தொடர்புடைய படைப்புகள்

வண்ண
வண்ண
ஆடை
மாற்றி
காட்சி தருகிறாய்
இருந்தும்
காவி வாடை
வீசுகிறது
சேரிவரை...

தேவபாஷை
கற்கச் சொல்கிறாய்
சாணிப்பால் குடித்த
வாயால்..

ஒரே மதம்
பின்பற்ற
அழைக்கிறாய்
கோவிலை விட்டு
விரட்டிக் கொண்டே...

குரு உத்சவ்
பொருத்தமான
முடிவுதான்
முதலில் ஏகலைவனின்
விரலைக் கொடு...

நிலங்களைப்
பிடுங்கிக் கொண்டு
ஏர்கலப்பையைத்
தூக்கச் சொல்கிறாய்...

துப்பாக்கியை
ஏந்தியபடி
அனைவரையும்
ஊனமாக்கிவிட்டு
யோகா செய்ய
அழைக்கிறாய்...

இனிக்க தணிக்க
வெடிக்கப் பேசுகிறாய்
முதலில்
உன் உதட்டுச்
சாயத்தை
நீக்கிவிட்டுப் பேசு!

- அ.தும்மா பிரான்சிஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.