கீற்றில் தேட...

மாண்டொழிக மரண தண்டனை
விலை ரூ.100

“குற்றங்கள் நிகழாமல் தடுத்து நிறுத்துவதில் ஆயுள் சிறைத் தண்டனையைவிட, மரண தண்டனையால் ஏதும் உருப்படியாகச் செய்துவிட முடியாது. காவல் துறை அதிகாரிகளும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளும்தான் மரண தண்டனையை மிக உறுதியாக ஆதரிக்கிறார்கள். இருப்பினும், மரண தண்டனையை ஒழித்துவிட்ட சமுதாயங்களைவிட, அதைத் தக்க வைத்துக் கொண்டுள்ள சமுதாயங்களில்தான் காவல் துறையினர் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் அவ்வாறு பாதுகாப்பாக இல்லை என்பதற்கான சான்றுகள் நிறையவே உள்ளன.''

ஆசிரியர்கள் : வி.ஆர். கிருஷ்ணய்யர், கே. பாலகோபால்,
பழ. நெடுமாறன், தியாகு
பக்கங்கள் : 248
வெளியீடு : மோ. ஸ்டாலின் நினைவு நூலகம்,
87, கீழை அலங்கம், தஞ்சாவூர் 613 001
பேசி : 94438 65698

பஞ்சமி நில மீட்பு சட்ட நடைமுறை கையேடு
விலை ரூ.100

“இப்போது புது எழுச்சியுடன் பஞ்சமி நில மீட்பும், நில உரிமைக் கோரிக்கையும் பரவலாக தலித்துகளால் முன் வைக்கப்படும் சூழலில், இக்கையேடு பெரும்பங்காற்றும். குறிப்பாக, களப்போராளிகளுக்கு உதவிடும் வகையில், மாவட்ட அளவிலான பஞ்சமி நிலம் பற்றி விபரங்கள், வருவாய்ப் பதிவேடுகள் கிராமக் கணக்குகள் பற்றிய நுட்பங்கள், மாதிரிப் படிவங்கள், நீதிமன்றம் சென்ற பல வழக்குகளின் சாரங்கள், தீர்ப்புகள், அரசின் ஆணைகள், கடிதங்கள் எனப் பலவும் முறையாகக் கோர்க்கப்பட்டு, பஞ்சமி நிலம் குறித்த சிறு வரலாற்றுடன் இணைக்கப்பட்டு இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.''

ஆசிரியர்கள் : ச ஆரோக்கிய மணிராஜ், ப. முருகேசன், ம. இன்பக்குமார்,
பக்கங்கள் : 232
வெளியீடு : அனித்ரா அறக்கட்டளை, 5/1, அரத்தூண் சாலை, ராயபுரம், சென்னை 13
பேசி : 94441 24446

ஆவேசம் - சிறுகதைத் தொகுப்பு
விலை ரூ.35

“மாற்குவின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. ஏற்கனவே தமிழ் இலக்கிய உலகிற்கு நாவல்கள் படைத்து அறிமுகமானவர். பொதுவாகவே படைப்பாளிகள் சமூகத்தில் நிலவும் அவலங்களையும் வாழ்வியல் சிக்கல்களையும் தம் படைப்புகளில் எடுத்துரைப்பதுண்டு. ஆனால், மாற்கு தம் படைப்புகளில் சிக்கல்களை மட்டும் எடுத்துக் கூறுவதில்லை. அந்தச் சிக்கலுக்கானத் தீர்வு எது என்பதையும் எடுத்துரைக்கிறார். கத்தோலிக்க கிறித்துவத் திருச்சபையில் தலித்துகளுக்கு ஏற்படும் பல்வேறு சிக்கல்களை அவன் ‘யாத்திரை' காட்டியது போலவே இச்சிறுகதை இலக்கியம் காட்டுகிறது.''

ஆசிரியர் : மாற்கு
பக்கங்கள் : 94
வெளியீடு : வைகறைப் பதிப்பகம்,
பாளையங்கோட்டை


ஊமைகளின் தலைவன்
விலை ரூ.10

“இல்லை... எனக்குத் தாயகமில்லை. சுயமரியாதையின்றி மிருகத்தைவிட இழிவாக நடத்தப்படும் தாழ்த்தப்பட்டவர்கள், எப்படி இந்த நாட்டைத் தாயகமாய் கொள்ள முடியும்? நாட்டுப்பற்று எங்களுக்கு இல்லையென்றால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. இந்த நாடுதான். இந்நாட்டிற்கு நான் ஏதேனும் தொண்டு செய்திருந்தால், அது தேசபக்தியால் அல்ல. என் மனசாட்சியால்தான். யுகம் யுகமாக, காலால் மிதித்து நசுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோரின் மனித உரிமைக்காக நான் பாடுபடும்போது, இந்த நாட்டிற்கு நான் எந்த வகையிலும் உதவவில்லையென்றால் அது பாவமாகாது.''

