ட           அரைகுறை ஆடைகளுடன் வரும் பக்தர்களை இந்து கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது.                                - மதுரை உயர்நீதிமன்றம்            ஆணை

                ஆனால், அர்ச்சகர்கள் மட்டும் மேலாடை இல்லாமலேயே வரலாம்! அதுல நீதிமன்றம் தலையிட முடியாது.

ட           கூடங்குளம் முதலாவது அணு உலையில் அடுத்த மாதம் மின் உற்பத்தி தொடங்க வாய்ப்பு.                          - இயக்குனர் ஆர்.எஸ். சுந்தர்

                அமைச்சர் நாராயணசாமி போயிட்டாரேன்னு கவலைப் பட வேண்டாம்; இதோ ஆர்.எஸ்.சுந்தர் வந்துட்டாருல்ல...

ட           பாரிசில் நடந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரியானாவில் வேதம் ஓதி ‘மகாயாகம்’.           - செய்தி

                இனிமே சிரியாவுல நடக்குற தாக்குதலுக்கும் யாகம் நடத்து வீங்க போலிருக்கு.

ட           பீகார் தோல்வி: பா.ஜ.க.வை குறைகூறும் அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.   - அமைச்சர் கட்காரி

                தாராளமா எடுங்க... ஆனா அதிருப்தி தெரிவித்த பீகார் மக்களை ஒன்றும் செஞ்சுடா தீங்கய்யா.

ட           மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகம் செய்வோரில் 95 சதவீதம் பேர் இந்துக்கள்.                           - முன்னாள் நீதிபதி சச்சார்

                உள்நாட்டுல எவரும் மாட்டிறைச்சியை சாப்பிட்டுவிடக் கூடாதுங்குற நல்ல எண்ணம் தான்.

ட           மதத்தையும் பயங்கரவாதத்தை யும் தனியே பிரிக்க வேண்டும்; ஒன்றாக இணைக்கக் கூடாது.           - மோடி பேச்சு

                அப்படீன்னா, பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ்.சையும் பிரிச்சு வைக்கனும்னு சொல்றீங்க...

ட           மகாராஷ்டிரா பா.ஜ.க. ஆட்சி தலித், பழங்குடி குழந்தை களுக்கான கல்விச் சலுகைகளை நிறுத்த முடிவு.                         - ‘இந்து’ ஏட்டின் செய்தி

                கேட்டா, நாங்க அம்பேத்கரை மதிக்கிறோம்னு சொல்வாங்க...

ட           முதலமைச்சர் அம்மா உத்தரவால் சேலத்தில் நல்ல அளவு மழை பெய்துள்ளது.                 - சேலம் மாவட்ட      ஆட்சித் தலைவர்

                மழைய நிறுத்த, எப்ப உத்தரவு வரப் போகுது அய்யா? கொஞ்சம் கருணை காட்டுங்களேன்.

Pin It