இந்துக்கள் எங்கெல்லாம் செல்கின்றார்களோ, அங்கெல்லாம் சாதியும் சாதி ரீதியான பாகுபாடுகளும் நீக்கமற நிறைந்திருக்கும். இந்துக்கள் எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் சாதிப் பாகுபாடுகளை மட்டும் அவர்கள் கைவிடுவதில்லை. சாதியின்றி இந்துக்களால் உயிர் வாழ முடியாது. அதனால்தான் இங்கிலாந்து நாட்டில் சாதிப் பாகுபாட்டிற்கு எதிரான ஒரு சட்டம் 13.4.2013 அன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தெற்கு ஆசியாவிற்கு அப்பால் அய்ரோப்பியக் கண்டத்தில் முதன் முறையாக சாதிப் பாகுபாட்டிற்கெதிரான சட்டத்தை இயற்றியதன் மூலம் சிறப்பு மிக்க வரலாற்றை இங்கிலாந்து உருவாக்கியிருக்கிறது!

இங்கிலாந்து சாதியால் பாதிப்பிற்குள்ளான ஒரு நாடு என்பது அங்கு அமைக்கப்பட்ட அரசு ஆணையங்கள் மற்றும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் தலித் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்புகள் இல்லை என்ற நிலையில் மனித உரிமையாளர்கள் மற்றும் தலித் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக நடத்திய பரப்புரை மற்றும் விழிப்புணர்வுப் போராட்டத்தின் விளைவாகவே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல நூறு சாதியினர் அங்கு வசித்தாலும் சாதிப் பாகுபாட்டுக்கு எதிராக சாதியற்ற தலித் மக்கள்தான் போராட வேண்டியிருக்கிறது.

கிராமங்களில்தான் சாதியம் கோலோச்சுகிறது; நகரங்களிலும், மாநகரங்களிலும் சாதிப் பாகுபாடுகள் மறைந்து விட்டன என்று பேசும் அறிவுஜீவிகள், இங்கிலாந்து போன்ற அதி முன்னேறிய நாட்டில் கடைப்பிடிக்கப்படும் சாதிப் பாகுபாட்டிற்கு என்ன காரணத்தைச் சொல்வார்கள்? நகரமயமாதல், தொழில்மயமாதல் மற்றும் உலகமயமாதல் மூலம் சாதிப் பாகுபாடுகளை திரை போட்டு மறைக்கலாமே தவிர, சாதியை ஒழித்து விட முடியாது. இங்கிலாந்தில் வசிக்கும் மெத்தப் படித்த தலித்துகள் அங்குள்ள சாதி இந்துக்களின் பண்ணைகளில் கொத்தடிமைகளாக வேலை செய்யவில்லை. சாதி இந்துக்களுக்கு இணையாகவும், அதற்கு மேலும் படித்து விட்டுதான் அங்கு பணிபுரிகிறார்கள். பிறகேன் சாதிப் பாகுபாடு? ஜாதி – இந்துக்களின் சிந்தனையிலும், மதத்திலும், பண்பாட்டிலும் வேர்கொண்டிருக்கிறது. இந்து மதத்தின் அடிப்படையிலான பண்பாட்டை அழித்தொழிக்காதவரை சாதி உயிர்வாழ்ந்து கொண்டே இருக்கும்.

