“He will have to learn, I know, that all men are not just, all men are not true. But teach him also that for every scoundrel there is a hero; that for every selfish politician, there is a dedicated leader... Teach him that for every enemy there is a friend. It will take time. I know; but teach him. If you can, that a dollar earned is of far more value than five pound... Teach him to learn to lose... And also to enjoy winning. Steer him away from envy. If you can, the wonder of books... But also give him quiet time to ponder the eternal mystery of birds in the sky, bees in the sun, and flowers on a green hillside.”

“In school teach him it is far more honorable to fall than to cheat... Teach him to have faith in his own ideas, even if everyone tells him they are wrong... Teach him to be gentle with gentle people, and tough with the tough. Try to give my son the strength not to follow the crowd when everyone is getting on the band wagon... Teach him to listen to all men...; But teach him also to filter all he hears on a screen of truth, and take only the good that comes through.”

“Teach him, if you can, how to laugh when he is sad... Teach him there is no shame in tears. Teach him to scoff at cynics and to beware of too much sweetness... Teach him to sell his brawn and brain to the highest bidders, but never to put a price tag on his heart and soul. Teach him to close his ears to a howing mob... And to stand and fight if he thinks he’s right.”

“Treat him gently, but do not cuddele him, because only the test of fire makes fine steel. Let him have the patience to be brave. Teach him always to have sublime faith in himself, because then he will always have sublime faith in mankind.”

“This is a big order, but see what you can do... He is such a fine little fellow, my son!”

மேலே எழுதப்பட்ட வாசகங்கள் அமெ ரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தன் மகனுடைய பள்ளி தலைமையாசிரியரிடம் தன் மகனுக்கு எப்படி கல்வி போதிக்க வேண்டும், marrku_9000என்னென்ன போதிக்க வேண்டும் என்று 19ஆம் நூற்றாண்டில் எழுதிய கடிதம். இது அந்தக் காலத்தில் நிலவி வந்த கல்விச் சிந்தனைகளின் புரிதலுக்கு வழி வகுக்கும். பள்ளி என்பது ஏதோ வரையறுக்கப்பட்ட பாடத் திட்டங்களை மட்டுமே போதிக்கும் ஒரு நிறுவனமாக அந்தக் காலத்திலேயே இருந்துவந்துள் ளது என்பதற்கு இதுவே தக்கச்சான்று. நான்கு சுவர்களுக்குள் மாணவர்களை அடைத்து வைத்து அவர்கள் எல்லோருக் கும் வாழ்வின் ஒரே மீட்பர் அவர் களுடைய ஆசிரியர் தான், ஆசிரியர் சொல்வதை அப்ப டியே காதுகொடுத்து மாணவர்கள் கேட்டு அதை அப்படியே அவர்களுக்கென்று வைக்கும் தேர்வு களில் அப்படியே அச்சுப் பிசகாமல் எழுத்தில் வடிக்க வேண்டும். கவனக் குவிப்பு என்பது எல்லோருக்கும் ஒரே அளவில் இருக்கும் என்கிற முன் அனு மானத்தின்படி இந்தமுறை பின்பற்றப் பட்டிருக்கலாம். ஆனால் காலப்போக் கில் மாணவர்களின் வெளிப்பாட்டுத் திறனில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளைக் காணும்போது அது மாணவர்களின் குறைபாடா அல்லது போதிக்கும் ஆசிரியரின் குறைபாடா என்ற கேள்வி மேலெழும்பத் தொடங்கியது. இதன் விளை வாக உளவியல் அடிப்படையில் கற்பவர்களின் கல்வித்திறனை அணுகு வது என்பது பல்வேறு நாடுகளில் நடைமுறைக்கு வந்தது. காலவோட் டத்தில் மேற்குலக நாடுகள் அனைத் தும் தற்கால நடைமுறைச் சிக்கல்களை நுணுகி ஆராய்ந்து, அவர்கள் முன்னர் உருவாக்கிய கல்விமுறையை மறு ஆய்வுக்குட்படுத்தி அதன்பிறகு கிட்டத் தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக பல் வேறு கல்விமுறைகள் மேலைநாடுகளில் பின்பற்றப்பட்டு பல்வேறு வளர்ச்சி நிலைகளை எய்தியுள்ளது. இந்தச் சூழ் நிலையில் மேலைநாடுகளில் அறுபது களின் மத்தியில் கல்வியில் நாடகம் என்கிற கருத்தாக்கம் துளிர்விட ஆரம் பித்தது. இந்தக் கருத்தாக்கம் வெறும் நாடகம் என்கிற குறுகிய வட்டத்தில் அல்லாமல் கல்வியில் அரங்கு என்கிற நிலையில் சூல்கொள்ள ஆரம்பித்தது. நிகழ்வு மற்றும் குழந்தைகளை மையப் படுத் திய கற்கை நெறி ஆகிய இரண்டும் கலந்த கருத்தாக்கமாகத் துளிர்விட ஆரம்பித்தது. நாடகம் என்பது நிகழ்த்து முறை என்கிற எல்லை விரிவடைந்து அது ஒரு போதனாமுறை என்று நிறுவப் பட்டு வந்துள்ளது.

