வயலூர் முருகன் கோவிலில், அனைத்து ஜாதி அர்ச்சகர் பணி நியமன ஆணை பெற்ற அர்ச்சகர்களை கருவரைக்குள் நுழைய விடாமல் தடுக்கும் பார்ப்பன அர்ச்சகர்களைக் கண்டித்தும், மதுரை உயர்நீதிமன்றத்தில் அனைத்து ஜாதி அர்ச்சகருக்கு எதிராக பார்ப்பன அர்ச்சகரின் மகன் தொடர்ந்த வழக்கில் நியாயமான தீர்ப்பை கோரியும், சிம்சன் பெரியார் சிலை அருகில், 23.11.2022 மாலை 3:30 மணியளவில் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.dvk agitation against brahminsஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களுக்குப் பேடியளித்த மாவட்ட செயலாளர் இரா.உமாபதி கூறுகையில், “பெரியாரின் நெஞ்சில் தந்தை முள்ளான, அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டத்திற்கு பணி நியமனத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியது 2000 ஆண்டு கருவரைத் தீண்டாமையை உடைத்தது. இருந்தாலும், சில இடங்களில் பார்ப்பன அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி அர்ச்சர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். மேலும், பார்ப்பன அர்ச்சகரின் மகன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வழக்கே நியாமானது இல்லை. நாளை வரும் தீர்ப்பு அனைத்து ஜாதி அர்ச்சகர்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் தமிழ்நாடு தழுவிய போராட்டம் தொடரும். தொடர்ந்து பார்ப்பன ஆர்ச்சகர்களின் இந்த அடாவடிப் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த்தேச மக்கள் முன்னணி செந்தில் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை : வயலூர் முருகன் கோவிலில் நியமிக்கப்பட்ட அர்ச்சகத் தமிழர்களை வெளியேற்ற சதி செய்யும் ஆர்.எஸ்.எஸ். பாஜக பார்ப்பன கும்பலைக் கண்டித்து மதுரையில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 23.11.2022 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மதுரை மாவட்ட செயலாளர் மணிஅமுதன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன், தங்க பாண்டி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செய லாளர் ஆதவன், மாநில பொறுப்பாளர் தலித் ராஜா, மே 17 இயக்கம் சரவணன், மக்கள் சட்ட உரிமைப் பாதுகாப்பு இயக்கம், அண்ணாத் துரை, விடுதலை சிறுத்தைகள் கல்மேடு பொறுப்பாளர் மணிவேல், தபெதிக மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழ் பித்தன், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் பவுலி, அருந்ததிய ஜனநாயக இயக்கம் மற்றும் பல்வேறு தோழமை அமைப்புத் தோழர்கள் பங்கேற்றனர்.

Pin It