ஓர் அதிசய (R.R) ஆர்.ஆர்
மானுடப்பிரியன்
ஆர். ஆர். ன் விரிவாக்கம் ரெஸ்க்யூ ரெமடி (Rescue Remedy)
இதைக் கண்டறிந்தவர் எட்வர்டு பேச் என்னும் ஆங்கில மருத்துவ மாமேதை. ‘பேச்’ சின் ஆத்மாவில் உதித்தது தான் R.R. எனும் ஐந்து பூ மருந்து
திடீர் நிகழ்வால் ஏற்படும் தாங்க முடியா வலி, பொறுமையின்மை, சுயநினைவிழப்பு, திகில், அதிர்ச்சி இவற்றை விரைந்து போக்க உதவும் ஐம்மருந்துக் கலவையே R.R.
உடுக்கை இழந்தவன் கை போல இடுக்கண் களையும் அந்த நட்பு மலர்கள் செர்ரிப்ளம், இம்பேஷன்ஸ், கிளமேடிஸ், ராக்ரோஸ் மற்றும் ஸ்டார் ஆப் பெத்லஹேம்
தாவரம், விலங்கு, மனிதன் என அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே முதலுதவி மருந்து R.R. என்றால் அது புகழ்ச்சியல்ல, சத்தியமான உண்மை.
அதிர்ச்சி, திகில் போன்ற உணர்வுகள் மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல. மரங்களுக்கும் தான். R.R. கலந்த நீரை பருகக் கொடுத்தால் பட்ட மரம் பூக்கும். காய்க்கும். கனிக்கும். R.R. நீரை பருக இயலா சூழல்களில் தோலில் படச் செய்தாலே கூட போதும். பலன் கிடைக்கும்.
கால், கை வலிப்பு வந்த மனிதன் மீது நீரை தெளித்தாலே கூட அவன் இயல்பு நிலைக்கு விரைவில் மீள்வான்.
மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான காக்கை நிச்சயமாக இறந்து போகும் என அனைத்துக் காகங்களும் நினைத்தன. ஆனால் அந்த மனிதன் R.R. நீரை அடிபட்ட காகம் மேல் அடிக்கடி தெளித்தான். காகம் பிழைத்தது. பறந்தது. உறவுக் காகங்கள் அதனை அழைத்துக்கொண்டு ஆகாயத்தில் பறந்தன.
எதிர்பாரா நிகழ்வால் நிலை குலைந்து போன மனிதனுக்கு அடிக்கடி R.R. கொடுத்தால் இயல்பு நிலைக்கு விரைவில் இனிதே மீள்வான்.
அரை மனிதனுக்கு (குழந்தை) இரண்டு உருண்டைகள், முழு மனிதனுக்கு நான்கு உருண்டைகள் என நான்கு அல்லது ஐந்து தடவைகள் சிறிது கால இடைவெளி ரெஸ்க்யூ ரெமடியை நிலைமையின் கனத்திற்கு ஏற்ப சுவைத்து வந்தால் நிலை நேராகும். தடவைகள் முக்கியமல்ல. தரமான R.R. மிகமுக்கியம்.
R.R. ஒரு முதலுதவி மருந்து மட்டுமே என்பதை நாம் மறந்து விடக் கூடாது. முதலுதவி நேரத்திற்குக் கிடைக்காததால் மண்ணில் மாண்டவர் எத்தனை பேர் என்ற சிந்தனையை இந்நேரம் முன்னிறுத்துகிறேன்.
“அனைத்து மருத்துவ விஞ்ஞானங்களிலும் தலைசிறந்த மிகப்பயனுள்ள முதலுதவி மருந்து ரெஸ்க்யூ ரெமடி” என்று மலர் மருத்துவத்தின் தந்தை டாக்டர் எட்வர்டு பேச் வலியுறுத்திக் கூறுகிறார். ஏனெனில், அதன் முதலுதவிப் பயன்கள் எண்ணிலடங்கா,. எழுத்தில் அடங்கா. R.R. பற்றி அறிந்தது கையளவு, அறியாதது கடலளவு.
அறிந்தவை, உணர்ந்தவை என சில; கொதிக்கும் நீர்த்துளி, எண்ணெய் மேனியில் பட்டுவிட்டால், கொட்டி விட்டால் அடிக்கடி R.R. சாப்பிட்டால் விரைவில் நிவாரணம் உறுதி.