நாடகம் என்கிற ஊடகம் கற்பிக்கப் படும்பொழுது அது கற்பவருக்கு பல் வேறு நிலைகளில் பயன்தரக் கூடியதாக உள்ளது. ஒருவர் நாடகம் என்கிற முழு மையடைந்த நிகழ்வை நிகழ்த்துவதற்கு முன்னால் அவர் பெறுகின்ற பயிற்சி களைச் சற்று ஆராய்ந்தாலே நமக்கு நாடகம் என்பது வெறும் நிகழ்த்துமுறை அல்ல, அது போதனா முறையையும் உள்ளடக்கியது என்று புரிந்துகொள்ள முடியும்.

உதாரணமாக ஆளுமை வளர்ச்சி, கற்பனா வளர்ச்சி, தேக ஆரோக்கியம், குரல்வளப் பயிற்சி, குழுவில் இணைந்து செயல்படுதல், நெருக்கடியில் வேலை களைப் பகிர்ந்துகொள்ளுதல், மொழி பற்றிய அறிவு, வரலாறு மற்றும் சம காலத்தைப் பற்றிய அறிவு, நடை முறைச் சிக்கலைப் பற்றிய அறிவு மற் றும் தெளிவு பெறுதல், கவனக் குவிப்பு எனப் பல்வேறு படிநிலைகளில் தொழிற்படுகிறது. இவை யனைத்தும் மறைமுகமாக மாணவர்களிடத்தில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நேரி டையாக கல்விக்கூடத்தில் மாணவர் ஆசிரியர் உறவு, கற்பித்தல் கேட்டல் ஆகியவற்றின் இடைவெளி குறைதல், நாடக உருவாக்க நிலை என்று வரும் போது சில புதிய விஷயங்கள் கிடைக்கப் பெறுவது மற்றும் சில புதிய விஷயங் கள் படைக்கப் பெறுவது என்கிற அம்சத்தை உள்ளடக்கியதாக உள்ளது.

இதை வைத்துப் பார்க்கும்போது கல்விக் கூடத்தில் ஆசிரியர் புத்தகத்தில் உள்ளதை இயந்திர கதியில் அப்படியே ஒப்புவிக்கக்கூடிய அதிகார நிலையில் இருந்து கீழ் இறங்கி வந்து மாணவர் களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய உந்து சக்தியாக மாறுகின்ற நிலை உருவா கிறது. இதன்மூலம் வகுப்பறை என்பது அதன் இயல்பான இறுக்க நிலையைத் தாண்டி மாணவர்களுக்கு இளகிய தன்மையை அளித்து அவர்களுடைய மனம் திறந்த பங்கேற்பிற்கு வழிவகுக் கிறது. உலகளாவிய கல்விச் சிந்தனை யாளர்களின் கருத்துப்படி கல்வியில் நாடகம் என்கிற வடிவத்தின் மூலம் மாணவர்கள் கல்வியறிவு பெறுவது என்பது அவர்கள் மனநிலைக் கேற்ப அவர்கள் சொந்த முயற்சியில் அவர்களா லேயே மிக எளிதாகக் கண்டடையக் கூடியதாக இருக்க வேண்டும் என்று அறிக்கைகள் நமக்குக் காட்டுகின்றன. இப்படிப்பட்ட செயல்முறையின் மூலம் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள பல்வேறு மாணவர்களிடம் பல வியத் தகு மாற்றங்களைத் தோற்றுவிக்க முடி யும் என்று சமகால பள்ளி மற்றும் கல்லூரி வளாக அரங்கச் செயற்பாடுகள் மெய்ப்பிக்கின்றன. அவர்கள் தங்கள் எண்ணங்களை தைரியமாகவும், தெளி வாகவும், திடமாகவும் வெளிப்படுத்தக் கூடிய பரந்த வெளியை இந்த முறை தருவதை களப்பணியில் அறிய முடிகி றது. எதிர்கால இருண்மையை போக்கக் கூடிய புதிய ஒளியைப் பாய்ச்சி கருத்தைக் கவர்கிற வகையில் மாணவப் பருவத்தில் கல்வியறிவு என்பது அமைய வேண்டும் என்பதே மாற்றுக் கல்விச் சிந்தனையை முன்வைக்கும் கல்வியாளர்களின் வாதமாக உள்ளது.

