சாமான்யர்கள் கூட, வி.ஏ.ஓ., என்றழைக்கும் கிராம நிர்வாக அதிகாரியின் பணி மிக மிக அத்தியாவசியமானதாகும். சாதி சான்றிதழ் - இருப்பிட சான்றிதழ் - வருமான சான்றிதழ் என்று ஏகப்பட்ட சான்றிதழுக்கு மக்கள் நாட வேண்டியது இவரைத்தான். பெயர்தான் கிராம நிர்வாக அதிகாரி. ஆனால் இவர்களில் பெரும்பாலோர் வாசம் கொள்வது நகரத்தில்தான். அந்த நகரத்தை நாடி ஓடி, இவரை தேடி ஒரு சான்றிதழ் பெறுவதற்கு பல நாட்கள் கூட அலைந்த அனுபவம் மக்களுக்கு உண்டு. கிராமங்களில் இவர்கள் பணியாற்றுவதற்காக கட்டப்பட்ட அலுவலகம் பயனின்றி பாழடைந்து கிடக்கும். இவ்வாறான இந்த அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது உயர்நீதிமன்றத் தீர்ப்பு. சென்னை ஐகோர்ட்டில் ஒருவர் தாக்கல் செய்த பொதுநலன் மனு மீதான தீர்ப்பில், நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:

"கிராமங்களில் வி.ஏ.ஓ.களும், ஆரம்ப சுகாதார மைய டாக்டர்களும் அவர்களுக்கு பணி அளிக்கப்பட்ட ஊரில் தங்கி பணியாற்றுவதில்லை. பட்டணங்களிலோ அல்லது மாவட்ட தலைநகரங்களிலோ இருந்து கொண்டே பணிகளை செய்கிறார்கள். என்றாவது ஒருநாள் தான் கிராமங்களுக்கு செல்கிறார்கள். கிராமத்தில் தங்கி இருக்காத வி.ஏ.ஓ.கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசு அறிவுறுத்தி வந்துள்ளது. ஆனால் அவர்களுக்கான கண்காணிப்பு அதிகாரிகளான மாவட்ட வருவாய் அதிகாரி, கோட்ட வருவாய் அதிகாரி, தாசில்தார் போன்றவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

அந்த அறிவுரைகளை இவர்கள் ஏன் அமல்படுத்துவதில்லை? அப் படி அமல்படுத்தாத இந்த அதிகாரிகள் மீது கலெக்டர் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? எனவே வி.ஏ.ஓ.கள் கிராமங்களில் தங்கியிருந்து வேலை செய்யவில்லை என்று புகார் வந்தால், அவர்கள் மீதும் கண்கா ணிப்பு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண் டும். இந்த உத்தரவின் நகல் மேற்கூறப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கு அனுப்பப் பட வேண்டும் என்று கூறியுள் ளனர். இனிமேலாவது கிராம நிர்வாக அதிகாரிகளை கிராமத்தில் பார்க்க முடியும்தானே!

-சூரியகுமாரன்

Pin It