அப்போதெல்லாம்
அதிகபட்ச வசதியாயிருந்தது.
நடுத்தர வர்க்கத்தின்
நாகரிக சின்னமென்றும் சொல்லலாம்.
அதிலேயே தொடங்கியது
அப்பாவின் வாழ்க்கை.
ஆயாவை அடிக்கடி மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்றதும்
பள்ளியில் சேர்க்கும் போதும்
பயன்பட்டது.
வாழ்வின் எல்லாவற்றிலும்
பங்கேற்றிருந்தது.
தம்பியும் நானும் பழகிக் கொள்ள
வாய்ப்பாயிருந்தது.
ஏறக்குறைய
என் வயதேயிருக்கும்.
அதன்பின் வாங்கியவை
திருட்டுப் போய் விட்டன.
வாகனங்கள் வந்து விட்ட நிலையில்
பயன்படுத்தப் படாமலிருந்தது பத்திரமாக.
ஓடுவதே சைக்கிளுக்கு
அழகு.
நிற்பதைப் பார்த்தால்
நெஞ்சு துடிக்கும்.
விற்க முடிவெடுக்கப்பட்டதன்
விளைவு விலை பேசப்பட்டது.
வாங்கியவன் ஓட்டிப் போக
விடாமல் பார்த்துக்கொண்டிருந்தன விழிகள்
தூரம் சென்றும்
மறையவில்லை.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.