பிரித்தானிய கல்விச் சிந்தனையாளரான A.S. நீல், "ஒரு குழந்தை விளையாடக் கூடிய ஆற்றலை இழந்துவிட்டால் அது உளவியல் ரீதியாக இறந்ததாகக் கருதப் படுகிறது' என்று கூறுகிறார்.

உலகெங்கும் அறியப்பட்ட நாடகவிய லாளரான பீட்டர் புரூக் தன்னுடைய The Empty Space என்ற புத்தகத்தில் “நாடகம் என்பது ஒரு விளையாட்டு, அது நாடகம் என்கிற வடிவத்தின் இருத்தலுக்கும் ஒரு வர் நடிகராக உருவாவதற்கான தொழில் நுட்ப அறிவையும் தருகிறது. இந்த விளையாட்டு முறை என்பது நாடகத் திற்கான முன்நிபந்தனையாக இருந் தாலும் ஒட்டுமொத்த மானுட முன்னேற் றத்திற்கும் சுய முன்னேற்றத்திற்கும் படிக்கல்லாக இருக்கிறது'' என்று கூறுகிறார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கல்வியில் நாடகம் என்பது குழந்தைகளுக்கான நாடகம் என்கிற அளவில் நடைபெற்றுவந்தது. நாடகம் என்பது மக்களை பொழுதுபோக்கு அம்சம் கலந்த மகிழ்விக்கக்கூடிய ஒரு நிகழ்வு, அல்லது அறிவுஜீவிகளுக்கான நிகழ்வு என்கிற நிலையில் நிகழ்த்தப்பட்டு வந் தது. ஆனால் பார்வையாளர் என்பது சமூகத்தின் பல்வேறுபட்ட வயதினரை யும் உள்ளடக்கியது என்கிற புரிதல் பின்னர்தான் விரிவடைய ஆரம்பித்தது. இதன் பின்னணியில் குழந்தைகளும் நாடகத்திற்கான பார்வையாளர்களே என்கிற பார்வை உருவாகிறது. இந்தக் குழந்தைகளும் பார்வையாளர்கள் என் பது நகரங்களைவிட கிராமங்களில் இயல் பாகவே அறியப்பட்டு வந்துள்ளது.

உதாரணமாக தெருக்கூத்து நிகழ்வின் போது குழந்தைகளின் பங்கேற்பு என்பது முக்கியமாக கூத்தின் தொடக்கத்தில் கட்டியக்காரன் தோன்றும்போது குழந்தைகள் தங்கள் தங்கள் எண்ணங்களுக்கேற்ப உறவாடுவது நாடகத்திற்குள் ஒரு நாடகம் நிகழ்வது போன்ற உணர்வை நமக்கு அளிக்கும். கட்டியக்காரன் மேடையில் பிரவேசித்ததும் கட்டியக்காரனுக்கு தங்கள் அன்பைத் தெரிவிக்கும் முகமாக பீடி, முறுக்கு போன்ற திண்பண்டங்களை மாலையாகக்கட்டி கழுத்தில் அணிவிப்பதும், இன்னும் சில குழந்தைகள் மிகவும் நாகரிகமான பரிசாக ஏதாவது பொட்டலங்களைக் கைகளில் திணிப்பதும், அதை உடனே ஆர்வமாகக் கட்டியக்காரன் பிரித்துப் பார்க்கும்போது அதனுள்ளிருந்து தவளையோ, நண்டோ துள்ளிக் குதிப்பதும், அதைச் சற்றும் எதிர்பாரா ததுபோல் உடனே கட்டியக்காரன் தலைதெறிக்க ஓடுவதும், அதைக் கண்டு குழந்தைகள் ரசிப்பதும் என்று முழுமை யான பார்வையாளர் பங்கேற்போடு நிகழ்வதாகவும் உள்ளது. இப் படி நாடக நிகழ்வின்போது அவரவர் வயதுக்கேற்ப தங்கள் விருப்பப்படி நாடகக் காட் சியைப் பார்ப்பது என்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. குழந்தைகள் தங்களுக்குத் தேவையான காட்சியைப் பார்த்து உறக்கத்தில் ஆழ்வதும், வயது வந்த பெண்களும் ஆண்களும் தங்க ளுக்குத் தேவையான காட்சியைப் பார்த்துப் பின் உறங்குவதும் என நாடகம் தன் இயல்பில் நிகழ்வதாக உள்ளது.