இந்தியாவில் நடப்பதைப் போன்று தலித் மக்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் இங்கிலாந்தில் இல்லை எனினும், இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து புலம்பெயர்ந்த இந்துக்கள் பல்வேறு நிலைகளில் தலித் மக்களுக்கு எதிரான பாகுபாடுகளை மேற்கொள்கிறார்கள். பணிசெய்யும் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தலித் மக்களை கேலி செய்வது, தொல்லை கொடுப்பது, அலைக்கழிப்பது என பாகுபாடுகள் பட்டியலிடப்படுகின்றன. சாதி மறுப்பு – காதல் திருமணங்கள்கூட அங்கு பிரச்சனைக்குரியதாகிறது என்று தலித் உரிமைக்காகப் போராடும் இயக்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

சாதியமும் இனவாதமே என்பதால், அய்க்கிய நாடுகள் அவை போன்ற உலகளாவிய மனித உரிமை மன்றங்களில் சாதி விவாதிக்கப்பட வேண்டும் என்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக தலித் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இன்றுவரை "சாதி ஒரு உள்நாட்டுப் பிரச்சனை' என்று சாதிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தினர், இங்கிலாந்தில் சாதிப்பாகுபாட்டுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில் அம்பலப்பட்டுப் போயுள்ளனர். இந்திய விடுதலைக்குப் பிறகான 66 ஆண்டுகளில் தீண்டாமை ஒரு குற்றமாக ஆக்கப்பட்டும் அது ஒழிக்கப்படாத நிலையில், அதற்கு மூலகாரணமாக இருக்கும் சாதியை ஒழிக்க இதுவரை சட்டமே இல்லை எனில், அதன் மீதான பாகுபாடுகளை மட்டும் எப்படி ஒழிக்க முடியும்?

எனவே, இங்கிலாந்தில் இயற்றப்பட்டதைப் போன்ற ஒரு சட்டம் இந்தியாவிலும் இயற்றப்பட வேண்டும். அப்போதுதான் தலித் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள தனிக்குடியிருப்புகளுக்கும், தனிச் சுடுகாடுகளுக்கும், தனி வழிபாட்டு இடங்களுக்கும், சமூக ஒதுக்குதல்களுக்கும் முடிவு கட்ட முடியும்.

Comments

3 comments

3
seyed muhammed
இங்கிலாந்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் போன்ற ஓர் சட்டம் இந்தியாவிற்கு அவசியம் என எழுதுவோர் பிரச்சனையின் தீவிரம் அறியாதோர் அல்லது அறிந்திருந்தும் மறைப்போர் ஆவர்.
ஜாதியம்,இது சட்டங்களால் ஒழிக்கப் படக்கூடிய சாதாரணம் அல்ல;
இன்று சட்டம் இயற்றியுள்ள இங்கிலாந்து.....அது சார்ந்துள்ள ஐரோப்பா,அமெரிக்கா,ஆப்ரிக்கா என பல மேற்க்கத்திய காலனி நாடுகளில் இன்றும் நிறவெறி சக்கைப் போடு போடுகிறது.அண்மையில் கூட இனப்பாகு பாட்டிற்கு எதிராக இங்கிலாந்தில் கவரம் நடந்தது,அமெரிக்க நீதிமன்றம் ஒரு இனவெறி வெள்ளைக் கொலைகாரனை விடுதலை செய்தது என எவ்வளவோ அடுக்கலாம்;
ஜாதியம்,எவ்வித ஆதாரமும் அடிப்படையுமில்லாத வடிகட்டப்பட்ட பொய்;மனிதர்களின் உள்ளம் விரும்பும் பெருமை அகம்பாவத்தின் வெளிப்பாடு;
நான்,எனது எனும் சுய நலம் ஜாதியம்;இந்த சுய நலவெறியை போற்றி பாதுகாக்க பல கற்பனைகள் உலகில் வலம் வருகின்றன;அவற்றில் முதன்மையானது சிலை வணக்கம்.
சிலை வணக்கம்,நான் கடவுள் என்ற தத்துவத்தின் கிளை.ஆதலால் தான் வீதிக்கும் வீதி முக்கிற்க்கும் சிலைகளும் வடிவங்களும் மாறி மாறியுள்ளது.சிலைகள்.....கடவுள் தத்துவத்திற்க் கெதிரான உலகாதாய சிந்தனை....அதன் விபரீதம் தான் நேர்ச்சைகளும் நெய்வேத்தியங்களும் பூஜாரிகளும்;கடவுளை நெருங்க நாங்கள் வேண்டும் என்ற கூப்பாடு......நாங்கள் கடவுளின் அவதாரங்கள் அல்லது குழந்தைகள் அல்லது குடும்பங்கள் என்பதற்கான அடையாளம்.இந்த அடையாளங்களோடு இதை ஏற்க்கும் மனதோடு ஜாதியத்தை வெறுப்பது அல்லது மறுப்பது பாசாங்கு ஆகும்;கொச்சையாக சொல்வது எனில் வஞ்சகமாகும்.
