சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 15 புதிய நீதிபதிகள் அக்டோபர் 5ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.   இதில் 3ரூ மக்கள் தொகை கொண்ட  பார்ப்பனர்கள் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், விவரம் பின்வருமாறு: டாக்டர் அனிதா சுமந்த், ஆர்.சுப்பிரமணியன், சி.வி.கார்த்திகேயன் ஆகிய மூன்று பார்ப்பனர்கள்(20ரூ) தலைமை நீதிபதி சஞ்சய் கிசன் கௌல் உட்பட  மொத்தமுள்ள 54 நீதிபதிகளில் 9 பேர் பார்ப்பனர் என்பது ஏறக்குறைய 17 சதவீதம் பேர். அதிலும் அனிதா சுமந்திற்கு வயது 45 தான் ஆகிறது அவர் உச்ச நீதிமன்றம் வரை செல்லக்கூடிய வாய்ப்பு பெற்றுள்ளார். ஆனால் பிற்படுத்தப்பட்ட நீதிபதிகள் வயதோ 55க்கும் மேலாகிவிட்டது.

150 ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க நீதிமன்றத்தில் இதுவரை தேர்ந்தெடுக்கப்படாத சமூகப் பிரிவுகள் ஏராளம், ஏராளம். ஆகவே உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை கடைபிடிக்க வேண்டும் என்று கோருவதே சரியாக இருக்கும். இந்த 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இதுவரை ஒரு பிறன்மலை கள்ளர்கூட உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. மீனவர் இல்லை, கோனார் இல்லை, ஆசாரி இல்லை அருந்ததியர் இல்லை, முத்தரையர் இல்லை, வண்ணார் இல்லை, குயவர் இல்லை. இதுவரை 3 வன்னியர்களே நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளன. இன்னும் எத்தனையோ பிரி வினரில் இருந்து ஒருவர் கூட நீதிபதியாக தேர்ந் தெடுக்கப்படாமல் உள்ளனர். இதை திட்டமிட்டே செய்கிறார்கள்.

மேலும் பார்ப்பனர்கள் 45 வயதிலேயே தேர்ந் தெடுக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் வரை செல்கிறார்கள், பார்ப்பனரல்லாதார் 50 வயதிலும் 54, 55 வயதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு தனி நீதிபதியாகவே இருவர் அடங்கிய அமர்வுக்கு கூட செல்ல முடியாமல் ஓய்வு பெறுகிறார்கள், உதாரணம்: சுதந்திரம், அரிபரந்தாமன், சந்துரு போன்றோர். மேலும் இவர்களுக்கு முழுமை யான ஓய்வூதியம்கூட இந்த அரசு வழங்கவில்லை, பாதியளவே வழங்குகிறார்கள் இன்னும் எத்தனையோ பேர் இவர்களைப் போன்று உள்ளனர். ஆனால் இந்த நிலை பார்ப்பனர்களுக்கு வருவதில்லை. ஒரு சில சமூகத்தினரை மட்டுமே மீண்டும் தெரிவு செய்கின்றனர். தற்போது உள்ள நீதிபதிகள் பார்ப்பனர் 6 பேர், கவுண்டர்கள் 5 பேர், முதலியார் 5 பேர், பிள்ளைமார் 5 பேர். தலித்துக்கள் கணிசமான இடங்களை பெற்றுள்ள னர் அதிலும் அருந்ததியருக்கு இடமில்லை நீண்ட போராட்டத்திற்கு பிறகே தற்போது ஒரு இஸ்லா மியரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள், இல்லை என்றால் இஸ்லாமியர்களும் புறக்கணிக்கப்பட்டு இருப்பார்கள்.

இதுபோன்ற நேரங்களில் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள் என்ற காரணத்தால் தான் தலைமை நீதிபதி பண்டிட் கவுல் மத்திய தொழிற் பாதுகாப்பு படையை பாதுகாப்புக்கு வைத்து இருக்கிறார். 

Pin It