இந்தப் பின்புலத்தில் குழந்தைகளும் நாடகத்திற்கான பார்வையாளர்களே என்பதை நாம் மறுதலிக்க முடியாது. இதனடிப்படையில் சென்னை போன்ற பெருநகரங்களில் பள்ளி அளவில் ஆண்டுவிழாவுக்கான கலைநிகழ்ச்சி களில் ஒன்றாக நாடகம் சடங்களவில் நிகழ்த்தப்பட்டு வந்தது. இந்த நாடக நிகழ்வுகள் பெரும்பாலும் மாணவர் களுக்கு நீதிபுகட்டும் கதைகளாகவோ, புராண, இதிகாச கதைகளாகவோதான் இருக்கும். அதுவும் நமது பொதுப்புத்தி யில் மாணவர்கள் என்றாலே சமூகப் பொறுப்பு என்பது அவர்களுக்குத்தான் வரவேண்டும், அதை உணர்த்தும் பொறுப்பு பெரியவர்களுக்குத்தான் உள்ளது என்கிற வறட்டுத்தனமான அணுகுமுறையோடு செயல்படுவதாக உள்ளது. ஆனால் குழந்தைகளுக்கென்று தனி உலகம் உள்ளது, அந்த உலகத்தில் அவர்கள் பார்க்கின்ற காட்சிகள், பாத் திரங்கள் என்ன என்பது தொடர்ந்த புறக்கணிப்புக்கு உள்ளாகி வந்துள்ளது.

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான நாடக முயற்சி என்று வரும்போது ஏதோ கற்பனையும் கலையம்சமும் நிறைந்த காட்சிகளை மேடையில் நிகழ்த்துவதோ அல்லது பார்வையாளர்கள் முன்னே துணுக்குத் தோரணங்களை நிகழ்த்தி அவர்களைச் சிரிக்க வைப்பதோ மட்டும் அல்ல. பெருவாரியான மக்களின் மனதில் இம்மாதிரியான எண்ணங்களே உள்ளன. ஆனால் இன்றைய நவீன உலகின் நெருக்கடிகள் என்னென்ன, அதை எப்படி புரிந்துகொள்ள வேண் டும், எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வதும் மிக அவசியமானது. இதைப் பற்றிய புரிதல் எல்லாம் அவர்களுக்கு எதற்கு என்று எதிர்ப்புக்குரல் எழலாம். ஆனால் இன் றைய நவீன அறிவியல் வளர்ச்சிப் போக்கில் ஊடகங்கள் பல்வேறு தளங் களில் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றைப் பற்றிய சரி யான புரிதலை, யதார்த்தத்திற்கும், ஊட கங்கள் கற்பிக்கும் பிம்பங்களுக்கும் உள்ள இடை வெளியையும் வருங்கால சந்ததியின ருக்கு விளக்கக்கூடிய கடமை மற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. அந்த வகையில் நாடகச் செயல் பாடுகளில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு வரும் கற்பித்தலில் நாடகம் என்பதை அணுக வேண்டியுள்ளது.

