Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam
ஜனவரி 2009

வலது கால் வலிகள்
Dr.U.கல்பனா B.H.M.S., திருமங்கலம். போன் : 98428 45846

ஏழு வயது சிறுவனின் அம்மா என்னைத் தொடர்பு கொண்டு, “டாக்டர் என் மகனுக்கு நேற்று மாலையால் இருந்து வலது பக்கம் மட்டும் கால் வலி, இடுப்பு எலும்பு, தொடையில் வலி “ என்று கூறினான். “வலிக்கான தைலம் போட்டால் சரி ஆகி விடும் என்று போட்டு தேய்த்து விட்டு தூங்க வைத்தேன். சரியான தூக்கம் இல்லை. அவன் புரண்டு படுக்கவும் இல்லை. காலையில் எழும் போதே வலியால் அழுதான், அவனால் இப்போது கால் அசைக்க முடியவில்லை. எழுந்து நடக்கவும் முடியவில்லை” என்றார். “வலி உள்ள இடத்தில் வீக்கம் உள்ளதா?” எனக் கேட்டேன் சரியாக தெரியவில்லை? என்றார். “காலைச் சாப்பாடு முடித்துவிட்டு கூட்டி வாருங்கள் - ஒன்றும் பயப்பட வேண்டாம்!” என்று கூறினேன்.

சிறுவன் அழைத்து வரப்பட்டபோது வலது கால் மடக்கப்பட்ட நிலையிலே இருந்தது நாற்காலியில் உட்கார முடியாமல் வலிப்பதாகக் கூறினான், மேஜையில் அமரச் செய்தேன். அப்போதும் வலது கால் மடக்கப்பட்ட நிலையிலும் இடது கால் கீழே உள்ள நாற்காலியிலும் இருந்தது. பரிசோதித்துப் பார்த்த போது, தசைகள் இறுக்கமாக இருந்தது. இடுப்பு எலும்பும் தொடை எலும்பும் ஆரம்பிக்கிற இடத்தை தொட்டபோது சிறுவன் அலறினான். வீக்கம் எதுவும் இல்லை. ஆனால் அந்த பகுதி சூடாக இருந்தது.

மருந்துகாண் ஏட்டினை புரட்டி பார்த்த போது பெர்ரம்மெட், செலிடோனியம், (Ferrmet,Chelidoni) குறிப்பிடப்பட்டிருந்தும் Ferrmet 200 திரவ மருந்தில் ஒரு சொட்டினை தண்ணீரில் கலந்து 5 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிது சிறிதாக குடிக்க வைத்தேன். அரை மணி நேரம் கழித்து சிறுவனிடம் “வலது காலை நீயாக இறக்கி நாற்காலியில் வைத்துக் கொள். மெதுவாக செய்” என்றேன். முதலில் மறுத்த அவன், பிறகு சிறிது சிறிதாக அசைத்து கீழே உள்ள நாற்காலியில் வைத்த போது வலி இல்லை. சிறுவன் மேஜையில் உட்கார்ந்தபடியே நன்றாக பேச விளையாட ஆரம்பித்தான்.

மருந்து இப்பொழுது 10 நிமிடங்களுக்கு ஒரு முறை கொடுக்கப்பட்டது. 1 மணி நேரம் கழித்து சிறுவனிடம் நீயாக கீழே இறங்கி நாற்காலியில் அமர்ந்து கொள் என்றேன். முயற்சி செய்தான். ஆனால், வலி வந்ததால் முடியவில்லை வலிக்கிறது என அழ ஆரம்பித்தான். ஏதேனும் உள்காயம், அடிபடல் இருக்குமோ என நான் சிகிச்சைக்கு ஆரம்பிக்கும் முன்பு கேட்ட போது 5 நாட்களுக்கு முன் குளியல் அறையில் வழுக்கி அப்படியே உட்கார்ந்து விட்டதாகவும் வலி வந்த அன்று பள்ளியில் மேஜையில் வலது முட்டியில் இடித்து கொண்டதாகவும் வலி சுரு சுருன்னு இருப்பதாகவும் கூறினான்.

