அந்தராத்மா 
தொங்கிக்கொண்டிருக்க
செய்வினைக் காரி 
வழி நடத்தும் 
பொம்மையையாய்.  
 
இறுக்கிக் கட்டிய உடல் 
ரணவலி அல்லது மரண வலி 
முறுக்கிய மனம்

முதுகின் தண்டு வழி தொடங்கி 
நக இடுக்குகள் வரை அவளே. 

வலித்து  நடப்பிக்க 
இயலா நிலையில் 
குண்டூசி கட்டி இழுப்பாள்.

வெட்கம் கரைந்து மறைய
பயம் களைந்து வெளுக்க 
காத்து நின்று களியாடும் காமம். 

ஒரு மிருகத்தின் வேட்கையோடு 
ஏப்பம் விட்டு வெளியேற
செய்வினைக்காரியும் 
போய்விடுவாள் கூடவே. 

களைத்துப் பின் கனிவாய்
நிமிர்ந்து கண்கள் பார்க்கையில் 
ஒளிவிடும் கூச்சம்.

புதைந்துகொள்ள 
மீண்டும் அதே அணைப்பும் 
ஆடை தேடுதலும் !!! 

- ஹேமா, சுவிஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It