சென்னை செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி ஒவ்வொரு ஆண்டும் பள்ளி ஆண்டு விழாவின்போது மிகப் பெரிய அளவில் மாணவர்கள் மற்றும் மாணவி களை வைத்து தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்களை நிகழ்த்தி வருகிறது. இந்தப் பள்ளி பெருவாரியான பள்ளி களைப் போல சடங்களவில் நாடகம் நிகழ்த்துவதில்லை. இங்கே சடங்கள வில் என்கிற வார்த்தைப் பிரயோகம் கூர்ந்து kauuuhu_0990கவனிக்கத்தக்கது. ஏனென்றால் பள்ளி ஆண்டு விழா என்று வந்தால் அந்தப் பள்ளியின் தமிழ் ஆசிரியரோ அல்லது ஆங்கில ஆசிரியரோதான் நாடகத் தயாரிப்பைச் செய்துதர வேண் டும் என்பது எழுதப்படாத நியதி. இந்த ஆசிரியர்களும் தங்களுக்குத் தெரிந்த நாடக அறிவின்படி மாணவர்களை வைத்துக்கொண்டு தேச விடுதலைப் போராட்ட வரலாறு, குடும்பச் சிக்கல், கல்வியின் முக்கியத்துவம் இப்படிப் பல்வேறு கருப்பொருளை வைத்துக் கொண்டு பல பக்கக் கட்டுரைகளை நாடகங்களாக நிகழ்த்தி பள்ளி தலைமை யாசிரியரிடமோ, நிர்வாகத்திடமோ நல்ல பெயர் வாங்க வேண்டும் என்கிற நிலையில் ஏதாவது ஒரு துணுக்குத் தோரணங்களை நிகழ்த்திக் காட்டுவர். இந்த வகை நாடகங்களில் பெரும்பாலும் வகுப்பில் நிறைய மதிப்பெண்கள் வாங் கும் சற்று பிரகாசமான மாணவர்களே பங்கு பெறுவர். ஏனென்றால் இந்த மாணவர்களால் தான் வசனத்தை விரை வில் மனனம் செய்து வரி பிசகாமல் மேடையில் அப்படியே ஒப்புவிக்க முடி யும் என்கிற பாதுகாப்பு நடவடிக்கை. அப்படியானால் கல்வியில் சற்று பின்தங்கிய மாணவர்கள் கல்வியிலும் ஆசிரியர்களின் கூடுதல் கவனத்தை இழக்கிறார்கள், கலை, கலாச்சார அம் சங்களிலும் வாய்ப்பை இழக்கிறார்கள். சில பள்ளிகளில் கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் விளையாட்டிலோ, இசை யிலோ, நடனத்திலோ மற்றும் பல கலையம்சங்களிலோ பிரகாசமாக இருப் பதுவும் உண்டு. ஆனால் அவர்களை இனங்கண்டு அவர்களுக்குள்ளே எந்த விதமான திறமைகள் பொதிந்துள்ளன என்று கண்டு அவர்களையும் வெளிச்சத் திற்கு கொண்டு வரவேண்டும் என்று பெருவாரியான பள்ளிகள் கால அவகாசம் கருதி முயற்சி எடுப்பதில்லை.

