dvk stageகழக செயல் வீரர் தோழர் பத்ரி நாராயணன் 18ஆவது நினைவு நாளையொட்டி, 30.04.2022 காலை 9 மணியளவில், பத்ரி நாராயணன் நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் நினைவு கூறல் நிகழ்வு நடைபெற்றது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பங்கேற்று பத்ரி நாராயணனின் சமரசம் இல்லாத இயக்கப் பணிகளை நினைவு கூர்ந்தனர். இறுதியில் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

அதன்பின் பத்ரி நாராயணன் படிப்பகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

திராவிட மாடல் முதல் மண்டல மாநாடு 30.04.2022 அன்று மாலை 5 மணியளவில் இராயப்பேட்டை வி.எம். தெரு பெரியார் படிப்பகம் அருகில், தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தொடங்கி நடைபெற்றது.

நிகழ்விற்கு, வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜி வரவேற்பு கூறினார். மயிலை சுகுமார், முனு சாமி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வின், தொடக்கத்தில் விரட்டு கலைக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பகுத்தறிவுப் பாடல்களை நாத்திகன் பாடினார்.

கழகத்தின் மண்டல மாநாடு பரப்புரைக்காக நிமிர்வோம் வெளியீடாக வெளிவந்துள்ள 15 புத்தகங் களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, பேராசிரியர் சரஸ்வதி பெற்றுக் கொண்டார்.

கழகத் தோழர்களின் போராட்ட வழக்குகளை பெரிதும் சிரமேற்று தொடர்ந்து கவனித்தும், சில வழக்குகளில் முழு விடுதலையும் வாங்கித் தந்த வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, இளமாறன் ஆகியோருக்கு, மருத்துவர் எழிலன் பாராட்டி விருதை அளித்தார்.

தொடர்ந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன்,உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் திராவிட மாடல் குறித்து கருத்துரை யாற்றினர்.

வடசென்னை மாவட்ட செயலாளர் இராஜி மாநாட்டில், இயக்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 5000 பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் வழங்கினார்.

19.4.2022 முதல் 28.4.2022 வரை ‘திராவிட மாடல் நமக்கான அடையாளம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து, மண்டல மாநாட்டை விளக்கி தெரு முனைக் கூட்டங்கள் சிறப்புடன் நடைபெற்றன.

இரா. உமாபதி, நாத்திகன், அய்யனார், எட்வின், தேன்மொழி, பிரகாஷ், தபசி. குமரன், அன்பு தனசேகரன், உதயா, ஜெயப்பிரகாஷ் ஆங்காங்கே கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினர். மக்களிடம் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டு உண்டியல் வழியாக நிதி உதவி வழங்கப்பட்டது. மக்களிடம் பேராதரவு காணப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற தெருமுனை கூட்ட பிரச்சாரத்திற்கு, மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டத் தலைவர் வேழவேந்தன், ஏசுகுமார், மயிலை சுகுமார், இராவணன், ப. அருண் குமார், இராஜேஷ், கன்னியப்பன், செந்தில், சேத்துப்பட்டு வேலு, எழிலரசன், சூரியா, குகன், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் இரண்யா, தேன்மொழி, பிரவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மண்டல மாநாட்டின் சிறப்பு

ஈரோடு செயலவை வகுத்த திட்டத்தின்படி முதல் மண்டல மாநாட்டை சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சிறப்புடன் நடத்தி முடித்தது.

முன்னதாக நாள் ஒன்றுக்கு 3 கூட்டங்கள் வீதம் 21 தெரு முனைக் கூட்டங்கள் சென்னை முழுதும் நடத்தப்பட்டன.

20க்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், ஏழு நாட்கள் மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் முழுமையாகக் கடுமையாக உழைத்தனர்.

தோழர்களிடையே மிகுந்த உற்சாகத்தை உருவாக்கி ஒருங்கிணைப்பும் உறுதிப்படுத்தியது.