சில நேரங்களில் சிலைகளின் இருப்பிடத்தை கொள்கைகள் கோட்ப்பாடுகள் பிடித்துக் கொள்ளும்.ஆம்,கம்யூனிஷம் எனும் வர்க்கப் போராட்டம் இந்த ஜாதியத்தின் வேறோரு வடிவம்.ஆதலால் தான் இந்தியாவில் ஜாதியத்தை ஏற்ற பார்ப்பனர்கள் யாரும் பூனூலை கழற்றவுமில்லை,ஜாதிய அடையாளத்தை விடவுமில்லை.அது போல் மேற்க்கத்திய உலகில் கம்யூனிஷ பியூரோகிரஷிகள் கம்ரேட்டுகள் ஆலய தந்தைமார்களின் ஆசிர்வாதங்களை அவமதித்ததுமில்லை.போட்டியும் பூசலும் மக்களை அடிமையாக்குவது யார்?ஆலய நேரடி கட்டுப்பாட்டிலிருந்த அரசர்களா?ஆலய தந்தைமார்களின் ஆசிர்வாதத்தை பெற்ற கம்ரேடுகளா?
இது ஜனநாயகத்திற்கும் பொருந்தும்;பொதுமக்களின் ஆசை அபிலாஷை என கூக்குரல் எழுப்பும் இதன் கொள்கை முழக்கம்...மக்களின் முன் நெற்றி மயிரை உரத்து பிடிக்கவும் மக்களை அடிமைகளாக்கவும் செய்யும் ஏற்ப்பாடு.நாய்களைக் கூட விசாரிக்காமல் கொல்ல மாட்டோம் என மார் தட்டும் இவர்கள் தான் மனிதர்களை அடிமைகளாக்கியதில் முன்னி பெற்றிருக்கிறார்கள்.
இது போன்று எல்லா உலகியல் கொள்கைகளும் ஜாதியத்தின் ஏதேனும் ஒரு வடிவில் உலகில் வலம் வருகின்றன்.
இந்த ஜாதியம் ஒழிய வேண்டும் என்றால்...ஒழிக்கப் பட வேண்டும் என்றால் இஸ்லாம் ஒன்றே வழி!
இஸ்லாம்,மனிதர்களின் கற்பனையோ கைசரக்கோ அல்ல.மனிதர்களை படைத்த இறைவனின் மார்க்கம்.இங்கு மனிதன் எல்லா நிலையிலும் மனிதன்;அவன் பெரும் ஆற்றல் படைத்தவனாயிருக்கலாம்,ஒன்றுமில்லா இசாமான்யனாகலாம்......அறிவாளியாக இருக்கலாம்,அறிவைப் பெற முயற்ச்சித்தும் அதை அடையா முடியாதவராகலாம்...வெள்ளையராக கறுப்பராக தமிழராக அரபியராக இந்திக்காரனாக.....பணக்காரனாக ஏழையாக இப்படி யாராக இருந்தாலும் அவன் மனிதன்,இறைவனின் அடிமை.
இறைவனின் அருளை பெற ஒரே வழி தனனைப் போன்ற சக மனிதர்களோடு இனைந்து சகஜமாக
வாழ்வதில் தான் உள்ளது.பிற மனிதனை தாழ்த்தவோ கொச்சைப்படுத்தவோ கேவலப்படுத்தவோ செய்வோர் தன்னை முஸ்லிம் என அழைத்துக் கொள்ளும் தகுதியை இறைவனிடத்தில் இழந்து விடுவார்கள்;
இஸ்லாமிய வரலாற்றை பிற்க்காலத்தில் திருத்தி எழுதிய மேற்க்கத்தியர்களாலும் மறைக்க முடியாத ஒன்று இஸ்லாமிய உலகில் தான் அறிஞர்களும் ஆட்சியாளர்களும் முன்னாள் அடிமைகளாக இருந்துள்ளார்கள்.