சரி X Ray எடுத்து பார்ப்போம் என பார்த்தேன் எலும்பில் முறிவோ, வேறு பாதிப்போ இல்லை. மருந்தை தொடருங்கள், மாலை என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் எனக் கூறி அனுப்பி வைத்தேன். கால் அதிகமாக அசைக்க வேண்டாம். எனக் கூறி அனுப்பி வைத்தேன். மாலை சிறுவனின் அப்பா என்னை தொடர்பு கொண்டு, “இன்னும் கால் அசைக்க மாட்டேங்குறான். நிற்க முடியவில்லை ortho specialist கூட்டிபோய் ஒரு Consulting பண்ணி விடட்டுமா? என்று கேட்டார்”. சரி அழைத்து செல்லுங்கள் அவரது பரிசோதனை விவரங்களை என்னிடம் சொல்லுங்கள் என்று கூறினேன்.

அவரின் கருத்துபடி, “fine fracture இருக்கலாம். X Ray, MRI எடுக்கணும், நான் இப்பொழுது Medicine எதுவும் தரவில்லை நீங்கள் Homoeopathy Medicine-ஐ தொடருங்கள் 2 நாட்கள் கழித்து கூட Scan எடுக்கலாம்” என்று கூறியுள்ளார். நான் எனது அடுத்த பரிந்துரையாக Cஹெலிடொனிஉம் 200 _ 4 டோச் கொடுத்து 2 மணி நேரத்துக்கு போடச் சொல்லி காலை என்னை தொடர்பு கொள்ள செய்தேன்.காலையில் சிறுவன் என்னை தொடர்பு கொண்டு “என்னால் இப்பொழுது நிற்க முடிகிறது. நானே எழுந்து பாத்ரும் சென்றேன். வலி இல்லை, கால் நீட்ட முடிகிறது. மடக்க முடிகிறது” என்றான். ஊசியில் இருந்து தப்பித்தாலும், வலி நன்கு மறைந்ததாலும் அவனுக்கு ஒரே மகிழ்ச்சி! எனக்கும்தான்.

22 வயது இளம்பெண் திடீரென்று வலது கால் மூட்டில் வலி, தாங்க முடியாத வலி, கால் கீழே ஊண்டி முடியவில்லை. நிற்க முடியவில்லை. அசைத்தாலே வலி, நான் அவர்களது குடும்ப மருத்துவர் ஆகையால் என்னைத் தொடர்பு கொண்டு என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்டனர். என்னிடம் அழைத்து வாருங்கள் சோதித்து பார்த்து சொல்கிறேன் என்று கூறினேன். அழைத்து வரப்பட்ட பெண்ணின் வலது காலை பரிசோதனை செய்தேன். “அடிபட்டதா? நடக்கும் போது கால் தவறுதலாக வைத்து விட்டாயா?” எனக் கேட்டேன், “எனக்கு தெரியலை டாக்டர்!“ நேற்று இரவில் இருந்துதான் வலி. வலி ஜிவ்வென்று பிடித்து இருப்பது மாதிரி உள்ளது. கால் அசைக்க முடியவில்லை. நிற்கவும் முடியவில்லை என்றும் கூறினார். சிறிதளவு வீக்கம் தெரிந்தது, சிறிது சூடாக காணப்பட்டது முறிவு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. ஏதோ ஒரு தாக்கத்தில் தசைநார் கிழிபட்டிருக்கலாம் என்று தோன்றியது.

மருந்துகாண் ஏட்டினைப் பார்ப்போம் என குறிகளுக்கு ஏற்ப kent reporter யை புரட்டினேன். அதில் ‘Chelidonium’ இருந்தது. அதை அப்போதே சாப்பிடக் கொடுத்து விட்டு மீண்டும் தண்ணீரில் கலந்து 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சாப்பிட சொன்னேன். மருந்தில்லா மாத்திரைகள் மணிக்கொரு முறை சாப்பிடத் தந்தேன் “மாலையில் என்னை தொடர்பு கொள்ளுங்கள் எனக்கூறினேன். அன்று மாலை, அந்த பெண் என்னைத் தொடர்பு கொண்டு,” டாக்டர் என்னால் இப்போது நிற்க முடிகிறது. நடக்க முடிகிறது. கால் நன்றாக ஊன்ற முடிகிறது நன்றி!” என்றார். நலமடையும் நோயாளிகள் மருத்துவர்களுக்கு நன்றி சொல்லும் போது நாம் ஹோமியோபதியின் தந்தை டாக்டர் ஹானிமனுக்கு நன்றி சொல்லிக் கடமைப்பட்டிருக் கிறோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com