விரட்டு கலைக் குழுவைச் சார்ந்த 10 தோழர்கள், ஆனந்த் தலைமையில் மாநாட்டின் நோக்கங்களை விளக்கும் கலை நிகழ்வுகளையும் புதிய பாடல் களையும் தலைமைக் கழகத்தில் 3 நாட்கள் தங்கி, உருவாக்கி பயிற்சி எடுத்தனர்.

கலை நிகழ்ச்சிகளுக்கு இடையே கருத்துரை யாளர்கள் ஆழமான கருத்துகளை முன் வைத்துப் பேசினர். கலைஞர்களுக்கு கழக சார்பில் ஆடைகள் போர்த்தி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கவுரவித்தார். நிகழ்வுகள் அனைத்தை யும் மாவட்ட செயலாளர் இரா. உமாபதி ஒருங்கிணைத்தார்.

***

விழுப்புரம், கோவையில் பரப்புரைப் பயணம்

விழுப்புரம்-கோவை மாவட்டங்களில் “நமக்கான அடையாளம் திராவிட மாடல்” பரப்புரை - மக்கள் பேராதரவுடன் நடந்தது.

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் சந்திப்பு பரப்புரை பயணம் 23-04-22 அன்று காலை11 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன் தலைமையில் கண்டமங்கலத்தில் தொடங்கியது. பாக்கம் கூட்ரோடு, வளவனூர், கோலியனூர், விழுப்புரம் இரயில் நிலையம் நிறைவாக பழைய பேருந்து நிலையத்தில் இரவு 9 அளவில் நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியில் ம.க.இ.க கலைக் குழுவின் இசை நிகழ்ச்சி பிரகாஷ், ராஜ் ஆகியோர் மக்களைக் கவரும் வகையில் பாடல்களை பாடி சிறப்பித்தனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை பரப்புரை செயலாளர் விஜி பகுத்தறிவு, பா. விஜய குமார், திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்

தோழர்கள் அழகர், தமிழ், லிங்க மூர்த்தி ஆசிரியர் ரமணி, கிருஷ்ணராஜ், கவியரசன், விஷ்வா, மாதேஷ் பரப்புரைப் பயணத்தை வரவேற்று பலர் கலந்துகொண்டனர்.

25.04.22 இரண்டாம் நாள் விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை பயணம் செஞ்சி இந்தியன் வங்கி அருகில் திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ் தலைமையில் காலை 11 மணியளவில் நடபெற்றது. பேராசிரியர் நந்தகுமார் வரவேற்றுப் பேசினார் பரப்புரையை திமுக செஞ்சி பேரூராட்சித் தலைவர் மொகத்தியர் அலி மஸ்தான் தொடங்கி வைத்தார். தமுமுக மாவட்ட அமைப்பாளர் சையத் உஸ்மான், தமுமுக அலி ஜான், தமுமுக அசரப் ஆகியோர் பரப்புரைப் பயணத்தின் முக்கியத்துவத்தை வரவேற்றுப் பேசினார்கள்

தொடர்ந்து வளத்தியில் நெடுஞ் செழியன் பயணக் குழுத் தோழர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்று பேசினார்.

மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு மேல்மலையனூர் பேருந்து நிலையத்தில் பரப்புரை பயணத்தை வரவேற்று திமுக மையக்குழு உறுப்பினர் பேசினார்கள் பயண நிறைவாக கீழ் பெனாத்தூர் பகுதியில் திமுக கழக வர்த்தக அணி செயலாளர் முர்த்தி, சங்பரிவார் ஆர்.எஸ்.எஸ் ன் ஆபத்தான அரசியலை அம்பலப் படுத்திப் பேசினார்.

பரப்புரை நிகழ்ச்சியில் மக்கள் குடியரசு கட்சி தலைவர் தம்பி மண்டேலா, மக்கள் குடியரசு இயக்க மாவட்டச் செயலாளர் சக்திவேல், சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பரப்புரை பயணத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார், திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூஆ. இளையரசன் ஆகியோர் பரப்புரையின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்கள். பேசப்பட்ட கருத்துகளை மக்கள் ஆர்வமுடன் கேட்டனர்.