ஆக,ஜாதியம் ஒழிய ஒரே வழி இஸ்லாம்.
seyed muhammed
இங்கிலாந்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் போன்ற ஓர் சட்டம் இந்தியாவிற்கு அவசியம் என எழுதுவோர் பிரச்சனையின் தீவிரம் அறியாதோர் அல்லது அறிந்திருந்தும் மறைப்போர் ஆவர்.
ஜாதியம்,இது சட்டங்களால் ஒழிக்கப் படக்கூடிய சாதாரணம் அல்ல;
இன்று சட்டம் இயற்றியுள்ள இங்கிலாந்து.....அது சார்ந்துள்ள ஐரோப்பா,அமெரிக்கா,ஆப்ரிக்கா என பல மேற்க்கத்திய காலனி நாடுகளில் இன்றும் நிறவெறி சக்கைப் போடு போடுகிறது.அண்மையில் கூட இனப்பாகு பாட்டிற்கு எதிராக இங்கிலாந்தில் கவரம் நடந்தது,அமெரிக்க நீதிமன்றம் ஒரு இனவெறி வெள்ளைக் கொலைகாரனை விடுதலை செய்தது என எவ்வளவோ அடுக்கலாம்;
ஜாதியம்,எவ்வித ஆதாரமும் அடிப்படையுமில்லாத வடிகட்டப்பட்ட பொய்;மனிதர்களின் உள்ளம் விரும்பும் பெருமை அகம்பாவத்தின் வெளிப்பாடு;
நான்,எனது எனும் சுய நலம் ஜாதியம்;இந்த சுய நலவெறியை போற்றி பாதுகாக்க பல கற்பனைகள் உலகில் வலம் வருகின்றன;அவற்றில் முதன்மையானது சிலை வணக்கம்.
சிலை வணக்கம்,நான் கடவுள் என்ற தத்துவத்தின் கிளை.ஆதலால் தான் வீதிக்கும் வீதி முக்கிற்க்கும் சிலைகளும் வடிவங்களும் மாறி மாறியுள்ளது.சிலைகள்.....கடவுள் தத்துவத்திற்க் கெதிரான உலகாதாய சிந்தனை....அதன் விபரீதம் தான் நேர்ச்சைகளும் நெய்வேத்தியங்களும் பூஜாரிகளும்;கடவுளை நெருங்க நாங்கள் வேண்டும் என்ற கூப்பாடு......நாங்கள் கடவுளின் அவதாரங்கள் அல்லது குழந்தைகள் அல்லது குடும்பங்கள் என்பதற்கான அடையாளம்.இந்த அடையாளங்களோடு இதை ஏற்க்கும் மனதோடு ஜாதியத்தை வெறுப்பது அல்லது மறுப்பது பாசாங்கு ஆகும்;கொச்சையாக சொல்வது எனில் வஞ்சகமாகும்.
சில நேரங்களில் சிலைகளின் இருப்பிடத்தை கொள்கைகள் கோட்ப்பாடுகள் பிடித்துக் கொள்ளும்.ஆம்,கம்யூனிஷம் எனும் வர்க்கப் போராட்டம் இந்த ஜாதியத்தின் வேறோரு வடிவம்.ஆதலால் தான் இந்தியாவில் ஜாதியத்தை ஏற்ற பார்ப்பனர்கள் யாரும் பூனூலை கழற்றவுமில்லை,ஜாதிய அடையாளத்தை விடவுமில்லை.அது போல் மேற்க்கத்திய உலகில் கம்யூனிஷ பியூரோகிரஷிகள் கம்ரேட்டுகள் ஆலய தந்தைமார்களின் ஆசிர்வாதங்களை அவமதித்ததுமில்லை.போட்டியும் பூசலும் மக்களை அடிமையாக்குவது யார்?ஆலய நேரடி கட்டுப்பாட்டிலிருந்த அரசர்களா?ஆலய தந்தைமார்களின் ஆசிர்வாதத்தை பெற்ற கம்ரேடுகளா?
