மோடி ஆட்சி இஸ்ரேலை ஆதரிப்பது ஏன் (5)
1968-ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட நிக்சன், ஹம்ப்ரி இருவருமே யூதர்களின் ஆதரவுக்கு வலைவீசினார்கள். தேர்தல் செலவுக்குப் பெருந்தொகையை யூதர்களிடமிருந்து பெறுவதே இதன் நோக்கம். ஹம்ப்ரிக்குத்தான் யூதர்கள் ஆதரவு கிடைத்தது. 85 சதவீத யூதர்களின் வாக்கு ஹம்ப்ரிக்குக் கிடைத்தும், அவரால் வெற்றி பெற முடியவில்லை! நிக்சன் வெற்றி பெற்றுவிட்டார். அரபு - இஸ்ரேல் பிரச்சனைக்கு நியாயமான முறையில் அமைதித் தீர்வு ஒன்றை உருவாக்க விரும்பி, 1967-க்குப் பிறகு இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளை, அரபு நாடுகளிடம் திரும்ப ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கினார். யூதர்கள் நிக்சனை மிரட்டத் துவங்கினர். யூத அமைப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரட்டி, வலிமையான போராட்டங்களில் இறங்கின. எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாமல் நிக்சன் திணறினார். 1970 மார்ச்சில் - பிரான்ஸ்அதிபர் அமெரிக்கா வந்தபோது, அவரது அரபு ஆதரவுக் கொள்கைகளை எதிர்த்து யூத அமைப்புகள் போராட்டம் நடத்தின. அமெரிக்க - பிரான்ஸ்உறவு சீர்குலைந்து விடக்கூடாது என்பதற்காக, பிரான்ஸ்அதிபரிடம் நிக்சன் மன்னிப்புக் கோரினார். இதற்காக யூதப் பத்திரிகைகள், நிக்சனைக் கடுமையாகக் கண்டித்து எழுதின. இந்த நிலையில் இஸ்ரேலுக்குப் போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்களை விற்க வேண்டும் என்று 71 செனட் உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அதிபருக்குக் கடிதம் எழுதினர். அமெரிக்க செனட்டும் இதை ஆதரித்தது. எல்லோரையும் சரிக்கட்டும் முயற்சிகளில் யூதர்கள் இறங்கினர் இறுதியில் நிக்சனும் பணிந்தார். அப்போது, அமெரிக்காவில் இஸ்ரேலின் தூதராக இருந்த இட்ஷாக் ராபின் என்ற யூதர், வாஷிங்டனிலிருந்து ஒலிபரப்பாகும் இஸ்ரேல் வானொலியில் இவ்வாறு பேசினார்:
‘நிக்சனின் வெற்றிக்கு நான் ஆதரவாக இருந்தேன். எனவே, என்னுடைய இஸ்ரேல் நாட்டுக்கு உதவிகளைச் செய்ய வேண்டியது அவரது கடமை” என்று வெளிப்படையாகப் பேசினார். எந்த ஒரு நாட்டின் தூதரும் பேசக்கூடாத - மரபுகளை மீறிய முறைகேடான பேச்சு இது. எந்த நாடும் இதை அனுமதிக்காது. ஆனால், அமெரிக்கா அனுமதித்தது. அதன் பிறகு நிக்சன் - இஸ்ரேலின் செல்லப் பிள்ளையானார். வெள்ளை மாளிகையில் ஆட்சி செய்த அதிபர்களிலேயே மிகச் சிறந்தவர் நிக்சன்தான் என்று இஸ்ரேலியத் தூதர் புகழாரம் சூட்டினார். ரஷ்ய நாட்டுக்குப் பயணம் செய்த நிக்சன், ஒவ்வொரு ஆண்டும் 35,000 யூதர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ததோடு, சோவியத் யூதர்களின் இஸ்ரேல் குடியேற்றத்துக்கு 85 மில்லியன் டாலர் அமெரிக்க நிதி உதவி செய்யவும் முடிவெடுத்தார்.
