் வெட்டப்படுவதும் இவற்றின் உணவுகளைப் பறித்துவிட்டதுடன் வாழ்விடங் களையும் அழித்து விட்டன. பறவைகளுக்கு உணவு போடடு விட்டு உணவு உண்ணும் பழக்கம் அருகிவிட்டது.

சிட்டுக்குருவிகளை மீட்டெடுக்கும் பணியில் பலர் மீண்டும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். செயற்கைக் கூடுகளை வீடுகளில் சிலர் அமைக்கத் தொடங்கியுள்ளனர். சிட்டுக் குருவிகளுக்கு ஓட்டுக் கூரை வீடுகள் என்றால் தனிக்கொண்டாட்டம். எனவே சிலர் வீடுகளின் பின்பக்கங்களில் ஓட்டுக் கூரைகளை அமைக்கத் தொடங்கியுள்ளனர். மொட்டை மாடிகளில் தானியங்களைச் சிதறி விட்டு பறவைகளை ஈர்க்கத் தொடங்கியுள்ளனர். இம்முயற்சிகள் எல்லாம் மனிதனை மீண்டும் இயற்கையை நோக்கி அழைத்துச் செல்லும் அரிய காரியங்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Unable to connect to database! Please try again later.