இந்த வரிசையிலிருந்து சற்றே விலகி செட்டிநாடு வித்யாஸ்ரமம் மற்றும் அதன் குழுமப் பள்ளிகள் தங்களுடைய நாடகத் தயாரிப்புகளை நன்றாகத் திட்ட மிட்டு, நாடக ஆக்கத்திற்கென முறை யாக நாடகத்தைப் பற்றிய நுட்பங் களைக் கொண்ட நாடகச் செயற்பாட் டாளர்களைக்கொண்டு நிகழ்த்தி வரு கிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நானும் பாண்டிச்சேரி நிகழ்கலைப் பள்ளியின் முன்னாள் மாணவரான அனீசும் தமிழில் நான் எழுதிய "கற்றுத் தேர்ந்தவர்கள்' என்கிற நாடகமும், ஆங் கிலத்தில் ஞாநியின் மொழி பெயர்ப்பில் அன்பாதவன் எழுதிய சிறுகதையான "பாம்பு' என்கிற நாடகத்தையும் உரு வாக்கித் தந்தோம். பல ஆயிரங்கள் செலவு செய்து, நாடக இயக்குநர் களுக்கு ஊதியம் கொடுத்து நிகழ்த்தப் படும் இத்தகைய நாடகங்களில் கூட பள்ளி நிர்வாகத்தின் அர்த்தமற்ற குறுக் கீடு நடைபெற்றது. அது என்னவென் றால் நாடகத்தில் நடிக்கும் மாணவர்கள் அனைவரின் குரலும் ஒலிப்பதிவுக் கூடத்தில் பதிவு செய்யப்பட்டு நாடக நிகழ்வின்போது ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்பதுவே அது. அந்த ஒலிக்கேற்ப மாணவர்கள் தோன்றும் காட்சியில் அவர்கள் வெறும் வாய சைப்பு மட்டுமே செய்ய வேண்டும். இந்த வினோதமான முறை ஏன் என்று கேட்டதற்கு, மாணவர்களின் குரல் தெளிவாகப் பார்வையாளர்களைச் சென் றடையாது; அவர்கள் வசனங்களை மறந்து போவது போன்ற சிக்கல்களுக்கு இடமே இருக்காது என்று பள்ளி ஆசிரி யர்களிடமிருந்து பதில் வந்தது. இந்த முறையைப் பின்பற்றச் சொல்லிக் கொடுத்தது சென்னையில் இயங்கி வரும் ஆங்கில நாடகக்குழுவின் தலைவர் ஒருவர்தான் என்றும் சொன் னார்கள். ஆனால் நாங்கள் இப்படிப் பட்ட முறை கையாள்வதை எதிர்த் தோம். ஏனெனில் மாணவர்கள் முழு நேர நடிகர்கள் அல்ல. நாடக நிகழ் வானது அவர்களுக்குப் பல்வேறு வகையில் தன்னம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டும். மாணவர்கள் அவர வர் இயல்புக்கு ஏற்ப அவரவர் இயன்ற வரையில் குரலை வெளிப்படுத்தி நடிப் பதில் ஒரு அழகியல் தன்மை இருக் கிறது. அது மட்டுமல்லாமல் உண்மை யான நாடக நிகழ்வு என்பது அவரவர் சொந்தக் குரலில் மேடையில் உயி ரோட்டமாக வெளிப்படுவது என்பதை முழுநேர நாடகக்காரர்கள் மாணவர் களுக்கு உணர்த்த வேண்டிய கடமை யும் உள்ளது.

ஒரு நாடக இயக்குநன் தன் நடிகனை மேடையில் சரியாகப் பேசவைக்க இயலவில்லை என்றால் அது நாடக இயக்குநடைய குறையேயன்றி மாண வர்களுடையது அல்ல. அதுவும் இன்று ஒலிப்பெருக்கிச் சாதனங்களின் வளர்ச்சிப் போக்கில் இது ஏற்புடைய தல்ல என்று கூறி எங்கள் நாடகங்களில் மாணவர்களை மேடையில் உயிரோட் டமாகப் பேசி, பாடி, நடிக்க வைத் தோம். அதுமட்டுமல்லாமல் இந்தப் பள்ளியில் தொடர்ச்சியாக புராண, இதி காசங்களிலிருந்து கதைகளை நிகழ்த்து வது மட்டுமே நாடக நிகழ்வாக நிகழ்ந்து வருகிறது. மாற்றுக் கருத்துக்களுக்கோ, சிந்தனைகளுக்கோ, கற்பனை களுக்கோ மாணவர்களை திசைதிருப்ப வேண்டும் என்று அங்கு நாடக இயக்கம் செய்யச் செல்லும் நாடகச் செயற்பாட்டாளர்கள் முனைவதில்லை. ஒருவகையில் புராண இதிகாசங்களை அப்படியே நிகழ்த்து வது தங்களுக்குச் சுலபமானதாக அவர்கள் நினைத்திருக்கலாம்.

