Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam wrapperMaatru Maruthuvam
ஏப்ரல் 2009

முதல் பிரசவம் “சிசேரியன்” இரண்டாம் பிரசவம் “இயற்கைப் பிரசவம்”
Dr. K.V. நடராஜன்

என் இரண்டாவது பெண். 2 வது பிரசவம். இது ஹோமியோபதியின் மிகப் பெரிய சாதனை. முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. பிரசவ நேரத்தில் ரத்த அழுத்தம் அதிகமானதால் ஆப்ரேஷன். இவை இரண்டுமே 2வது பிரசவம் இயற்கையாக ஆகாமல் இருக்க தக்க காரணங்கள். மேலும் டாக்டர் ஆறு மாதத்திலிருந்தே இயற்கைப் பிரசவத்துக்கு ஏது இல்லை என்று கூறி வந்தார்.

முதல் பிரசவத்தின் போதே அவருக்கு கர்ப்பப்பை சிறிது பின்பக்கமாக சாய்ந்துள்ளது. அது அடுத்த முறை பிரசவ காலத்தில் கர்ப்பப்பையின் வலுவைக் குறைக்கக் கூடும் என்று கூறியிருந்தார். எனினும் கர்ப்பப்பையின் அண்டையிலுள்ள தசைகளை வலுப்படுத்தக்கூடியது சஹற் நன்ப்ல்ட் என்று தெரிந்ததால் ஒரு முறை Nat Sulph 200 என்ற மருந்தைக் கொடுத்திருந்தேன். இம்முறை கர்ப்பம் உறுதி செய்யும் போதே கர்ப்பப்பை சாதாரணமாக இருப்பதாகக் கூறினார். எனினும் கனம் கூடும் போது என்ன ஆகும்?

8 மாதம் முடிந்த போது குழந்தை அசைவு குறைந்தது. டாக்டர் அனேகமாகத் தண்ணீர் அளவு குறைந்திருக்கும் என்று ஸ்கேன் பண்ணச் சொன்னார்கள். அது போலவே கர்ப்பப்பை சாயாவிட்டாலும் தண்ணீர் அளவு குறைந்திருந்தது. அதற்கு மருந்து Sepia 200. உடனே கொடுக்க குழந்தையின் அசைவு சரியாயிற்று. எனினும் பிரசவத்தின் போது தண்ணீர் அளவு குறைவாகத்தான் இருந்தது.

குறித்த நாளுக்கு 10 நாட்கள் முன்னதாக குழந்தை தலை திரும்பவில்லை. Pulsatilla கொடுத்தவுடன் குழந்தை திரும்பியது. எனினும் குழந்தை தலை தரிக்காமல் மிதந்து கொண்டே இருந்தது. காரணம் கர்ப்பப்பை கழுத்து விரியவில்லை. அழுத்தமாக இருந்தது. Conium 200 கொடுக்கக் கர்ப்பப்பை கழுத்து மிருதுவாகி, குழந்தையின் தலை தரித்துவிட்டது.

டாக்டருக்கு அதிசயம். ஹார்மோன்கள் சப்ளை ஆவதால் அங்கங்கள் அந்தந்த நேரத்தில் வசதி செய்து கொடுக்கிறது என்பது ஆங்கில முறை சித்தாந்தம்.

இந்த நிலையில் டாக்டர் மிகக் குறைந்த வலி வந்தாலும் அழைத்து விடச் சொன்னார். குறித்த தேதி டிசம்பர் 7. ஆயினும் நவம்பர் 29 மாலை நாலரை மணிக்கு வலி வந்தது. ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றோம். வலுவில்லாமல் வலி இருந்தது. டாக்டர் ஏற்கனவேயே மிகவும் பலவீனமாக இருக்கிறாள். கால தாமதம் செய்ய முடியாது. அறுவை மூலம் எடுக்க வேண்டியதுதான் என்று கூறினார். எனினும் என் வற்புறுத்தலில் இரவு 3 மணி வரை பார்ப்பதாகக் கூறினார். மணி, 8-15 வலி சிறிது அதிகமாயிற்று. ஆனால் ரத்த அழுத்தமும் அதிகமாயிற்று. மற்ற கோளாறுகளைக் கவனித்து வந்ததில் இந்தக் கோளாறை நினைவில் கொள்ளவில்லை.

உடனே அருகிலிருந்த என் வீட்டிற்குச் சென்று புத்தகம் பார்த்ததில் வேறு ஒன்றும் குறிப்பிடும்படி காரணம் இல்லாமல் ரத்த அழுத்தம் இருந்ததால் Nuxvomica 200 ஒரே முறை. 15 நிமிடங்களில் ரத்த அழுத்தம் இயல்பு நிலை.

டாக்டர் 11 மணிக்கு ஒரு முறை வந்து பார்த்தார். தொடர்ந்து வலுவில்லாத வலியுடன் இருந்ததோடு குழந்தை வெளிவரும் வாய் விரியவில்லை. ஆகவே தான் வலியும் அதிகம் இல்லை. அறுவை தான் என்று கூறி ரெஸ்ட் எடுக்கப் போய்விட்டார். வாய் விரிந்து கொடுக்க ஏற்கனவே மருந்து கொடுத்திருந்தேன். அப்படியாயின் சரியான மருந்து இல்லை.

உடனே வீட்டிற்குப் போனேன். சுமார் 1 மணி நேரம் புத்தகம் பார்த்ததில் இரண்டு மருந்துகள் Sepia, Gelsemium பொருந்தின. ஏற்கனவே Gelsemium 30 கொடுத்திருந்தேன். அது சக்தி போதவில்லையா அல்லது Sepia மருந்தா குழப்பத்துடன் இரண்டையும் 200 வீரியத்தில் இரவு 12.45க்குக் கொடுத்தேன். ஹோமியோபதி வென்றது. 15 நிமிடங்களில் வலி அதிகமாகி தாங்கமுடியாததாக ஆகி அலற ஆரம்பித்து விட்டாள். உடனே டாக்டரை அணுகினேன். தூக்கக் கலக்கத்தோடு வந்த டாக்டர் குழந்தை தலை தெரிவதைப் பார்த்து விட்டார். என்னை வெளியேற்றி விட்டு படுக்கையிலேயே பிரசவத்தை செய்ய அனுமதித்து விட்டார்.

5 நிமிடங்களில் குழந்தை பிறந்து விட்டது இயற்கையாக. என் பெண்ணுடன் மற்றொரு கர்ப்பிணி பெண்ணும் சேர்ந்திருந்தார். அவருக்கும் நான் மருந்து கொடுக்க இயற்கையாகப் பிரசவம் ஆயிற்று. இந்த விஷயத்தில் டாக்டருடைய ஒத்துழைப்பும் என்னை மருந்து கொடுக்க அனுமதித்ததும் தான் முக்கியம். அவர் நீண்ட நாட்களாக (சுமார் 30 வருடங்களாக) பிரசவம் பார்த்து வந்தார்.

என் மூத்த மகள் மூளைக்காய்ச்சலுக்கு மருந்து கொடுத்ததும், அவளுக்கு அடுத்த குழந்தை அறுவை மூலம் பிரசவம் ஆனாலும் எந்த மூளைக் கோளாறும் இதயக் கோளாறும் இல்லாமல் முடிந்ததாலும் என்மேலும் ஹோமியோபதி மேலும் நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. ஆனால் அது இவ்வளவு தூரம் சாதனை செய்ய முடியும் என்பது அவர் அறியாதது. அவருக்குப் பலமுறை நன்றி தெரிவித்தேன்.

- “பூரண நலம் தரும் ஹோமியோபதி”


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com