விபத்தில் காயம்பட்டவர், மயக்கமடைந்தவர், விபத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனவர் என மூவருக்குமே R.R. உடனடி பலன் கொடுக்கும்.
தீபாவளிக்கு பட்டாசுக்கு முன்பாக வாங்க வேண்டியது R.R. தான்.
பட்டாசுக் காயத்திற்கு மட்டுமல்ல அளவுக்கு மீறி பலகாரங்களை உட் கொண்டதால் உண்டாகும் பதட்டமான வயிற்று வலிக்கும் R.R. தான் அருமருந்து.
மேடை ஏறி பேச பயம், நேர் காணலில் பதில் சொல்ல பயம், டிரைவிங் கற்க பயம், விமானத்தில், கப்பலில் பயணிக்க பயம், திங்கட்கிழமை பள்ளி செல்ல பயம், என்று பல வகை பயங்களை பயப்பட வைப்பது R.R. என்றால் அது மிகையல்ல.
பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகளின் கடிக்கு, தாக்குதலுக்கு R.R. உடனடியாக, அடிக்கடி தர வேண்டியது அவசியம்.
கண்ணில் தூசி விழுந்து விட்டால் கூட R.R. உடன் நிவாரணம் அளிக்கும்.
கூரான ஆயுதங்கள் குத்திவிட்டால் முதலில் R.R. சில தடவைகள் கொடுத்துவிட்டால் புண்ணாகி, சீழ் கோர்க்காது. Antiseptic ஆக செயலாற்றுகிறது.
பச்சிளங்குழந்தையின் பிஞ்சு விரல் கதவிடுக்கில் பட்டு நசுங்கிவிட்டதா? கதறும் அழுகையைப் போக்கி வலியைக் குணமாக்குகிறது நமது R.R.
உடலுக்கு ஏற்றுக் கொள்ளாத குடிநீர், உணவு இவற்றின் பின் விளைவுகளில் இருந்து நம்மைக் கவசம் போன்று காப்பது.
காரணம் எதுவாயினும் டென்ஷனான சூழ்நிலையா? R.R. எடுத்தால் உயர் ரத்த அழுத்தம் குறையும்.
தலை கீழான எந்தச் சூழலையும் நேராக்குவது R.R.
நாட்பட்ட மனக் கோளாறுகளை R.R. தொடர்ச்சியாகக் கொடுத்து வந்தால் நாளடைவில் நேராக்கும் என சில இணைய தள தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாள் முழுவதும் ஏற்பட்ட உடல், மனக் களைப்பிற்குப் பின் R.R. திரவமருந்து (dilution) ஓரிரு துளிகள் கலந்த நீரைக் குளித்து விட்டு படுக்கைக்கும் சென்றால் சுகமான தூக்கத்தை அனுபவிக்கலாம்.
முகச் சவரத்திற்குப் பின் R.R. dilution ஐ ஓரிரு சொட்டுக்கள் தடவினால் அதன் சுகமே தனியானது.
யாருக்கு நீர்க்கடுப்பாயினும் அவருக்கு R.R. அடிக்கடி கொடுத்தால் நிலைமை சீராகும்.
ஒவ்வொருவர் வீட்டிலும் ஆங்காங்கே R.R. இருந்தால் தான் அவசரத்திற்கு உதவும்.
நமது சட்டைப் பையிலும், பயணப்பையிலும் பணத்திற்கு முன் முதலிடம் பெற (தர) வேண்டியது R.R. மட்டுமே.
குழந்தைகளின் பள்ளிப் பையில் R.R. இருக்கட்டும்.
‘தேன்’ என்று எழுதிப் படித்தால் இனிக்காது. அதே போன்று R.R. பற்றிப் படித்தால் மட்டும் போதாது. நமது வாழ்க்கையில் இடம் பிடித்தால் மட்டுமே அதன் அருமை, பெருமைகளை உணர இயலும்.
உலக அரசாங்கங்கள் R.R. ஐ அங்கீகரிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
R.R. ஐக் கண்டறிந்த எட்வர்டு பேச் சாதாரண மனிதனல்ல, மாமனிதன். அவருக்கு இந்தப் பிரபஞ்சம் அது இருக்கும் வரை நன்றிக்கடன் பட்டிருக்கிறது. ஐவகை மலர்களைக் கொண்டு தற்காப் (பூ) மாலையை உலகுக்கு அணிவித்த பேச்சின் புகழ் என்றென்றும் நிலைக்கட்டும்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|