Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatru Maruthuvam
Maatru MaruthuvamMaatru Maruthuvam
ஜூலை 2008

ஹோமியோபதி தடுப்பு மருத்துவம்

லூயிபாஸ்டியரின் கிருமிகள் குறித்த போதனைகளுக்குப் பிறகே ‘தடுப்பு மருத்துவம்’ என்ற சொற்கோவை புழக்கத்திற்கு வந்தது. ஒரு குறிப்பிட்ட வகைக் கிருமியால் மட்டுமே ஒரு நோய் - தொற்றுநோய் பரவுகிறது; அக்கிருமியை மனித உடலுக்கு வெளியிலேயே அழிப்பதன் மூலம் அல்லது உட்புகாமல் தடுப்பதன் மூலம் அந்தத் தொற்று நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் எனும் கண்ணோட்டத்திலிருந்து தடுப்பு மருத்துவம் பற்றிய பார்வை உருவாகியுள்ளது.

எல்லா உயிரிகளும் தலைமுறைக்குத் தலைமுறை மரபியல் மாற்றத்தைக் கொண்டுள்ளது. ஒருமுறை கண்டறியப்பட்ட கிருமிக்காக வடிவமைக்கப்பட்ட ஆங்கிலத் தடுப்பு மருந்து அடுத்த தலைமுறையைத் தடுக்கத் தவறுகிறது என்பதோடு எண்ணற்ற கேடுகளையும் விளைவிக்கிறது.

கிருமிகள் மூலமாக மட்டுமே தொற்று நோய்கள் பரவுகின்றன என்பதை ஹோமியோபதி ஏற்கவில்லை. கிருமிக்கோட்பாடு காலத்திற்கு முந்தியது ஹோமியோபதி. எனினும் தொற்றுக்கள் பரவும்போது நோய் தொற்றாதவர்களுக்கும், தொற்று ஆபத்து உள்ளவர்களுக்கும் வரும்முன் காக்கும் ஹோமியோ மருந்துகள் கொடுக்கிறபோது எந்தத் தொற்றும் தாக்குவதில்லை.

ஹோமியோ மருந்துகள் கிருமிகளை ஒழிப்பதை மட்டும் வேலையாகச் செய்யும் எதிர் உயிரி மருந்துகள் அல்ல. அவை உயிராற்றல் நசிவால் வெளிப்படும் தனித்துவமிக்க அறிகுறிகளை நலமாக்குபவவை. அதாவது பாதிக்கப்பட்ட உயிராற்றலை மீட்கும். நலம் ஏற்படுத்தும். அதுமட்டுமே ஹோமியோ மருந்தின் உன்னதமான ஒரே பணி.

ஒரு பகுதியில் புறச்சூழல் மேலோங்கி தொற்று பரவும் காலநிலையில் அங்குள்ளோரில் உயிராற்றல் பாதிக்கப்பட்ட பலர் ஒரே தனித்துவ அலைவரிசைக்கு ஆட்படுவர். அவர்கள் அனைவருக்கும் Gensus Epidemicus என்ற ஹோமியோ பார்வையின்படி ஒரே மாதிரி மருந்து அளிக்கப்படுகிறது. இதுவே ஹோமியோ தடுப்பு மருத்துவம். ஆர்கனான் நான்காம் மணிமொழியில் மருத்துவரின் கடமைகளில் ஒன்றாக வரும்முன் காத்தலை டாக்டர் ஹானிமன் குறிப்பிடுகிறார். அக்கடமையினை இத்தடுப்பு மருந்துகள் மூலம் நிறைவேற்ற முடிகிறது.

டாக்டர் ஹானிமன் இப்பணிகளைச் சிறப்பாக துவங்கி, வழிகாட்டியுள்ளார். நெப்போôலியனின் யுத்த காலத்தில் பரவிய காலராவை காம்போரா, குப்ரம்மெட், விராட்ரம் ஆல்பம் கொண்டும், செங்காய்ச்சலைப் பெல்லடோனா கொண்டும், புறப்பாட்டுக் காய்ச்சலை அகோனைட், சல்பர் கொண்டும் நோய் தொற்றாமல் தடுக்கவும், நலமாக்கவும் செய்துள்ளார்.

ஹோமியோ தடுப்பு மருந்துகள் தொற்றைத் தடுப்பது மட்டுமல்ல. ஒட்டுமொத்த உடல் நலனையே மேம்படுத்தக்கூடியது. கிருமிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டத்தல்ல. மனிதர்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது. காலத்தால் மாறாதது. எளிதில் கையாளக் கூடியது. குறைந்த செலவைக் கொண்டது. பக்கவிளைவுகளும், பின்விளைவுகளும், ஒவ்வாமைகளும், மரண ஆபத்துக்களும் கொண்ட ஆங்கில மருத்துவத் தடுப்பு மருந்துகளை விட எல்லாவகையிலும் ஹோமியோபதி தடுப்பு மருந்துகள் உயர்ந்தவை என்பது உலகறிந்த உண்மை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com