Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam wrapperMaatru Maruthuvam
ஏப்ரல் 2009

ஹோமியோபதியில் ஊசி தேவையில்லை
Dr. S. தொரியாரோச், R.H.M.P., பாண்டிச்சேரி.

ஹோமியோபதி ஒரு அருமையான மருத்துவ முறை. எளிமையானது. பக்கவிளைவு இல்லாதது, என்றும் பலன் அளிக்கத்தக்கது. ஆங்கில மருத்துவத்தில் மூழ்கிவிட்ட மக்களுக்கு இந்த ஹோமியோ மருத்துவ மகிமை தெரிந்தால் எவரும் விடமாட்டார்கள்.

இம்மருத்துவத்தின் தனிச்சிறப்பு

ஹோமியோபதி மாத்திரைகளால் பக்கவிளைவு ஏதும் இல்லை. ஏனெனில் அவை சிறிய அளவு மாத்திரைகளாகவே வழங்கப்படும். ஹோமியோபதியில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மருந்துகளும் குறைந்த விலையில் கிடைக்கும். ஹோமியோபதி மாத்திரைகள் இனிப்பு சுவையுடன் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள். ஹோமியோபதியில் பரிசோதனை ரிப்போர்ட்டுக்காக காத்திருக்கத் தேவையில்லை. முன்னதாகவே சிகிச்சையை ஆரம்பித்திடலாம்.

சிலர் ஆங்கில மருத்துவரிடம் சிகிச்சை பெறும்போது, நோயாளியின் பரிசோதனை ரிபோர்ட்டை பார்த்துவிட்டு எல்லாம் சரியாக இருக்கிறது. உங்களுக்கு ஒன்றும் இல்லை என்பார். ஆனால் நோயாளி, அவர் கையால் ஒரு ஊசி போட்டால் தேவலாம் என்று எண்ணிக் கொள்வார். ஹோமியோபதி மருத்துவ முறையில், சிறு பெண்களுக்கு, பூப்படையும் பெண்களுக்கு, வயதான பெண்களுக்கு, முதியோருக்கு என்று தனித்தனி நிவாரணிகள் உண்டு. மனிதனுக்கு நோய் தோன்றும், மிகுதியாகும் அல்லது தணியும் நேரங்கள், இவையாவும் இந்த மருத்துவ முறையில் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயமாகும். ஒரு குழந்தைக்கு இருமல் வந்துவிட்டது என்றுவைத்துக் கொள்வோம். குழந்தையை மருத்து வலிடம் போகலாம் என்று கூப்பிட்டால் உடனே அக்குழந்தைக்கு இருமலுடன் ஜுரமும் சேர்ந்து வந்துவிடும். இதற்கு பயம் தான் காரணமாகும். மருத்துவரிடம் போனால் ஊசி போட்டு விடுவாரே என்ற பயம் தான்.

ஆனால், ஹோமியோ மருத்துவர் வெறும் மாத்திரை களையும் திரவ மருந்துகளை மட்டுமே கொடுப்பார். குழந்தைகளை அலட்டாமல், துன்பப்படாமல் எளிமையாக குணமாக்கும் ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகள் இருக்கும் போது, ஏன் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். டாக்டர் ஹானிமன் தன்னுடைய மருத்துவ சரித்திரத்திற்கு ஆதார மாக “ஆர்கனான்” என்ற அடிப்படை நூலை எழுதினார். அதன் முதல் சுலோகம் கூறுகிறது.

“ஒரு மருத்துவனின் தலையாயத் தொண்டு நோயுற்றவனைக் குணப்படுத்துவதாகும். விரைவாக துயரமின்றி நிரந்தரமாக”

ஒரு நோயாளியை எவ்வகையில் குணப்படுத்த வேண்டும் என்பதை மருத்துவர் முதலில் ஆராய்ந்துப் பார்க்க வேண்டும். மேலும் மருந்தின் தன்மை குறித்து மருத்துவர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான், அவர் மருந்தைச் சரியான வகையில் உபயோகிக்க முடியும். அத்துடன் மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் முறையும், மருத்துவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

ஹோமியோபதி மருத்துவத்தில் இரு நோயாளிகளின் குறிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவரவர் பணிபுரிகிற சூழ்நிலைக்கு ஏற்ற மருந்துகளைக் கொடுக்க வேண்டும் என்றே விதிக்கப்பட்டுள்ளது. சாலைத் தொழிலாளிக்கும், கருமானுக்கும் வெவ்வேறு மருந்துகள், ஒருவன் எப்போதும் நீரிலேயே நிற்பவன், மற்றவன் தீயின் அணலில் வேலை பார்ப்பவன், நோய் வரும் காரணங்கள் இருவருக்கும் வெவ்வேறு. இப்படிப் பாகுபாடு செய்தால்தான் இம்மருத்துவ முறையில் குறிப்பிட்ட மருந்து என்று ஒன்றுமே கிடையாது.

