இன்னமும் கையசைத்துத்தான்
வழியனுப்புகிறார்கள்
ஊருக்குப் போகும்போது

போருக்குச் செல்வதைப் போன்ற
வீரம்
ஊருக்குப் போவதிலும் உள்ளதோ?

கையசைக்கும்போது கவனியுங்கள்
அனுப்புபவர்களின் மன ஈரம்
அதில் கசிந்து கொண்டிருக்கக் கூடும்.

மிகையான அன்பின் பரிமாணம்
காற்றிலேறி உங்களுடன் வருகிறது.

பிஞ்சுக்கரங்களின்
கையசைப்பை கவனியுங்கள்
அதில் கொப்பளித்து வழியலாம்
குதூகலம்
அதன் மெல்லியத் தீண்டலில்
நீங்கள் ஏழுகடல் தாண்டலாம்.

கையசைப்பின் கதகதப்பை
வேண்டுகின்றன
எல்லா மனங்களும்.

கையசைப்புடனே
நகர்கிறது
நமக்கான காலம்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.