எப்படியோ தெரிந்துவிடுகிறது
எறும்புகளுக்கு
இறப்பின் நேரங்கள்

மனித உடல்களில் மொய்த்தும்
இழுத்தும் திரிகின்றன
ஒரு பெருங்கூட்டத்தை
தன்னகத்தே கொண்டிருக்கும்
எறும்புகள்
இறுமாப்பினை தோளில் சுமந்து
அலைகின்றன

தப்பிக்கும் நோக்கில்
கடித்துப் போகும் எறும்புகளிடம்
வன்மம் இருப்பதில்லை

இறப்பின் உடம்பினில் ஏறிச்செல்லும்
எறும்புகள் அறிவதில்லை
தன் இனத்தின் மீது ஒட்டு மொத்தமாக
திணிக்கப்படும்
கொடூர மரணத்தை

எப்போதும் சறுக்கி விழக் கூடியது
எறும்பின் வாழ்வு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.