“உன் நோயின் பெயர் எனக்குத் தேவையில்லை. குறிகளை மட்டுமே கூறு, அது போதுமானது” என்று ஹானிமன் உறுதி கூறுகிறார். இந்த விவரத்தை ஆராய்ந்து பார்க்கும்போது ஆங்கில மருந்துகளைக் கண்டாலே பதறும் நிலை ஏற்படுகிறது. இடுப்பிலோ, முழங்கால் கை மூட்டியிலோ ஏற்படும் வலிகளுக்கு, அவ்விடங்களிலேயே ஊசி மருந்துகளை அலோபதி மருத்துவர் செலுத்துகிறார். வலி குறைந்து விடும். இதன் பக்கவிளைவாக, தொடர்ந்து காதில் சீழ் வடியும், நா உலர்ந்து போகும், வாயில் வறட்சி ஏற்படும்.

அலோபதி மருத்துவர் ஏன் ஊசி போடுகிறார்?

ஏ சிலருக்கு விரைவில் நோய் குணமாக வேண்டும் என்ற எண்ணத்தில்

ஏ சிலர் ஊசி மருந்து ‘பவராக’ இருக்க வேண்டும் என எண்ணுவது.. இது சில நோயாளிகளின் எண்ணமாகும்.

ஏ சில மருத்துவர்களின் எண்ணம், ஊசி போட்டால் தான் தன்னை ஒரு சிறந்த டாக்டர் என நோயாளி மதிப்பார் போன்ற தாழ்வு மனப்பான்மை.

ஏ சில மருத்துவர்களின் நப்பாசை: ஊசி போட்டால் தான் நோயாளி பணம் தருவார். இதனால் பணம் அதிகம் சம்பாதிக்கலாம்.

ஏ நோயாளிக்கு ஒருவித மயக்க ஊசி ஏற்றிவிட்டு மருத்துவர் தன் சொந்த வேலையைக் கவனிக் கச் சென்று விடுவார். இதனால் நோயாளியின் தொல்லை இருக்காது என்ற எண்ணம் இருக்கும். இது ஒரு ரகம்.

ஏ சில மருத்துவர்கள் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், எப்போதும் போதை மருந்து ஊசிகளை மட்டும் உபயோகிப்பார். இது போல பலர் ஊசிக்கு அடிமையாகிப் போகிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் மருத்துவ உலகில் ஒளி விளக்காக விளங்கிய திருவாரூர் டாக்டர் எஸ்.ஸ்ரீனிவாசன் அவர்கள் 1939-ல் அரசாங்க அங்கீகாரம் பெற்ற ஊசி மருந்துகள் தயாரித்து பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

அவர்கள் ஊசி போடுவதை எந்த சூழ்நிலையில் பயன்படுத்தியிருப்பார்கள் என்றால்;

1. ஒருவரால் வாயைத் திறக்க முடியாத நிலையில்

2. மாத்திரைகளைச் சப்பி விழுங்க முடியாத நிலையில்

3. நோயாளி முழுவதும் மயக்க நிலையில் இருக்கும்போது

4. அவசர கால நிலையில்

5. வலியினால் நோயாளி அவதிப்படும் போது,

6. அறுவை சிகிச்சையின் போது

7. எந்தப் பொருளை வாயில் போட்டாலும் உடனடியாக வாந்தியாகும் போது,

8. அதிக அளவில் மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததால் வயிற்றில் புண் வலி ஏற்பட்டுள்ள போது....

இதுபோன்ற பல்வேறு கட்டங்களில் மருந்துக்குப் பதிலாக ஊசியை மட்டும் பயன்படுத்தினால், நோயாளி குணமடைவார் என்று எண்ணி, தொழில் செய்து வந்தார்கள். குழந்தைகளையும், பெரியோர்களையும், நோய் வரும் முன் காக்க வேண்டும் என்றால், நோய் பயம், டென்ஷன் இன்றி மருத்துவம் செய்யவேண்டும் என்றால், தேவையற்ற ஊசியைத் தவிர்த்து விட வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com