ஆக்கம் : கில்
பக்கங்கள் :28
வெளியீடு : பூங்குயில் பதிப்பகம்,
100, கோட்டைத் தெரு, வந்தவாசி 604 408
பேசி : 93826 47849


ரெட்டமலை சீனிவாசன் வரலாறு
விலை ரூ.75

“எங்களுக்கு ஒரு பொறுப்பான அரசு தேவை என்றாலும், முதலாளிகள் மட்டும் மாறும் ஓர் அரசை நாங்கள் கோரவில்லை. நீங்கள் உருவாக்கப் போகும் ஆட்சியமைப்பு, உண்மையில் முழுப் பொறுப்பு வாய்ந்ததாக அமைய வேண்டுமானால், நீங்கள் கூட்டப்போகும் சட்டமன்றம் உண்மையில் முழுப் பிரதிநிதித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.''

ஆசிரியர் : வே. பிரபாகரன்
பக்கங்கள் : 256
வெளியீடு : திருவள்ளுவர் நூலகம்,
ஆர். 56/11, கோட்டூர்புரம், சென்னை 85
பேசி : 2447 2652


ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?
விலை ரூ.10

“பேச்சுவார்த்தை முயற்சிகளை திட்டமிட்டுக் குலைப்பது விடுதலைப் புலிகள்தான் என்ற பிரச்சாரத்தை, மேலைநாட்டு ஊடகங்களும் இந்திய பார்ப்பன சக்திகளும் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றன. இந்நிலையில், அந்தப் பிரச்சாரத்தின் திட்டமிட்ட உள்நோக்கத்தையும் உண்மைகள் புதைக்கப்படுவதையும், ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்? என்பதையும் இந்நூல் ஆதாரத்துடன் சுட்டுகிறது.''

ஆசிரியர் : விடுதலை க. ராசேந்திரன்
பக்கங்கள் : 64
வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம்,
27, 2 ஆவது தளம், கே.எம்.என். வீதி, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 28
பேசி : 2461 6233

மும்மொழிகளில் அம்பேத்கர் மலர்

Periyar Era என்ற ஆங்கில மாத ஏட்டின் வெளியீடாக அண்ணல் அம்பேத்கரின் 116 ஆவது பிறந்த நாள் மலரை வே. ஆனைமுத்து அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். 200 பக்கங்கள் கொண்ட இந்நூலில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அம்பேத்கர் மற்றும் தலித் இயக்கங்கள் குறித்த சிறப்பான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

அம்பேத்கரின் முக்கியப் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ள இந்நூலின் விலை : ரூ. 150
வெளியீடு : ‘பெரியார் ஊழி', 19, முருகப்பா தெரு, சென்னை 5 பேசி : 2852 2862

ஆதாரங்களின் அணிவகுப்பு

நூல்: உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்

இந்தியத் தேசியமும், இந்து தேசியமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகும். இந்தியத் தேசியத்தை உருவாக்க முனைந்த தலைவர்கள் பலரும், இந்து (ஜாதி) பண்பாட்டைதான் இந்தியப் பண்பாடு எனப் பிரச்சாரம் செய்தனர். இந்து பண்பாடு என்பது, மிகச் சிறுபான்மையினராக இருக்கும் பார்ப்பனர்களின் பண்பாடுதான். ஆனால், இந்நாட்டின் பெரும்பான்மை மக்களான தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை ‘இந்துக்கள்' என்று நம்ப வைப்பதில் பார்ப்பனியம் இன்றளவும் வெற்றி பெற்று வருகிறது. இதன் மூலம் சிறுபான்மை மக்களையும் ‘இந்து பெரும்பான்மை' (பயங்கரவாதம்) என்ற மாயை மூலம் அச்சுறுத்துகிறது. எனவே, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான ‘இந்து பண்பாட்டை' வேரறுக்க, எண்ணற்ற ஆதாரங்களின் அணிவகுப்புடன் அனைவரையும் போராட்டத்திற்கு அழைக்கிறது இந்நூல்.

ஆசிரியர் : பழ. நெடுமாறன்
வெளியீடு : தமிழ்க் குலம் பதிப்பாலயம்,
33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை 4
பேசி : 2464 0575
பக் : 800
விலை : ரூ. 350