1974-ல் வாட்டர் கேட் ஊழலில் சிக்கி நிக்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து, துணை அதிபராக இருந்த ஃபோர்டு அதிபரானார். அப்போது - அய்.நா. பொது மன்றத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத் பேச அழைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நியூயார்க்கில் 65,000 யூதர்கள் திரண்டு, அய்.நா. மன்றத்தை முற்றுகையிட்டனர். அராபத்தைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கும் சுவரொட்டிகளை ஒட்டினர். அராபத்தைக் கிரிமினல் - கொலைகாரன் என்று அந்தச் சுவரொட்டிகள் வர்ணித்தன. அராபத்தை அழைத்துப் பேசச் செய்ததற்காக, அய்.நா.வை அமெரிக்கா புறக்கணிக்க வேண்டும் என்று, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் - யூதர்களின் குரலை ஒலிக்கத் தொடங்கினர். அதன் பிறகு ஃபோர்டும் - அய்.நா.வைக் கண்டித்தார். அவரது ஆட்சியில், முக்கிய தலைமை அதிகாரிகளாக இருந்த ஹென்றி கிசிங்கர், ஆர்தர் பர்னஸ், ஜேம்ஸ்ஸ்கெல்கிங்கர், ஆலன் கிரீஸ்பென் ஆகிய அனைவருமே யூதர்கள்தான். நீதித்துறை, சுகாதாரம், கல்வி, தொழிலாளர் நலன், சமூக நலம் ஆகிய முக்கிய அரசுத்துறைகளின் தலைமை அதிகாரிகளாக இருப்பவர்கள் இப்போதும் யூதர்களே!
1976 நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஃபோர்டு, ஜிம்மி கார்ட்டர் ஆகிய இருவருமே, தேர்தல் நிதிக்காக யூதர்களை நாடினர். (அதிகாரபூர்வமாக செலவிடுவதற்கு அனுமதிக்கப்படும் தொகையை விட பல மடங்கு அங்கே செல விடப்படுகிறது). அட்லாண்டாவில் 100 யூதர்களை அழைத்துப் பேசினார் கார்ட்டர். இஸ்ரேலுக்குத் தனது ஆதரவைத் தருவதாக உறுதி கூறினார். வெற்றி பெற்ற கார்ட்டர் - தீவிர இஸ்ரேல் ஆதரவாளராகவே செயல்பட்டார்.
கார்ட்டர் நிர்வாகம் - இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டதற்கு ஓர் உதாரணத்தை எடுத்துக் காட்டலாம். தென்னாப்பிரிக்க அரசு, கருப்பின மாணவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, 48 அரபு மற்றும் கருப்பு ஆப்பிரிக்க நாடுகள் ஒரு கூட்டத்தைக் கூட்டின! இஸ்ரேல், தென்னாப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளைத் தவிர அய்.நா. உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன! இஸ்ரேல் நாட்டுக்கு அழைப்பு அனுப்பப்படாத இந்தக் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று யூதர்கள் மிரட்டியதால், அமெரிக்கா, இந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தது. அமெரிக்காவின் இனவெறி எதிர்ப்பு கூட - இஸ்ரேலுக்கு அடிபணிந்ததுதான்.
உலகம் முழுவதும் வாழும் யூதர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 44 லட்சம். இதில் அமெரிக்காவில் வாழும் யூதர்கள் மட்டும் 61 லட்சத்து 55 ஆயிரம். இதில் நியூயார்க் நகரில் வாழ்வோர் மட்டும் 17 லட்சத்து 50 ஆயிரம்.
12 கோடியே 50 லட்சம் அரபு மக்கள் உலகம் முழுதும் வாழ்கிறார்கள் எண்ணிக்கையில் இஸ்ரேலியர்களை விடப் பன்மடங்கு அதிகம். அய்.நா.வில் அரபு நாடுகளுக்கு சுமார் 13 வாக்குகள் உண்டு. இருந்தும் கூட யூதர்கள் பக்கமே அமெரிக்கா உட்பட ஆதிக்க நாடுகள் நிற்பது ஏன்?