இரண்டு நாள் பரப்புரையிலும் 2000 ஆயிரம் துண்டறிக்கைகள் மக்களிடம் வழங்கப்பட்டது.

கோவை : 30.04.2022, சனிக்கிழமை மாலை சூலூர் பேருந்து நிலையத்தில் நமக்கான அடையாளம் திராவிட மாடல், மண்டல மாநாடு விளக்க பரப்புரைப் பயணம் நிகழ்வு மாலை 4.30 மணியலவில் நடைபெற்றது.

சூலூர் தமிழ்ச்செல்வி தலைமையில் நிகழ்வின் நோக்கம் மற்றும் திராவிட இயக்க முன்னோடிகள் மொழிபோர் தியாகிகள் பற்றிய நினைவு செய்தி களை விளக்கி கூறி நிகழ்வு தொடங்கப் பட்டது. தோழர்கள் உக்கடம் கிருஷ்ணன், சவுரிபாளையம் டிட்டோ போட்டோ கிராபர் சிவ ராசன் கொள்கை விளக்க பாடல்கள் பாடினார்கள்.

அடுத்து தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் திருப்பூர் மகிழவன், கல்வி வேலைவாய்ப்பு உரிமைகள் பறிப்பு பற்றிய கருத்துகளை கூறி உரையாற்றினார். சூலூர் நகர தி.மு.க பொருளாளர் ச.அங்கமுத்து திராவிட இயக்கம் தமிழகத்தில் நிகழ்த்திய சாதனைகளையும் மறுக்கப்படும் உரிமைகளையும் விளக்கி பேசி னார்கள். அடுத்து பாவேந்தர் பேரவை சார்பாக ஓய்வு பெற்ற ஆசிரியர் வேலுமயில் உரையாற்றினார்.

பின் திவிக கோவை மாநகர தலைவர் நேருதாஸ் உரைக்கு பின் திராவிடர் விடுதலைக்கழக கோவை மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வெள்ளிங்கிரி, மறுக்கப்படும் உரிமை களை பற்றியும் மதவெறி திணிப்பு பற்றியும் சிறப்பாக உரையாற்றினார். நாகலட்சுமி நன்றியுடன் நிகழ்வு நிறைவுற்றது.

நிகழ்வில் மாநில பொருளாளர் சு.துரைசாமி, கோவை மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி யாழ் வெள்ளிங்கிரி, மாநகர செயலாளர் மண்டல மாநாடு ஒருங்கினைப்பாளர் நிர்மல் குமார், மாநகர அமைப்பாளர் ஜெயந்த், பொள்ளாச்சி தோழர்கள் கணேசன், சிவா உடுமலை பாண்டிய நாதன், சூலூர் ஒன்றிய செயலாளர் சூலூர் பாபு, சூலூர் நகர பொறுப் பாளர் முனியப்பன், நீலம்பூர் அமைப் பாளர் தங்கராசு, அதிமுக மொழி பேராட்ட வீரர் மகன் பரணன், மதிமுக பூபதி மற்றும் திமுக, பாவேந்தர் பேரவை, பெரியார் உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

30.04.2022 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு செல்வராசபுரம், பாப்பம் பட்டி பிரிவு வெ.இரா.கு. செங்குட் டுவன் நினைவுத் திடலில் சூலூர் ஒன்றிய திவிக செயலாளர் சூலூர் பாபு, மறைந்த திராவிட இயக்கக் கொள்கை யாளர் வெ.இரா. குண. செங்குட்டு வனின் இயக்கப் பணி போராட் டங்கள் பற்றி விளக்கி தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு மாணவர் கழக விஷ்ணு, பறிபோகும் கல்வி வேலை வாய்ப்புகளை விளக்கிக் கூறினார்.

