10 ஆண்டுகளுக்கு முன்பே சத்தமில்லாமல் நடத்தப்பட்ட சாதனைகள்
பழங்காலத்தில் பால்வினை நோயென்று அழைக்கப்பட்டதற்கு ஓலைச் சுவடிகளில் சான்றுள்ளது. அந்த பால்வினை நோய்க்கு இன்றைய பகுத்தறிவின் பயன்பாட்டால் ஆங்கில மருத்துவம் வைத்திருக்கும் பெயர் தான் எய்ட்ஸ் ஆகும். ஹோமியோபதியில் பார்க்கும் போது இந்த மருத்துவ முறையில் நோயின் பெயர் எந்த நோய்க்கும் முக்கியமல்ல. உடலில் ஏற்படும் குணங்கள், குறிகள் தான் மிக முக்கியமாகும். அந்தக் கோணத்தில் பார்த்தோமானால் எய்ட்ஸ் குறிகளுக்கு ஹோமியோபதியில் மருந்துகள் பல உள்ளன. ஒரு ஹோமியோபதி மருத்துவருக்கு, நோயாளியினால் தன்னுடைய உடலில் ஏற்படும் குறிகளை சொல்வதும், மருத்துவர் பார்த்து, கேட்டு தெரிந்து கொள்ளும் உடல் குறிகளும் ஆக இரண்டு விதமான குறிகளுமே முக்கியமானதாகும்.
மும்பையில் உள்ள ஹோமியோபதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின் படி, எய்ட்ஸ் குறிகளைக் கொண்ட 652 நோயாளிகளுக்கு நோயை போக்கியுள்ளனர். சத்தம் இல்லாமல் செய்திருக்கும் இந்த சாதனைக்கு அந்த ஆய்வு நிறுவனம் எடுத்துக் கொண்ட கால அளவு ஒரு நோயாளிக்கு குறைந்தது மூன்று முதல் பதினெட்டு மாதங்கள் ஆகும். அந்த நிறுவனம் வெற்றி பெற்றமைக்கு முதன்மையாக பயன்படுத்திய மாமருந்துகள்.
Lycopodium, Phosphorus, Nitric Acid இம்மூன்று மருந்துகளுமே நம்மால் இலாவகமாக பயன்படுத்தப்படும் மருந்துகள் தான். எனினும் இன்றைக்குத் தான் இதனுள் பொதிந்து இருக்கும் மருத்துவத்தின் மகத்துவம் அளப்பரியது எனத் தெரிய வருகிறது. சரி அப்படியானால் என்ன வீரியத்தில் இம்மூன்று மருந்துகளை கொடுப்பது? என்ற கேள்வி படிப்போர் மனதில் எழுவது இயற்கையே. இதற்கு அனுபவமுள்ள ஹோமியோபதி மருத்துவரின் அனுபவமே அதை நிர்ணயிக்கும்.
இம்மூன்று மருந்துகளையும் குணம், குறிகளுக்கு ஏற்றவாறு மூன்று மாதம் முதல் பதினெட்டு மாதங்கள் வரை நோயாளிகளுக்கு கொடுத்ததில், முன்பு எய்ட்ஸ் உள்ளதாக உறுதி செய்யப்பட்ட எல்லா நோயாளிகளையும், மீண்டும் Elisa (Enzyme linked Immuno sorbent - Assay)Western Blot என்று பிரத்யேகமாக உள்ள டெஸ்ட்களும் நோய் இல்லை என்று உறுதிப்படுத்தன. ஹோமியோபதி மருந்துகளின் Micro doses gives mega results என்ற தத்துவம் இப்போது வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருக்கிறது.
நன்றி : பேமில் ஹெல்த், ஜுன் 1999.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|