மலையினத்தின் மகளே,

ஜவ்வாதுவின் முதுகுடி சாமியே,

நிலைகொண்ட உன் விழியால் நீதிகேள்!

சமவெளியின் கொள்ளையர்கள், ஆட்சிபீடத்தைக் கொண்டவர்கள்.

அரற்றுகிறார்கள் உன் இனத்தை காடழிக்கும் கொள்ளையெரென..,

நீதிகேள்!

உன் கணவன் கொள்ளையனா!

உன் குடி காடழிக்கும் குடியா!

பரந்து விரிந்து கிடக்கும் உன் கிழக்கு மலையின் முதுகுடி தாய்களின் இதயங்களிடம் கேள்!

சேர்வராயனிடமும் கல்வராயனிடமும் ஏலகிரியானிடமும் இன்னும் உன் கிழக்கு மலையின் மூத்தக் குடித் தகப்பன்களிடமும் ராயன்களிடமும் கேள்!

சமவெளிக் கொள்ளையர்களின் கேள்விக்கு என்ன நீதி செய்வதென கேள்!

Pin It