மாவட்ட திவிக செயலாளர் பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, மாநில பொருளாளர் சு.துரைசாமி சிறப்புரை யாற்றினர். முனியப்பன் நன்றியுரை யாற்றினார்.

கலந்து கொண்ட தோழர்கள் : மாநில பொருளாளர் சு.துரைசாமி, கோவை மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி யாழ் வெள்ளிங்கிரி, மாநகர செயலாளர் மண்டல மாநாடு ஒருங்கினைப்பாளர் நிர்மல் குமார், மாநகர அமைப்பாளர் ஜெயந்த், பொள்ளாச்சி தோழர்கள் கணேசன், சிவா, உடுமலை பாண்டிய நாதன், சூலூர் ஒன்றிய செயலாளர் சூலூர் பாபு, சூலூர் நகர பொறுப்பாளர் முனியப்பன், நீலம்பூர் அமைப்பாளர் தங்கராசு மற்றும் திமுக தோழர்கள்.

இருகூர் சந்தை : 30.04.2022 சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இருகூர் சந்தை பகுதியில் சிவராசு தலைமை தாங்க, கிருஷ்ணன் பரப்புரை பாடல் ஒன்றை பாட, தமிழ்நாடு மாணவர் கழக திருப்பூர் மகிழவன் மாணவர் உரிமைகள் சார்ந்து சிறு உரையாற்றினார்.

அடுத்ததாக இருகூர் பேரூர் கழக திமுக பொறுப்பாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ஓய்வு பெற்ற ஆசிரியர் என பகுதி திராவிட இயக்க உணர்வாளர்கள் திராவிட மாடலின் நோக்கத்தினை பற்றி உரையாற்றினார்கள். மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் பாண்டியநாதன், ஆனை மலை கணேசு உள்ளிட்டோர் திராவிட மாடல் ஏன் நமக்கான அடையாளம் என்பதை பற்றி பேசினார்கள்.

இறுதியாக மாவட்ட கழகச் செயலாளர் வெள்ளிங்கிரி, மாநில பொருளாளர் துரைசாமி, ஒன்றிய அரசால் பறிக்கப்பட்டு வரும் மாநில உரிமைகள், ஜி.எஸ்.டி. உள்ளிட்டவை குறித்து விரிவாக உரையாற்றினர்.

இந்த தெருமுனைக் கூட்டத்தில் பங்கேற்ற கழகத் தோழர்களுக்கு திமுக பேரூர் கழக நிர்வாகிகள் பயணாடை அணிவித்து பாராட்டி மகிழ்ந்தனர். நிறைவாக தங்கராசு நன்றியுரை கூறினார்.

இதில் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்ற னர். இந்த தெருமுனை கூட்டத்தில் மாநாட்டையொட்டி கழகம் வெளியிட்ட வெளியீடுகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். ரூ.1850-க்கு நூல்கள் விற்பனையானது. புத்தக விற்பனையை தோழர்கள் தமிழ்செல்வி, நாகலட்சுமி ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டனர்.

இந்நிகழ்வை கழக தலைமைக் குழு உறுப்பின சூலூர் பன்னீர்செல்வம் மற்றும் சிவராசு ஆகியோர் சிறப்பாக செய்தனர். அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது..

ஆனைமலை பகுதி : கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகா விற்கு உட்பட்ட காளியாபுரம், வேட்டைக்காரன்புதூர், ஆனைமலை ஆகிய பகுதிகளில் 26.04.2022 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நமக்கான அடையாளம் திராவிட மாடல் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது

மாலை 4 மணி அளவில் காளியா புரத்தில் சட்ட எரிப்பு போராளி நரசிம்மன் நினைவு திடலில் அரிதாசு தலைமையில் தோழர்கள் வினோதினி-கிருஷ்ணன் பாடலுடன் தொடங்கி யது. சிறப்புரையாக மாநில பொரு ளாளர் துரைசாமி, கோவை மாவட்ட செயலாளர் வே.வெள்ளிங்கிரி, கோவை மாநகர செயலாளர் நிர்மல் குமார், பன்னீர்செல்வம் தலைமை குழு உறுப்பினர், வெல்பேர் பார்ட்டி அமைப்பைச் சார்ந்த மணிமாறன் உரையாற்றினர்கள்.