இந்தியாவின் பார்ப்பனர்களைப் போலவே யூதர்களும் - வலிமையான ஆதிக்க சக்திகள். இஸ்ரேலுக்கு எதிரான எந்த ஒரு சிறு நடவடிக்கையையும் அவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. உடனே கண்டனத்தைப் பதிவு செய்து விடுகிறார்கள். இந்தியப் பார்ப்பனர்களைப் போலவே, கண்டனத் தந்திகளையும் கடிதங்களையும் அனுப்பி விடுவார்கள். பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டவர்கள்.
பத்திரிகைகள் - யூதர்களின் குரலையே ஒலிக்கின்றன. உண்மைகளைத் திரித்தும், கற்பனைக் கதைகளை உருவாக்கியும் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டு, மக்கள் கருத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வதில் யூதர்கள் வல்லவர்கள். யூதர்கள் மீது அனுதாபத்தை உருவாக்கும் செய்திகளைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதுதான் அமெரிக்க - அய்ரோப்பியத் தொலைக்காட்சிகள் - பத்திரிகைகளின் வழக்கம்.
அமெரிக்கப் பத்திரிகைகள், தகவல் தொடர்பு சாதனங்களில் - யூதர்களின் முதலீடு அதிகம். அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும், தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட வைப்பதற்கு, பணத்தை அள்ளி வீசவும், கருத்துருவாக்கம் செய்யவும் யூத அமைப்புகள் முழு நேரப் பிரதிநிதிகளை நியமித்து செயல்பட்டு வருகின்றன. மத்தியக் கிழக்கு நாடுகள் தொடர்பான அரசு மையங்கள் - யூதர்களின் ஆதிக்கத்திலே செயல்படுகின்றன. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் - மத்தியக் கிழக்குப் பிரச்சனை - இஸ்லாமிய நாடுகள் பிரச்சனை பற்றிய துறைகளையும் - யூதர்களே கைப்பற்றியுள்ளனர்.
அமெரிக்காவில் செல்வாக்குள்ள பத்திரிகை நியூயார்க் டைம்ஸ் இது, உலகம் முழுதும் 70 செய்தி ஏடுகளுக்கு செய்திகளைத் தரும் நிறுவனம். அந்நிறுவனம், யூதர்களின் ஊது குழலாகவே செயல்பட்டு வருகிறது. ‘எங்களுடைய வலிமையான பணப்பெட்டியின் முன், இந்த தேசத்தைச் சரணடைய வைப்போம்” என்று ஆணவத்தோடு எழுதியிருக்கிறார் யூத எழுத்தாளர் ஹெர்ஸ்ல்!
அமெரிக்க செல்வந்தர்களில் முன் வரிசையில் இருப்பவர்கள் யூதர்கள்தான். லிண்டன் பி. ஜான்சன் குழுமம், தொலைக்காட்சித் தொழிலில் முன்னணியில் இருக்கிறது. மற்றொரு செல்வந்தரான ஜான்சன், வாஷிங்டனிலும் அலபாமாவிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர். பேரி கோல்ட் வாட்டர் சகோதரர்கள் - பல்பொருள் அங்காடிகளை அரிசோனாவில் நடத்துகிறார்கள். உலகிலேயே பெரும் செல்வந்தராகத் திகழ்பவர் நெல்சன் ராக்பெல்லர். இவருக்கு உரிமையானதுதான் ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனி.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் - சட்டத்துக்குப் புறம்பாகச் செலவிடும் பெரும் தொகைக்கு - யூதர்களையே எதிர்பார்த்திருப்பதால் - அவர்கள் அரசியலை ஆட்டிப் படைக்கிறார்கள்.
இந்தியாவில் பார்ப்பனர்கள் - ஆட்சி அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்திருப்பது போல் அமெரிக்காவில் யூதர்கள் - செயல்படுகிறார்கள். இங்கே, பார்ப்பனர்களுக்கு பணபலம் பனியாக்கள்! அங்கே, யூதர்களே பணபலம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்! சியோனிசம் - பார்ப்பனியம் - இந்துத்துவா - இவை ஒரே நேர்க்கோட்டிலேயே தங்கள் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றன!
(குறிப்பு: மேலும் தகவல்களுக்கு: முஹம்மது சித்திக் குரேஷி எழுதிய ‘ZIONIAM AND RACISM”).
(நிறைவு)
- விடுதலை இராசேந்திரன்