இது ஜனநாயகத்திற்கும் பொருந்தும்;பொதுமக்களின் ஆசை அபிலாஷை என கூக்குரல் எழுப்பும் இதன் கொள்கை முழக்கம்...மக்களின் முன் நெற்றி மயிரை உரத்து பிடிக்கவும் மக்களை அடிமைகளாக்கவும் செய்யும் ஏற்ப்பாடு.நாய்களைக் கூட விசாரிக்காமல் கொல்ல மாட்டோம் என மார் தட்டும் இவர்கள் தான் மனிதர்களை அடிமைகளாக்கியதில் முன்னி பெற்றிருக்கிறார்கள்.
இது போன்று எல்லா உலகியல் கொள்கைகளும் ஜாதியத்தின் ஏதேனும் ஒரு வடிவில் உலகில் வலம் வருகின்றன்.
இந்த ஜாதியம் ஒழிய வேண்டும் என்றால்...ஒழிக்கப் பட வேண்டும் என்றால் இஸ்லாம் ஒன்றே வழி!
இஸ்லாம்,மனிதர்களின் கற்பனையோ கைசரக்கோ அல்ல.மனிதர்களை படைத்த இறைவனின் மார்க்கம்.இங்கு மனிதன் எல்லா நிலையிலும் மனிதன்;அவன் பெரும் ஆற்றல் படைத்தவனாயிருக்கலாம்,ஒன்றுமில்லா சாமான்யனாகலாம்......அறிவாளியாக இருக்கலாம்,அறிவைப் பெற முயற்ச்சித்தும் அதை அடையா முடியாதவராகலாம்...வெள்ளையராக கறுப்பராக தமிழராக அரபியராக இந்திக்காரனாக.....பணக்காரனாக ஏழையாக இப்படி யாராக இருந்தாலும் அவன் மனிதன்,இறைவனின் அடிமை.
இறைவனின் அருளை பெற ஒரே வழி தனனைப் போன்ற சக மனிதர்களோடு இனைந்து சகஜமாக
வாழ்வதில் தான் உள்ளது.பிற மனிதனை தாழ்த்தவோ கொச்சைப்படுத்தவோ கேவலப்படுத்தவோ செய்வோர் தன்னை முஸ்லிம் என அழைத்துக் கொள்ளும் தகுதியை இறைவனிடத்தில் இழந்து விடுவார்கள்;
இஸ்லாமிய வரலாற்றை பிற்க்காலத்தில் திருத்தி எழுதிய மேற்க்கத்தியர்களாலும் மறைக்க முடியாத ஒன்று இஸ்லாமிய உலகில் தான் அறிஞர்களும் ஆட்சியாளர்களும் முன்னாள் அடிமைகளாக இருந்துள்ளார்கள்.
ஆக,ஜாதியம் ஒழிய ஒரே வழி இஸ்லாம்.
P.T.Shanmugasundaram
இஸ்லாத்தில் பலபிருவுகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்த உண்மை.இவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது உலகறிந்த காட்சி.இது ஈராக் முதல் சிரியாவரை பலநாடுகளில் அன்றாடநிகழ்வாக நடேந்தேரிவருகிறது.அப்படி இருக்க சாதியை ஒழிக்க இஸ்லாத் தான் வழி என்று சொல்வது எந்தவகையில் சரி.மக்கள் தொகை அடிப்படையிலான தேர்தல் தொகுதி முறை சாதியை பாதுகாக்கிறது.எனவே சாதியை நீர்த்துப்போகச்செய்ய தொழில்முறை தொகுதிமுறையை நடைமுறை படுத்தவேண்டும்.இது மக்களை வர்க்கமாகத் திரளச்செயும்,வாக்கு கேட்பவர்களும் தொழில்பிரச்சனையை முன்வைத்து தொழில் புரிபவகளையே திரட்டுவார்.தனிநபர் லாபத்திற்கான உற்பத்தியும்,சந்தைக்கான உற்பத்தியும் நீடிக்கின்ற வரையிலும் சாதி நீடித்திருக்கும்.மக்களின் தேவைக்கான உற்பத்தி,அனைவருக்கும் சென்றடைவதற்கான உற்பத்தியை நடைமுறைப்படுத்தும் பாட்டாளிவர்க்க புரட்சியின் மூலம் அமையும் பாட்டாளிவர்க்க அரசே!சாதியை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.