கலைஞர் டிவிக்காக 200 கோடி கடனாக வாங்கப் பட்டது. அது முறையாக திரும்ப செலுத்தப்பட்டது. ஒரு நிர்வாகத்தின் எல்லா விஷயங்களுக்கும் பங்கு தாரர் பொறுப்பாக முடியாது' என்றெல்லாம் தனது மகள் கனிமொழி விஷயத்தில் திமுக தலைவர் கருணாநிதி கூறி வந்தார். ஆனால் அந்த 200 கோடி கடனாக பெற்றதல்ல; லஞ்சமாக பெற்றது என்று சி.பி.ஐ. அதிரடியாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர் கனிமொழி எம்.பி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் இருவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் டெல்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டிலும் பின்னர் டெல்லி ஐகோர்ட்டிலும் நிராகரிக்கப் பட்டதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத் தில் அப்பீல் செய்து இருந்தனர்.

கடந்த 13ம் தேதி அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், கலைஞர் தொலைக்காட்சிக்கு திருப்பி விடப்பட்ட ரூ.200 கோடி என்ன ஆனது என்று சி.பி.ஐ.க்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவர்கள் இருவருடைய ஜாமீன் மனுக்கள் மீதான பதிலை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யும்படியும் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றுக்கு 13 லைசென்சுகள் வழங் கப்பட்டதில் அரசு கருவூலத்துக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு குறித் தும், தனி கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும், அவர்கள் உத்தரவிட்டு இருந்தனர்.

பின்னர் வழக்கு விசாரணை 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட் டது.

இதற்கிடையில், கனிமொழி ஜாமீன் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.ஐ. சார்பில் 17 ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கலைஞர் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்ட ரூ.200 கோடி, கடன் தொகை அல்ல, லஞ்சப்பணம் தான். இந்த சதித்திட்டத்தில் கனி மொழி மற்றும் சரத்குமார் இருவ ருக்கும் முக்கிய பங்கு உண்டு என்று கூறியுள்ளதோடு, 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்குவது சரியாக இருக்காது. அவர்கள் விடுவிக்கப்பட்டால் சாட்சியங்களை திருத்துவதுடன் சாட்சிகளையும் கலைத்துவிடும் வாய்ப்பு உள்ளது என்றும் கலை ஞர் தொலைக்காட்சிக்கு வங்கி டெபாசிட் மூலம் ரூ.200 கோடி வழங்கப்பட்டு உள்ளது என்றும் சி.பி.ஐ. கூறியுள்ளது. சி.பி.ஐ.யின் இந்த மனு மூலம், கனிமொழி பங்குதாரராக உள்ள கலைஞர் டிவிக்கு 200 கோடி லஞ் சம் வழங்கப்பட்டுள்ளது தெரிகி றது. இப்பவே கண்ணைக் கட் டுதே! இன்னும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழகின் முழு ஊழலும் வெளியா னால் என்னாகுமோ?

- தரசை தென்றல்

Pin It