ஆனால் இதிலிருந்து முற்றிலும் விலகி, பேராசிரியர் சே. இராமானுஜத்திற்குப் பிறகு, காந்திமேரி, பிரளயன், வேலு சரவணன், முருக பூபதி, பார்த்திபராஜா, வேலாயுதம், ரவி, அனீஸ், சண்முக ராஜா, ஞாநி, மங்கை, கலைராணி, குமரன் வளவன், குமரகுருதாசன், கிருஷ்ணகுமார் ஆகியோர் செயல்பட்டு வருவது நம்பிக்கை அளிப்பதாக உள் ளது. குறிப்பாக பிரளயன் டி.வி.எஸ். குழுமப் பள்ளி மாணவர்களைக் கொண்டு ஆண்டுதோறும் அந்தப் பள்ளிக்காக நாடக ஆக்கத்தைச் செய்து கொடுத்து வருகிறார். முக்கியமாக முன்னமே திட்டமிட்டு எழுதப்பட்ட பிரதியைக் கொண்டு நாடக ஆக்கத்தில் ஈடுபடா மல், மாணவர்களிடம் பல்வேறு உரை யாடல்களை நிகழ்த்தி, விவாதத்துக் குட்படுத்தி, அந்த மாணவர்கள் மூல மாகவே நாடகக் கருப்பொருளை உருவாக்கி நாடகப் பிரதியை இறுதி செய்கிறார். இந்தவிதமான உரையாடல் முறையில் நாடகப் பிரதியை உருவாக் குவதன் மூலம் மாணவர்களுக்கு பல் வேறுபட்ட விஷயங்களை, பிரச்சனை களை எப்படி அணுக வேண்டும், மற் றும் அதன் முழுப்பரிமாணத்தையும் எப்படி உணர வேண்டும் என்கிற தெளிவு பிறக்கிறது. காப்பியங்களி லிருந்து எடுக்கப் படுகின்ற கதைகளாக இருந்தாலும்கூட அவை சமகாலச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் என்ன? அவற்றில் புறக்கணிப்புக்குள் ளான பகுதிகள் என்ன? வரலாற்று ரீதி யாக அவற்றின் பொருத்தப்பாடு என்ன? என்கிற விவாதங்களுக்கு இட்டுச் சென்று, அதைப் பற்றிய புரிதலை மாண வர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பிரதியானது வடிவமைக்கப்பட வேண் டியது இன்றைய தேவையாக உள்ளது.

இதேபோல சென்னை எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி மாணவிகளைக் கொண்டு நாடகம் இயக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்திரா பார்த்தசாரதியின் "கொங்கைத்தீ' என்கிற நாடகத்தை அந்தக் கல்லூரி மாணவிகள் சுமார் 70 பேரைக் கொண்டு இயக்கித் தரச் சொன்னார்கள். நாடகத்தின் மீதுள்ள ஈர்ப்பினால் 70 மாணவிகள் முதல் நிலைத் தேர்விற்கு வந்திருந்தார்கள். 70 மாணவிகளில் எந்தெந்த மாணவி நாட கத்தில் பங்குபெற முடியும் என்பதை எனக்கு அந்தக் கல்லூரி ஆசிரியைகள் கோடிட்டுக் காட்டினார்கள். ஆனால் நான் அவர்களிடம் ஒட்டு மொத்த மாண விகளிடமும் பேசாமல் எந்தவொரு மாணவியையும் நிராகரிக்க முடியாது என்று சொன்னேன். இதனடிப்படை யில் 3 நாட்கள் பல்வேறு நாடகச் செயற் பாட்டாளர்களைக் கொண்டு ஆரம்பக் கட்ட பயிற்சிப் பட்டறையைத் தொடங் கினேன். பயிற்சியின் முடிவில் 40 மாணவிகள் நிலைத்து நின்றார்கள்.

பின்னர் கல்லூரி ஆசிரியைகளிடம் 40 மாணவிகளையும் நாடகத்தில் பங்கேற்க வைப்பதாகச் சொன்னேன். அவர் களுக்குப் பெரும் வியப்பாக இருந்தது. இந்த நாடகத்திற்கு 20 நபர்கள் இருந் தால் போதுமே எப்படி 40 நபர்களைப் பயன்படுத்துவீர்கள் என்று கேட்டார் கள். நாடக நிகழ்விற்கு மேடையில் தோன்றும் ஒவ்வொருவருக்கும் வரை யறுக்கப்பட்ட இலக்கணம் இருக்க வேண்டும் என்பது அவர்களது கணிப்பு. இது பொதுப்புத்தியில் தமிழ் சினிமாவைப் பார்த்து மனதில் பதிந்த எண்ணமாக இருக்கலாம். ஆனால் இதற்கு நேர்மாறாக ஒரு காப்பிய நாடகத்தில் அவர்கள் இதுவரை தமிழ் பாடத்தில், செய்யுளில் மட்டுமே படித்த தமிழை (இதை தூயத் தமிழ் என்றோ, எழுத்துத் தமிழ் என்றோ நம் வசதிக் காகச் சொல்லிக்கொள்ளலாம்) பேசி மேடையில் நடிக்க ஆர்வத்துடன் பிரதியை படிக்க முன்வந்தார்கள். பெரும்பாலான மாணவிகள் தமிழி லேயே படித்து, தமிழிலேயே பேசுபவர் களாக இருந்தாலும்கூட பிரதியை வாசிக்கும்போது திக்கித்திணறித்தான் வாசித்தார்கள். இதைப் பார்த்தவுடன் ஆசிரியைகள் என்னிடம் வந்து நாங்கள் முதலிலேயே சொன்னோம் இல்லையா? இவர்களால் தமிழைக்கூடச் சரியாக உச்சரிக்க முடியாது என்று சொன்னார் கள். ஆனால் நான் சொன்னேன் பயிற்சி யின் போக்கில் பாருங்கள் மாணவிகள் தாங்களாகவே சரியாகப் புரிந்து படிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று.

இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால் மாணவிகள் சரியாகப் படிக்க வில்லை என்று ஆசிரியர்கள் மிகச் சுலபமாக மாணவிகளின் மீது குற்றம் சுமத்துகிறார்களே தவிர, இதன் பின்னணியில் என்னென்ன காரணிகள் இருக்கின்றன என்று ஆராய முன்வரவில்லை. ஒன்று, ஆசிரியர்கள் பாடம் நடத்துவதோடு சரி. மாணவர்கள் எப்படி உச்சரிக்கிறார்கள், அதில் என்ன தவறு இருக்கிறது, எப்படி உச்சரிக்க வேண் டும் என்று நாம் எவ்வளவு கற்றுத் தந்திருக்கிறோம் என்று தங்களைச் சுய விமர்சனத்திற்கு ஆட்படுத்துவதில்லை. மற்றொன்று, இன்று வாசிக்கும் பழக்கம் என்பது குறைந்து வருகிறது. எத்தனை மாணவர்கள் தங்கள் பாடத்தைத் தாண்டி வேறு இலக்கியங்களையோ, கதைகளையோ, கவிதைகளையோ படிக்கிறார்கள் என்று ஆராய வேண்டும். இதில் ஆசிரியரின் பங்கு மட்டும் போதாது, அவரவர் இல்லங்களில் எத் தனை பெற்றோர் வாசிப்பில் ஈடுபட்டி ருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்.

இப்படி நாடகம் என்பது ஏதோ ஒரு கதையை மையமாக வைத்து நிகழ்த்திக் காட்டுகிற ஓர் ஊடகம் என்பதற்கப் பால் பல்வேறு தளங்களில் இயங்குகின்ற பன்முகத் தன்மையுடன் கூடிய பரந்து விரிந்த போதனா முறை என்பதையும் கவனத்தில் கொண்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டியது இன்றைய சம காலத் தேவையாகும். ஏனெனில் இன்று பல்வேறு துறைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற மாற்றங்களின் அடிப்படையில் இதன் முக்கியத்துவம் மெல்ல மெல்ல உணரப்பட்டு வருகிறது. நாடகம் என்கிற முழுமைபெற்ற நிகழ்விற்கு முன்னால் உள்ள (Pre-Production Process) செயல்முறை இன்று மருத்துவத் துறை யில் நோய் நீக்கல் முறையாக (Theraphy), நிர்வாக மேலாண்மையில் ஊழியர்களின் வேலைத்திறன் கணிப்புக்கான பயிற்சிப் பட்டறை (Management Workshop) எனப் பல்வேறு நிலைகளில் தன் பங்களிப்பை அளித்து வருகிறது. அந்த வகையில் கல்வியில் நாடகம் என்பது மாணவர்களின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெறுவதன் மூலம் மாணவர்களிடம் நல்ல பல ஆரோக்கியமான தாக்கங்களை ஏற்படுத்த முடியும் என்பது நாடகச் செயற்பாட்டாளர்களின் களப்பணி அனுபவங்கள் மூலம் நமக்குத் தரவுகளாகக் கிடைக்கின்றன. இதனை ஒரு சில பள்ளி நிர்வாகங்களும் நன்கு உணர்ந்துள்ளன. ஆனால் இவை யெல்லாம் உயர்வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாக ஆகிவிடாமல் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்கு நாடகச் செயற்பாட்டாளர்களாகிய நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

இது ஏதோ நாடகச் செயற்பாட்டாளர்களால் மட்டுமே செய்யக் கூடிய விஷய மல்ல. கல்விச் சிந்தனையாளர்கள், கல்வி நிறுவனங்கள், அரசு கல்வித் துறை அதிகாரிகள் ஆகியவர்களையும் இணைத்து கூட்டு விவாதத்தை நிகழ்த்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய விஷயமாகும்.

.
-கே.எஸ்.கருணா பிரசாத்

 

Pin It