‘வேதங்களுக்கு காலம் இல்லை; அது கடவுளால் உருவாக்கப்பட்டது; அநாதியானது’ என்று இப்போதும் பார்ப்பனர்களும் ஆர்.எஸ்.எஸ்.சும் கூறிக் கொண்டிருக்கின்றன. அது பழைமையானது என்பதற்காகவே அர்ச்சகர்கள் ‘பஞ்சகச்சத்தோடு’ கீழே மட்டும் மறைத்துக் கொண்டு மேலாடை இல்லாமல், உச்சிக்குடுமி, பூணூல் கோலங்களோடு வலம் வருகிறார்கள். ஆனால், வேத காலங்களில் தோன்றாத நவீன பைக்குகளையும், கார்களையும் கூச்சநாச்சமின்றி பயன்படுத்து கிறார்கள். இந்து மத சாஸ்திரம், கடல் தாண்டக் கூடாது என்றாலும், அதையும் மீறி விமானங்களில் ‘சாஸ்திரமாவது; புடலங்காயவது’ என்று கருதி பறக் கின்றனர். இந்த இரட்டை வாழ்க்கையை சுட்டிக் காட்டினால், ‘இந்து விரோதி’, ‘பிராமண துவேஷி’ என்கிறார்கள்.

brahmin 340இப்போது, ‘புரோகிதம்’ கார்ப்பரேட் தொழிலாகவே மாறியிருக்கிறது. இது குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேடு (பிப்.27) விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. பல கோடி ரூபாய் முதலீட்டில் ‘ஹரிவரா’ என்ற கார்ப்பரேட் கம்பெனி ஒன்று இப்போது செயல்படத் தொடங்கி இருக்கிறதாம். இதன் நிறுவனரும் நிர்வாக அதிகாரியுமான அருண்குமார் சோமாஸ் கந்தன் என்பவர், பல கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கியுள்ள இந்த புரோகித கம்பெனியின் செயல்பாடுகளை விளக்கியிருக்கிறார். இந்த கம்பெனி யின் இணையதள தகவல் தொடர்புகளை கணினி வழியாக தொடர்பு கொண்டால், “பூஜை, யாகம், ஹோமம் உள்ளிட்ட 360 வைதீகச் சடங்குகளுக்கான பூஜை பொருள்கள் உடனே வீடு வந்து சேரும். எந்த ஜாதிக்கு, எத்தகைய சடங்குகளை, எந்த புரோகித முறையில் நடத்த வேண்டும் என்ற தகவல்களையெல்லாம் ஆய்வு செய்து சேகரித்து வைத்துள்ளோம். அதற்கேற்றவாறு புரோகிதர்களையும் உடனே வீட்டுக்கு அனுப்பி வைப்போம். பூஜை சடங்குப் பொருள்களுக்கோ, புரோகிதர்களுக்கோ அலைந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். 3000 வேத புரோகிதர்கள் உலகம் முழுதும் எங்களது இணைப்பில் இருக்கிறார்கள். உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இந்த ‘புரோகித சேவை’ அங்கே கிடைக்கும். இதுவரை, முப்பதாயிரம் புரோகித சேவைகளை இந்தியா மற்றும் அமெரிக்கா, இலண்டன், மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல வெளிநாடு களுக்கும் வழங்கியிருக்கிறோம். இதற்கான ‘ஆப்ஸ்’ஸைப் பயன்படுத்தி, ‘ஆன்லைன்’ வழியாகப் பணம் கட்டினால் போதும்; சடங்குகளை முடித்து விடலாம். பல கோடி ரூபாய் முதலீட்டில் சென்னையை தலைமையக மாகக் கொண்டு இயங்கி வருகிறது” என்று அவர் பேட்டி அளித்துள்ளார்.

இணையதளம் வழியாகவே வெளி நாட்டில் வாழும் ‘வைதீகக் குடும்பங்களுக்கு’, ‘புரோகிதம்’ செய்யப்படு வதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

வாடகைக்கார், ஆட்டோக்களைக் கூட இப்போது ‘இணையம்’ வழியாக வீட்டுக்கு அழைக்கும் வசதிகள் வந்து விட்டன.

‘ஓலா’, ‘ஊபர்’ வாகனங்களை இணையம் வழியாக பதிவு செய்தால் அடுத்த சில நிமிடங்களில் வீட்டு முகவரியில் வந்து நிற்கின்றன. இந்த வாகனம் மனிதர்களை போக வேண்டிய இடங்களுக்கு கொண்டு போய் சேர்த்து, முறையான கட்டணத்தை வாடிக்கையாளர்களை ஏமாற்றாமல் வாங்குகின்றன. அதே போன்று இனி அர்ச்சகர்களும், புரோகித சடங்கு களும், பூஜை பொருள்களும் ‘ஆப்ஸ்’ வழியாக வீடுகளுக்கு வந்து சேரு வார்கள். ‘ஓலோ’, ‘ஊபர்’ நிறுவன வாகனங்கள் பயணிகளை ஏமாற்றாது கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு போய்ச் சேர வேண்டிய இடத்துக்குக் கொண்டு போய் சேர்க்கும். இதேபோல் வீடு தேடி வரும் புரோகிதமும், சடங்கு களும் மோட்சத்துக்கே கொண்டு போய் சேர்ப்பார்களா என்று யாரும் கேட்டு விடாதீர்கள். அப்படி ‘சொர்க்கத்துக்கு நேராக அனுப்பி வைத்தால்’ ‘கொலைகார புரோகிதம் ஒழிக’ என்ற கூச்சல்தான் கேட்கும்.

இப்போது புரோகிதம் ஒரு ‘பிசினஸ்’, அவ்வளவுதான்! இனி ‘ரோபோக்கள்’கூட பூணூல் போட்டுக் கொண்டு புரோகிதம் செய்யும் நிலை அடுத்து வரலாம். அதெல்லாம் வேதத்திலே இருக்கு துன்னு அப்போதும் மோடிகள் வெட்கமின்றி பேசுவார்கள்.

Pin It