மாலை 6 மணி அளவில் வேட்டைக்காரன்புதூரில் சட்ட எரிப்பு போராளி காளிமுத்து நினைவுத் திடலில் ஜாதி ஒழிப்பு பாடலுடன் தொடங்கி தி.மு.கவில் செல்வம், விசிக.வில் அப்பன்குமார், வெள்ளிங் கிரி சிறப்புரை ஆற்றினார்கள். இரவு 7 மணிக்கு ஆனைமலையில் சட்ட எரிப்பு போராளி ஹ.மு. முஹமது அனிபா நினைவு திடலில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கிருஷ்ணன், வினோதினி கொள்கை விளக்கப் பாடல்களை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மகிழவன் தமிழ்நாடு மாணவர் கழகம், நிர்மல் குமார், பாண்டிய நாதன், வெள்ளிங்கிரி, துரைசாமி ஆகியோர் திராவிட மாடல் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். இந்த தெருமுனை கூட்டத்திற்கு வே. ஹரிதாஸ் தலைமை தாங்கினார். ஆனந்த் முன்னிலை வகித்தார்.

ஈரோடு : ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் நடத்தும் தமிழ்நாட்டு மாநில உரிமை, கல்வி உரிமை, பண்பாட்டு உரிமைகளை மீட்டெடுக்கும் பரப்புரைப் பயணம் , நமக்கான அடையாளம் திராவிட மாடல் எனும் தலைப்பில் 1.5.2022 ஞாயிறு மே தினத்தன்று சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தொடங்கி நடைபெற்றது. தெருமுனை கூட்டத்திற்கு ஆறுமுகம் தலைமை யேற்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இதில் அமைப்பு செயலாளர் ப. ரத்தினசாமி, அறிவியல் மன்ற பொறுப்பாளர் ப. சிவகுமார், தலைமை கழகப் பேச்சாளர் காவை இளவரசன், மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் உரையாற்றினர். லீலாவதி, தேநீர் வழங்கி உபசரித்தார்.

பகல் ஒரு மணி அளவில் நசியனூரில் குமார் தலைமையில் நடை பெற்றது. இதில் ஆசிரியர் சிவக்குமார், காவை இளவரசன், அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி ஆகியோர் உரையாற்றினர். மதிய உணவு ஆசிரியர் கோபால் வழங்கினார். நசியனூர் குமார் பயணச் செலவுக்காக ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

நமக்கான அடையாளம் திராவிட மாடல் தெருமுனை கூட்டம் இன்று காலை சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தொடங்கி தொடர்ந்து நசியனூரிலும், அதைத் தொடர்ந்து மாலை 5 மணி அளவில் பெருந்துறை பேருந்து நிலையத்தில் பழனிச்சாமி தலைமையில் நடை பெற்றது. இதில் ஆசிரியர் சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி, அமைப்புச் செய லாளர் ப. ரத்தினசாமி ஆகியோர் உரை யாற்றினர். கழக ஆதரவாளர் சின்ன சாமி தேனீர் வழங்கியும் டீசல் 5 லிட்டர் வழங்கியும் வழியனுப்பி வைத்தார்.

மாலை 5 மணி அளவில் பெருந் துறை பேருந்து நிலையத்தில் பழனிச் சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசிரியர் சிவக்குமார், கிருஷ்ண மூர்த்தி, அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி ஆகியோர் உரை யாற்றினர். கழக ஆதரவாளர் சின்ன சாமி தேனீர் வழங்கியும் டீசல் 5 லிட்டர் வழங்கியும் வழியனுப்பி வைத்தார்.